Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2013,23:56 IST
கருத்துகள் (7)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் தேர்வு:கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.


இரண்டாவது தேர்வில் ஆறுதல்:இதன் காரணமாக, தேர்ச்சி, 3 சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்வு எப்போது?எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள்நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன்,

Advertisement

அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்' என, தெரிவித்தன.

மாணவர்களுக்கு பாதிப்பு:இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேர வசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால்,கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
18-ஏப்-201310:34:21 IST Report Abuse
mirudan அரசு பள்ளிகளை மூடி விட்டு தனியார் பள்ளிகளின் செலவுகளை அரசே ஏற்று நடத்தினால் தேவை இல்லதா செலவுகள் ஆவது குறையும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
14-ஏப்-201317:56:53 IST Report Abuse
R.சுதாகர் எல்லா தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் பத்து சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர் என்று வைத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 90 விழுக்காடு தேர்வு எழுதுபவர்களின் நிலை என்ன? B.Sc போன்ற பொதுவான படிப்பு படித்தவர்கள் வேறு எந்த வேலைக்கும் சென்று விடலாம் ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு படித்தவர்கள் ஆசிரியர் வேலைக்கு மட்டுமே செல்ல முடியும். எனவே அரசு மீதம் உள்ள 90 விழுக்காடு மக்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மிக சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டு மே மாதம் முதற்கொண்டு சக்கையைப் பிழிந்து எடுக்கப்படும் இவர்கள் படும் சிரமங்கள் கொஞ்சமல்ல. பொறியியல் கல்லூரிகளுக்கு வரைமுறை இல்லாமல் அனுமதி வழங்கி பொறியியல் கல்வியின் மதிப்பையே சீர்குலைத்தது போல் ஆசிரியர் பயிற்சியும் ஆகும் முன்னர் அரசு கூடியவரையிலும் தேவையில்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
PRAKASH - Salem,இந்தியா
14-ஏப்-201314:49:01 IST Report Abuse
PRAKASH பெறுமைக்காகத்தான் தனியார் பள்ளிகலில் குழந்தைகளை படிக்கவைக்கிறார்கள் ஆனால் சுதந்திரமான மற்றும் சிறந்த கல்வி அரசுப் பள்ளிகலில் தான் கிடைக்கிறது. SENTHIL KUMAR. P.G. Assistant in zoology.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
N.KALIRAJ - vaniyambadi,இந்தியா
14-ஏப்-201313:31:05 IST Report Abuse
N.KALIRAJ நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாலாறு திங்களாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.....இதுதானய்யா இன்றைய தேர்வர்களின் நிலைமை....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
14-ஏப்-201311:56:28 IST Report Abuse
K.Sugavanam கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கொடுங்க.இப்பதான் ஏற்கனவே தெரிந்தெடுத்த ஆசிரியர்கள் நியமன் குளறுபடிகள் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிகிட்டு இருக்கு,அதுக்குள்ளே..பொறுங்க..நடக்கும்..புது அய்யாவும் ஆசுவாச படுத்திகிட்டு வரணுமே..
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201310:45:55 IST Report Abuse
Srinivasan Kannaiya மௌனத்தின் விலை என்ன theriyaliye
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
14-ஏப்-201310:11:43 IST Report Abuse
Hari Doss இப்போது தான் மக்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில்லையே. பின் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதைப் பற்றிக் கவலையடைய வேண்டியதில்லை. அரசு பள்ளிகளில் பனி புரியும் ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் செர்ப்பதில்லையே இந்த வெட்கக் கேட்டை யாரிடம் பொய் சொல்வது என்று தெரிய வில்லையே அரசிடம் கை நீட்டி சம்பளம் பெற்றும் தன குழந்தைகளைக் கூட அரசுப் பள்ளியில் சேர்க்காத ஆசிரியர்களைப் பற்றி என்ன சொல்வது
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.