DMK youth wing angry | 60 வயது நடிகரின் வசனத்தை நீக்க தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

60 வயது நடிகரின் வசனத்தை நீக்க தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி

Added : ஏப் 13, 2013 | கருத்துகள் (91)
Advertisement
60 வயது நடிகரின் வசனத்தை  நீக்க தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி

அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன் இயக்கிய "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., (அமைதிப்படை 2)' என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை நீக்க வேண்டும் என, வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்க, இம்மாதம், 27ம் தேதி, திருச்சியில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக கூடுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மகளிர் அணி தலைவர்:

சில ஆண்டுகளுக்கு முன், "அமைதிப்படை' படத்தில், அரசியல்வாதிகளின் இன்னொரு முகம், தோலுரித்து காட்டப்பட்டது; அப்படம் வெற்றி பெற்றது. தற்போது "அமைதிப்படை' 2ம் பாகமாக, "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,' என்ற படத்தை மணிவண்ணன் இயக்குகிறார்.இப்படத்தின் ஒரு காட்சியில், மகளிர் அணி தலைவர் பதவியை நாகராஜசோழன் ஏற்கிறார்.அதற்கு, "ஆம்பளையான நீங்கள் எப்படி, மகளிர் அணி தலைவராக பதவி ஏற்கலாம்' என்ற கேள்வியை கேட்கும் இளைஞர் ஒருவரிடம், அவர் தனக்கே உரிய லொள்ளு நடிப்பில், "60 வயது கிழவனெல்லாம், இளைஞரணி தலைவராக இருக்கும்போது, நான் மகளிர் அணி தலைவராக இருக்கக் கூடாதா?' என, எதிர்கேள்வி கேட்பது போன்ற காட்சி, அப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.இளைஞரணியின் மாநில செயலர் பதவியில், தற்போது ஸ்டாலின் நீடிக்கிறார்.


கொந்தளிப்பு:

தி.மு.க.,வின் அடுத்த தலைவர் பதவி, ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால், தன் இளைஞர் அணி செயலர் பதவியை, தன் மகன் உதயநிதிக்கு விட்டுக் கொடுக்க, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார் என, கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், நையாண்டியாக வசனம் பேசும் காட்சி, "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,' என்ற படத்தில் இடம் பெற்றிருப்பது, தி.மு.க., இளைஞர் அணியினர் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


"ஸ்மார்ட் கார்டு':

இதுகுறித்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க.,வுக்கு, இளைஞர் அணி தான் பக்கபலமாக உள்ளது. இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்ய, இரவு பகலாக நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை, ஸ்டாலின் தேர்வு செய்தார். தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில், தி.மு.க., இளைஞரணி மாநாட்டை, கட்சி மாநாடுக்கு இணையாக நடத்தினார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, இளைஞரணி மாநாட்டை நடத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க., உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட, "ஸ்மார்ட் கார்டு' போலவே, இளைஞரணி உறுப்பினர்களுக்கும், "ஸ்மார்ட் கார்டு'கள் வழங்க, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.இப்படி, கட்சியின் உயிரோட்டமாக, இளைஞர் அணியை உருவாக்கி வைத்துள்ள ஸ்டாலினை, கேலி செய்யும் வகையில், வசனம் பேசியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.


60 வயதாகி விட்ட நடிகர்:

பேரன், பேத்தி எடுத்து, 60 வயதாகி விட்ட நடிகர் மட்டும், இளம் ஹீரோயின்களுடன் சேர்ந்து ஹீரோவாக நடிக்கலாமா? ஸ்டாலின் இளைஞரணி தலைவர் பதவியை வைத்துள்ளார் என்பதை மறைமுகமாக குறிப்பிடும் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், படம் ஓடுகிற தியேட்டர் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதுகுறித்து ஆலோசிக்க, இம்மாதம், 27ம் தேதி, திருச்சியில், ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. இயக்குநர் மணிவண்ணன் மற்றும் நடிகருக்கு எதிராக, தி.மு.க., இளைஞரணியினர், தீவிர போராட்டம் நடத்தவும் தயாராகவுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idi-amin Palin - Nashville,பெர்முடா
19-ஏப்-201302:13:35 IST Report Abuse
Idi-amin Palin இந்த சினிமா-வை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என இருகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
16-ஏப்-201323:28:50 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi .நாட்டில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.ஒன்றுமே இல்லாத விடயத்தை கூட ஒரு செய்தியாக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
16-ஏப்-201313:01:19 IST Report Abuse
LAX உள்ளதைச் சொன்னால் உடம்பு எரிகிறதா? இந்த படத்தில் வரும் வசனம் லொள்ளு வசனம் இல்லை. இதே கருத்தைத்தான் நானும் பலமுறை தெரிவித்து வருகிறேன். ஏன், திமுகவில் இருக்கும் பலரும் சொல்லமுடியாமல் தவிக்கும் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். அதனால், டைரக்டர் மணிவண்ணன் என்ன எதிர்ப்பு வந்தாலும், தனக்கே உரிய பாணியில் படத்தை எடுத்து வெளியிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
15-ஏப்-201310:07:24 IST Report Abuse
Rangarajan Pg தற்போது சினிமா உலகம் இந்த அரசியல்வாதிகள் கையிலும் சமூக ஆர்வலர்கள் கையிலும் மாட்டி கொண்டு படும் பாடு மிக மிக ரசிக்க வைக்கிறது. இப்படி அலை கழித்தால் தான் இந்த திரை உலகம் அழியும். சினிமா எடுக்கிறோம் பேர்வழி என்று இந்த சமூகத்தையும் இளைய சமுதாயத்தையும் கெடுத்ததை தவிர வேறு என்னத்தை சாதித்தது இந்த திரை உலகம்? இப்படியே அலைகழியுங்கள் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களே, ஒருத்தனும் திரை படம் எடுக்கிறேன் என்று இனி வர கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா
14-ஏப்-201317:10:37 IST Report Abuse
Venkatapathy Perumalsamy கலைஜேர் இளைஜெர் அணி தலைவர் ஆக்கினால் தான் என்ன பைத்தியங்கள் பின்னால் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
14-ஏப்-201317:00:17 IST Report Abuse
நீலகண்டன் வினை விதித்தார் வினை அறுக்கிறார், இவர் வசனத்தில் (விஷத்தில்) எத்தனை சினிமாக்கள் எடுத்து அதில் உள்ள சில கதாபாத்திரத்தை விமர்சனம் செய்தார் ஏன் என்று கேட்டால் பகுத்தறிவு பேசுவார் இவரின் சாயம் வெளுத்து ரொம்ப நாட்கள் ஆகிறது சினிமாவில் வரும் வசனம் உண்மை தானே எதற்கு கோப பட வேண்டும் சமீபத்தில் இவரின் 60 அகவை கொண்டாடினார்களே பிரமாண்டமாக பூஜைகள் செய்து, மஞ்சள் குங்குமம், தாலி அணிந்து கொண்டார்களே அப்போது எங்கே சென்றது இந்த பகுத்தறிவு. ஒரு வேலை இது தான் பகுத்தறிவோ? 60 வயது முதியவர் இளைஞர் அணி தலைவர். கட்சியில் மற்றவர் இல்லையோ குடும்ப உறுப்பினர் மட்டும் தான் தலைவர் பதவிக்கு தகுதி ஆனவர்களோ?... இப்போது கேட்க தோன்றுகிறது.... தகுதி உடையவர்களுக்கு பதவி தர தி மு க என்ன சாமியார் மடம் இல்லை தானே
Rate this:
Share this comment
Cancel
Friend - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-201316:48:42 IST Report Abuse
Friend பேசாம கார்டூன் படம் எடுங்கப்பா அப்போதான் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க குழந்தைகள் பார்த்துவிட்டு சிரித்து விட்டு பாப் கார்ன் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள் பிரச்சினையே கிடையாது.உள்ளதை சொன்னால் ஏன் உடம்பெரிச்சல்?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
14-ஏப்-201316:47:05 IST Report Abuse
Natarajan Iyer ஸ்டாலினை இளைய சூரியனே என்று விளிப்பவர்கள் கருணாநிதியை ஏன் மூத்த சூரியனே என்றோ கிழட்டு சூரியனே என்றோ விளிப்பதில்லை? (ஊரார்நிதி பிஞ்சு சூரியனா?) என்ன கொடுமை... கிழம் செத்து தான் தலைவரானால் மகனை இளைஞர் அணி தலைவராக ஆக்குவாராம். மற்றவர்கள் எல்லாம் விரல் சூப்ப வேண்டியதுதானா?
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
14-ஏப்-201316:28:48 IST Report Abuse
Peria Samy மணிவண்ணனின் நையாண்டியைக் கேட்டு கொந்தளிக்க வேண்டாம் நண்பர்களே.ஒருநிமிடம் சிந்தியுங்கள் .மணி ஏதாவது தவறாகச் சொல்கிறாரா என்று.ஏன் தி.மு.க.வில் அந்தப் பொறுப்பை ஏற்க தகுதியுள்ள இளைஞர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டதா? சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.அதை விடுத்து போர்க்களம் போராட்டம் என்று இறங்கினால் நடுநிலையாளர்களின் நகைப்புப் பொருள் ஆகிவிடுவீர்கள்.வயதிலும் அறிவிலும் முதியார்,வாய்மைப் போருக்கு என்றும் இளையார் உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்ற வரிகள் ஈ.வெ.ரா.வுக்குமட்டுமே பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
Elangovan Govindasamy - Jacksonville,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201315:49:43 IST Report Abuse
Elangovan Govindasamy போராட்டம் பைத்தியங்கள் நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு இவர்கள் கொழுத்து போய் திரிகிறார்கள். எதற்குத்தான் போராட்டம் என்று ஒரு விவஸ்தை இல்லையா?போராட்ட காரர்களை போலீஸ் தடிகொண்டு இனிபோராடாதவிதமாக நன்றாக கவனிக்கவேண்டும் மணிவண்ணன் சார் இவர்களுக்கு எல்லாம் பயப்படாதீர்கள் அரசு துணை நிற்கும் உங்கள் படங்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை