Ministers inspect at night | வறட்சியை இரவில் பார்வையிட்ட குழு: விவசாயிகள் கலக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியை இரவில் பார்வையிட்ட குழு: விவசாயிகள் கலக்கம்

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (15)
Advertisement
வறட்சியை இரவில் பார்வையிட்ட குழு: விவசாயிகள் கலக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு நேரத்தில், வறட்சியை உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டதால், "வறட்சி குறித்து முழு விவரங்கள் அறிய முடியாத நிலை ஏற்படும்' என, விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், சென்னை மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதில், டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.இந்நிலையில், மற்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள, வறட்சி குறித்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான, ஆறு அமைச்சர்கள் கொண்ட உயர்மட்ட குழு, ஆய்வு நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாக்களில், அமைச்சர்கள் குழுவின் ஆய்வு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், பல்வேறு காரணங்களால், அமைச்சர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருவது தாமதமானது. இதனால், குழுவினர் பார்வையிட ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இடங்களில், மின்வாரிய ஊழியர்கள் மூலம், மின்விளக்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இரவு, 8:20 மணிக்கு, அமைச்சர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்தனர். அரசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.தொடர்ந்து, தாதம்பட்டியில் காய்ந்து போன கரும்பு தோட்டம், பாரண்டப் பள்ளியில் தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்பு, அத்தீவீரன்பட்டியில் மஞ்சள் வயல், புதுக்காட்டில், மல்பரி தோட்டங்களில் அமைச்சர்கள் குழுவினர், ஒரு சில நிமிடங்களில் ஆய்வு செய்தனர்.அமைச்சர்கள் குழுவினர் ஆய்வுக்கு சென்ற இடங்களில் விவசாயிகளை பார்க்க முடியவில்லை. மாறாக, அனைத்து இடங்களிலும், கட்சிக்காரர்கள் மட்டுமே இருந்தனர். இரவு, 10:00 மணிக்கு ஊத்தங்கரை சென்றனர்.அமைச்சர்கள் குழு இரவு நேரத்தில் பெயர் அளவுக்கு ஆய்வு செய்ததால், விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sham - Ct muththur,இந்தியா
16-ஏப்-201313:43:42 IST Report Abuse
Sham என்ன கொடுமையிது.... வறட்சியால் பதிக்கப்பட்ட அப்பாவி விவசாயிகள் மீது, சிறிதாவது அக்கறையோ., மனிதாபிமானமோ இருந்திருந்தால்... இப்படி பேருக்கு நானும் பார்த்தேனென்று.,
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
14-ஏப்-201316:03:32 IST Report Abuse
amukkusaamy எங்க வூட்டுக்கரரும் கச்சேரிக்கு போறாரு....ஊருக்கு இளைச்சவன் விவசாயி தான்.
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
14-ஏப்-201314:30:38 IST Report Abuse
Chenduraan இவர்களுக்கு பகலில் பார்த்தாலும் இரவில் பார்த்தாலும் ஒன்று போலத்தான் தெரியும் (ஏன் என்றால் ஒன்றும் தெரியாது), இவர்கள் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? ஒரு காரியத்துக்கு ஒரு ஆளை நியமித்தால் அவர் அந்த துறையில் நுணுக்கம் உடையவராக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201312:01:47 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இரவு, பகல் என்று பார்க்காமல் மக்களுக்கு உழைப்பது என்பது இதுதான். இரவாய் இருந்தால் என்ன இருட்டாய் இருந்தால் என்ன.... எங்களின் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியாது. இரவு வண்டுகளின் ரீங்காரமும், நரிகளின் ஊளையையும் வைத்தே நாங்கள் கணக்கெடுத்துவிடுவோம் என்ன பகல் சாப்பாட்டுக்கே 60, 70 ஆயிரம் செலவாகின்றது. இரவு சாப்பாடு என்றால் ....... நகராட்சிகள் எப்படித்தான் இந்த செலவுகளை சமாளிக்கபோகின்றதோ?
Rate this:
Share this comment
Cancel
vanaraja - Cumbum,இந்தியா
14-ஏப்-201310:39:35 IST Report Abuse
vanaraja உண்மையில் அரசு அதிகாரிகள் தான் பார்வை செய்யவேண்டும். கட்சிக்காரன் பார்த்து என்ன செய்வான்? நிலத்தை வளைச்சு போடுவான். மிரட்டி பத்திரம் பதிஞ்சு தரசொல்வான்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஏப்-201309:31:09 IST Report Abuse
kumaresan.m " ஒரு தடவை இன்ப சுற்றுலா மற்றும் இந்த தடவை இரவில் ஆய்வு ...அஹா உங்க பொது சேவையை நெனைச்சா அப்படியே புல்லரிக்குது போங்க " தமிழ் நாட்டில மின்சாரமே இல்ல இதில் இரவில் விளக்கு போட்டு ஆய்வு இப்படியே ஆய்வு போய்கிட்டு இருந்துனா ....இராவோடு ராவா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க பாத்துக்கோங்க சொல்லிபுட்டேன் "
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-ஏப்-201309:27:17 IST Report Abuse
R.BALAMURUGESAN ...இப்படி கடனுக்கு ஆய்வு செய்த அ(டி)மைச்சர்களை மேற்படி மேலிடம் ஒன்றும் கேட்காதா???... அதுசரி மேலிடத்துக்கு இதுபற்றி எல்லாமா கவலை, அக்கறை...
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-ஏப்-201309:22:32 IST Report Abuse
R.BALAMURUGESAN ...மின் வெட்டு இல்லாமல் இருந்தாலாவது, மின் விளக்கையாவது போட்டிருப்பார்கள்... ஆனால், ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, நமது அ(டி)மைச்சர்களுக்கு இருட்டிலும் நன்றாக கண் தெரியும் என்று... இருட்டில் இருந்து இருந்து பழகிவிட்டார்கள் போலும்... ஆதலால்தான், இருட்டு எது, பகல் எது என்றே தெரியாமல் இருக்கிறாகள்... அதில் நம்ம டீக்கடை பன்னீரு போட்டோவுக்கு போஸ் வேறு தருகிறார்... ஆஹா என்ன ஒரு அறிவு, புத்திசாலித்தனம்...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
14-ஏப்-201309:13:56 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பகலில் போனால் பொது மக்கள் பின்னி எடுத்து விடுவார்கள் என்று பயந்துதான் இரவில் போனார்களோ?
Rate this:
Share this comment
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
14-ஏப்-201308:47:58 IST Report Abuse
chandkec உங்களின் வேலை இத்துடன் முடிந்து விட்டதாக இருக்கவேண்டா, அரசுக்கு இப்போது தேவை ஒரு கடிவாளம் அல்லது இடிப்பு.மக்களின் நாட்டின் எதிர்காலம் கருதி இதை செய்ய தினமலர் yossikka வேண்டும்,,,சீக்கிரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை