போலீசார் என்னை சித்திரவதை செய்தனர்பயங்கரவாதி அபுஜுண்டால் சாட்சியம்| Dinamalar

போலீசார் என்னை சித்திரவதை செய்தனர்பயங்கரவாதி அபுஜுண்டால் சாட்சியம்

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, அபு ஜுண்டால், போலீசார், தன்னை சித்திரவதை படுத்தியதாக, கோர்ட்டில் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், 2008ல், கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி, முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேர், உயிரிழந்தனர்.


இந்த தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டிய, பயங்கரவாதி, அபு ஜுண்டால், சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத் தப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜுண்டால், விசாரணைக் காக, சிறப்பு கோர்ட்டில், நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டான்.அப்போது, ஜுண்டால் சார்பில், கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:


சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டபின்,டில்லி போலீசார், என்னை காவலில் எடுத்து விசாரித்தனர்.அப்போது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், என்னை துன்புறுத்தினர். மின்சார ஷாக் கொடுத்து, சித்திரவதை செய்தனர்.இவ்வாறு, அந்த மனுவில், ஜுண்டால் கூறியிருந்தான். இதனால், கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


பாக்.,கில் சாட்சியம்: இதற்கிடையே, மும்பை தாக்குதல் குறித்து, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள, பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர்ட்டிலும், விசாரணை நடந்து வருகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
14-ஏப்-201312:31:34 IST Report Abuse
Nagarajan, Panagudi குற்றங்கள் உறுதி செய்யபட்ட பின்னர் தீவிவாதிகளுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் கோடி பணம் செலவு கணக்கு காட்டாமல் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க பட வேண்டும். மரண தண்டனை இல்லாமல் போனால் தீவிரவாதம் / தீவிரவாதிகள் பெருகி நாட்டின் அமைதி சீர்குலைந்து விடும் உதாரனமாக குவைத் நாட்டில் மரண தண்டனை இல்லை என்றதும் கடந்த ஆண்டுகளில் குற்றங்க்கள் பெருகிவிட்ட நிலையில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றபட்டிருக்கிறது செய்திதாள்கள் மூலமாக தெரிந்த விசயமே.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஏப்-201311:33:56 IST Report Abuse
Pugazh V ஆழ்ந்து சிந்தித்து விரைந்து துரித முடிவெடுக்கும் ஜனாபதி இருக்கிறார். இனி காவல் துறையும் நீதித் துறையும் வேகமான தீர்ப்புகள் சொல்ல முற்ப்படவேண்டும். அப்புறம் அந்தக் கயவர்களின் முடிவை ஜனாதிபதி பார்த்துக்கொள்வார்,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஏப்-201311:31:31 IST Report Abuse
Pugazh V 166 பேரின் மரணத்திர்க்குக் காரணமானவனை இன்னும் என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறது நீதி மன்றம். க்வாட்டரும், பிரியாணியும் இச்கறேட்டும் வாங்கித் தருவார்களா? கோர்ட்டிர்க்குக் கொண்டு வரும் வழியில் தப்பிக்க முயன்றான் சுட வேண்டிவந்தது என்று சொல்லிப் போட்டுத் தள்ளாமல் , கொஞ்சிக் கொண்டிருக்கிறார்களே.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
14-ஏப்-201308:17:47 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீ பண்ணின காரியத்துக்கு உன்னை தங்க தொட்டிலில் போட்டு உன் வாயில் பாதாம் அல்வா ஊட்டி விடுவாங்க....
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
14-ஏப்-201313:20:34 IST Report Abuse
Krishமாயூரம் கிருஷ்ணமூர்த்தி அவர்களே, மிக சரியாக சொன்னிர்கள். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை