Veteran playback singer PBS passes away | காலங்களில் அவ (ள்) ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலங்களில் அவ (ள்) ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (35)
Advertisement

சென்னை: ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்சங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் காலமானார். இவருக்கு வயது ( 82 ).
காலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போன‌ாளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில, இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.


"பாசமலர்"

ஆந்திர மாநிலம், பத்தளபொடியில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமா துறைக்கு வந்தவர். 1952ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல்படம் இந்தி படமாக அமைந்தது. தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை என் செல்வமே என்ற பாடலை பாடினார். "பாசமலர்" படத்தில் வந்த "யார் யார் யார் இவர் யாரோ..." , அதன்பின் "பாவ மன்னிப்பில்" - இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்... படப்பாடல் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார்.

காதல் மன்னன் :


தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜகுமாருக்கும் தான் அதிக பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது. இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் , இனிக்கும்.


தமிழ் சினிமாவில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் வருமாறு...

01. காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு


02. பொதிகை மலை உச்சியிலே - திருவிளையாடல்
03. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி
04. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி
05. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்
06. தென்னங்கீற்று ஊஞ்சலிலே - பாதை தெரியுது பார்
07. சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கை படகு
08. காத்திருந்‌த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை
09. காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
10. கண்படுமே கண்படுமே - காத்திருந்த கண்கள்
11. ஒரே ‌கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே - பனித்திரை
12. நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு
13. இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
14. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்
15. அழகிய மிதிலை நகரிலே - அன்னை
16. ஆண்டுறொன்று போனால் வயதொன்று போகும் - போலீஸ்காரன் மகள்
17. எந்த ஊர் என்றவனே - காட்டுரோஜா
18. என்னருகே நீ இருந்தால் - திருடாதே
19. காதல் நிலவே கண்‌மணி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
20. விஸ்வநாதன் வேலை வேண்டும் - காதலிக்க நேரமில்லை
21. அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை
22. உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா - காதலிக்க நேரமில்லை
23. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா -பச்சை விளக்கு
24. கண்ணிரண்டு மெல்ல மெல்ல - ஆண்டவன் கட்டளை
25. இரவு முடிந்துவிடும் - அன்பு கரங்கள்
26. மெய்யேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்
27. மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி
28. நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் - இதயகமலம்
29. நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு
30. ஏனோ மனிதன் பிறந்துவிட்டான் - பனித்திரை
31. பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யூ
32. உன்னழகை கண்டு கொண்டால் - பூவும் பொட்டும்
33. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
34. பால் வண்ணம் பருவம் கண்டேன் - பாசம்
35. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்
36. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்
37. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி
38. உடல் உயிருக்கு காவல் - மணப்பந்தல்
39. ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
40. பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா
41. பாட்டெழுதெட்டும் பருவம் - அண்ணாவின் ஆசை
42. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் - ஊட்டி வரை உறவு
43. தென்றலே நீ பேசு - கடவுள் அமைத்த மேடை
44. வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள்
45. யாரோடும் பேசக் கூடாது - ஊட்டி வரை உறவு
46. ஒடிவது போல் இடை இருக்கும் - இதயத்தில் நீ
47. கண்பாடும் பொன் வண்ணமே - சகோத‌ரி
48. இரவின் மடியில் - சரஸா பி.ஏ.
49. எங்கும் துன்பமில்லை - புனர்ஜென்மம்
50. அழகான மலரே - தென்றல் வீசும்
51. இன்ப எல்லை காணும் நேரம் - இவன் அவனே தான்
52. மாலை மயங்கினால் இரவா - இனிக்கும் இளமை
53. அன்பு மனம் - ஆளுக்கொரு வீடு
54. பாடாத பாட்டெல்லாம் பாட - வீர திருமகன்
55. அவள் பறந்து போனாளே - பார் மகளே பார்
56. அத்திக்காய் - பலே பாண்டியா
57. ஆரோடும் மண்ணில் எங்கும் - பழநி
58. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா - காதலிக்க நேரமில்லை
59. தாமரை கன்னங்கள் தேன்மலர் - எதிர்நீச்சல்
60. தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்
61. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சாரதா
62. மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி


63துள்ளித்திரிந்த பெண்- காத்திருந்த கண்கள்
64.பொன் என்பேன் சிறுபூ- போலீஸ்காரன் மகள்


65.பூவறியும் பூங்கொடியே- இதயத்தில் நீ


போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - Hastinapur,இந்தியா
15-ஏப்-201311:57:21 IST Report Abuse
vidhuran பி.பி.,ஸ்ரீனிவாஸ் அவரிகள் வாழ்ந்த காலங்களில் நாமும் வால்திருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது. அன்னார் அவர்கள் தாங்களின் பெரும்பாலான அற்புதமான பாடல்களை நாம் அனைவரும் வாழ்வால் பூராம் கேட்டு மகிழ நமக்காக கொடுத்திருக்கிறார். பி.பி.,ஸ்ரீனிவாஸ் அவர்கள் நம்மைவிட்டு வேறு எங்கேயும் சென்றுவிடவில்லை, அன்னார் அவர்கள், கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி, திருச்சி லோகநாதன் போன்றோருடன் சேர்ந்து தமிழுள்ள வரையில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த வாழ்க்கையோடு என்றுமே இருக்கப் போகிறவர்கள். அன்னாருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் கோடி நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
justice babu k - mayiladuthurai,இந்தியா
15-ஏப்-201311:51:05 IST Report Abuse
justice babu k உங்கள் குரல் ஒரு வரப்ரசாதம் எங்களுக்கு ஏன் என்றால் பல்வேறு கஷ்டங்களில் இருக்கும் பொது உங்கள் குரல் ஒரு பாடல் கேட்டல் போதும் துக்கம் எல்லாம் பறந்து விடும் அதில் மயக்கமா கலக்கமா , நெஞ்சம் மறப்பதில்லை பாடல்கள் எப்போது கேட்டாலும் மனதிற்கு இன்பம் தரும். காலத்தால் அழியாத உங்களுக்கு என்றும் இறப்பு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
15-ஏப்-201311:31:06 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India இவர் பாடிய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது சுமைதாங்கியில் பாடிய மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்கையில் நடுக்கமா..........பாடல் எனக்கு மட்டுமல்ல பலலட்சம் பேருக்கு நம்பிக்கையூட்டும் பாடலாக அமைந்தது.ஒவ்வொருவரும் இந்த பாடலை மனதில் கொண்டால் வாழ்கையில் வெற்றிபெறலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vaidy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201311:12:48 IST Report Abuse
Vaidy கன்னியரை காலங்களில் வசந்தம் ஆக்கிய காவிய பாடகனுக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி
Rate this:
Share this comment
Cancel
Santha Guru - chennai,இந்தியா
15-ஏப்-201310:59:29 IST Report Abuse
Santha Guru bigest sound in the world is silence.god with you get a peaceful ,
Rate this:
Share this comment
Cancel
RGK - Chennai,இந்தியா
15-ஏப்-201310:56:19 IST Report Abuse
RGK இவர் வீட்டருகே என் இல்லம் உள்ளது. பெரும்பாலும் ஆட்டோவிலே செல்வார். நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் நான் அவர் வீட்டைக்கடந்த பொழுது ஒரு ஆம்புலன்ஸ் இருந்தது. விசாரித்தபோது இவர் மறைந்து விட்டார் என்று கூறினார்கள். துக்கம் தொண்டையை அடைத்தது. மிகவும் எளிமையானவர். இவர் மென்மையான குரலுக்கு மயங்காதவர்கள் யாரினும் உண்டோ என்றால் அது நிச்சயம் ஒருவர் கூட இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rizwan Mynudeen - Jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-201310:31:28 IST Report Abuse
Rizwan Mynudeen ஒரு அமைதியான நீரோட்டம் போன்ற குரல் வளத்தை பெற்று பல இனிமையான பாடல்களை பாடி மக்களின் மனதில் இடம் பிடித்து வாழும் பி பி ஸ்ரீநிவாஸ் ஆன்மா சாந்தியடைய பிரார்திதிக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Iyya Avargal - Coimbatore,ஆஸ்திரியா
15-ஏப்-201310:13:49 IST Report Abuse
Iyya Avargal நைட்டு இவருடைய பாட்டு கேட்டு தூன்காதவன் யாரும் இருக்க முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
mubarak ali - Attur,இந்தியா
15-ஏப்-201308:04:06 IST Report Abuse
mubarak ali பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
15-ஏப்-201308:03:55 IST Report Abuse
Durai selvaraju காலத்தை வென்று நிற்கும் தங்களை - நெஞ்சம் மறப்பதில்லை…. இன்னும் பல காலங்களுக்கு தங்கள் இனிய குரலை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது…தங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்…
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை