Advertisement
நிலக்கரி ஊழல் குறித்த அறிக்கையில் மத்திய அரசு திருத்தம்: சி.பி.ஐ., அறிக்கையால் அரசுக்கு நெருக்கடி ?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஏப்
2013
20:12
பதிவு செய்த நாள்
ஏப் 14,2013 19:59

புதுடில்லி நிலக்கரி ஊழல் தொடர்பாக, தாங்கள் தயாரித்த அறிக்கையை, மத்திய அரசு திருத்தம் செய்ததாக சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

நிலக்கரியை தோண்டி எடுக்க, தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உரிமம் வழங்கியதாக, கடந்த ஆண்டு, பெரும் ஊழல் குற்றச்சாட்டு வெடித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலை போல, இந்த ஊழலும் பெரிய அளவில், சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இந்த ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணையின், இடைக்கால அறிக்கையை, கடந்த மார்ச் மாதம், சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இடைக்கால அறிக்கை:இந்நிலையில், டில்லியிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் நேற்று வெளியான செய்தியில், கூறப்பட்டிருந்தாவது: நிலக்கரி ஊழல் குறித்த, சி.பி.ஐ., அறிக்கையை, மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம், சி.பி.ஐ.,யின் இடைக்கால அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், அந்த அமைப்பின் உயர் அதிகாரிகளை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், தன் அலுவலகத்திற்கு அழைத்தார்.அங்கு நிறைய யோசனைகளும், பரிந்துரைகளும், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதற்கு, சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அவற்றை ஏற்றுக் கொண்டு, இடைக்கால அறிக்கையில், பெரும்பாலான இடங்களில், திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்பிறகே, சுப்ரீம் கோர்ட்டில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சகத்தினர் மட்டுமின்றி, பிரதமர் அலுவலக அதிகாரிகளும், சி.பி.ஐ.,யின் அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டனர். ஊழல் குற்றச்சாட்டின் வீரியம், முடிந்த அளவுக்கு, அறிக்கையில் குறைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சி.பி.ஐ.,யை சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்கவில்லை எனவும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு நெருக்கடி?:
இந்நிலையில், நிலக்கரி ஊழல் குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் முன்னர், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தலையிட முயற்சி செய்ததாக சி.பி.ஐ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
15-ஏப்-201309:06:54 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சிபிஐ க்கும் ரோஷம் வந்துச்சாக்கும்..
Rate this:
17 members
2 members
10 members
Share this comment
Cancel
Raj Raj - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201302:27:20 IST Report Abuse
Raj Raj சிபிஐ என்ற ஒரு அமைப்பு தனித்து செயல்பட்டிருந்தால் நாடு என்றோ முன்னேறி இருக்கும். மேலும் இந்தியாவில் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சிபிஐ கண்காணிப்பில் இருக்குமானால் இந்த அளவுக்கு பெரிய ஊழல் நடைபெறுமா?
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.