விமான நிலைய சுவர் ஏறி அத்துமீறி நுழைந்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமான நிலைய சுவர் ஏறி அத்துமீறி நுழைந்தவர் கைது

Added : ஏப் 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சுற்றுச்சுவர் ஏறி குதித்து, சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலைய சரக்கு முனையம் அருகே, 4ம் எண் நுழைவாயில் உள்ளது. அதன் அருகே, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, மர்ம நபர், சுற்று சுவரில் ஏறி குதித்து, விமான நிலைய உட்பகுதியில் ஓடினார்.
இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர், செஞ்சியை சேர்ந்த டேவிட் பால விஜயராஜ், 22, என்பதும், "பொக்லைன்' ஓட்டுனரான இவர், காட்டாங்கொளத்தூரில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், பின் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, டேவிட்டை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை