தனித்தும் போட்டி இல்லை; காங்., கூட்டணியும் கிடையாது:ஸ்டாலின் சூசகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்புத்தூர்:""லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை; தி.மு.க., கூட்டணி அமைத்தே போட்டியிடும். நிச்சயமாக காங்., கூட்டணியில் இடம் பெறாது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சிவகங்கை, திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க.,வின் ஆறு மந்திரிகள், "தேர்தல் ஆலோசனை' என்ற பெயரில், மண்டபங்களில் 100 பேர் முன் பேசிச் செல்கின்றனர்."அடுத்த பிரதமர்' என்கின்றனர். தமிழகத்தை இருளில் மூழ்க வைத்தது போதாது என, நாட்டையும் இருளில் மூழ்க வைக்கத் திட்டமா? ஆனால், நாம் திறந்தவெளியில், நிர்வாகிகளின் கருத்தைக் கேட்கிறோம். அ.தி.மு.க.,வில் கட்சி நிர்வாகிகள் கருத்தை கூற முடியுமா?அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், "மின் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக்குவோம்' என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. காங்., கூட்டணியில், இனி இடம் பெற மாட்டோம்; தனித்தும் போட்டி இல்லை. காங்., கூட்டணியை விட்டு தி.மு.க., விலகியது, ஜெயலலிதாவுக்கு ஏமாற்றமே.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
15-ஏப்-201308:52:06 IST Report Abuse
villupuram jeevithan தெரியுமே? அழகிரி, கனி அணியுடன் கூட்டணி உண்டே?
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
15-ஏப்-201308:40:02 IST Report Abuse
Ambaiyaar@raja அய்யா அந்த நடிகரின் கட்சியை எதிர்பார்த்து தான் இப்படி சொல்கின்றீர்கள் ஒரு வேளை அவரும் வரவில்லை என்றால் உங்களோடு இப்போது கூட்டனீல் வட மாவட்டத்தில் மிக பெரிய வலுவா இருக்கும் ஜாதிக்கட்சி அது தான் குருமா கட்சி இருக்கும் பொது உங்களுக்கு யாரும் தேவையில்லை. குருமாவும் ஆத்தா கூப்பிட்டால் இங்கு வந்து குருமா வைப்பார் நீங்கள் உண்மையாவே ரொம்ப பாவம் இந்த முறை.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
15-ஏப்-201306:56:50 IST Report Abuse
Vaduvooraan ஐயோ, தளபதியாரே ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் சென்ற பிறகும் மின்வெட்டு நீங்க வில்லை என்று நீங்க தைரியமாக சொல்லும்போதெல்லாம் போன ஆட்சியில்- மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்தபோதும்- ஒன்றுமே செய்யாமல் நம்ம தலைவர் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததும் பாராட்டு விழாக்களில் பங்கேற்றதும் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது எனக்கென்னமோ நீங்க இந்த மின் வெட்டு அப்புறம் இலங்கை தமிழர் விவகாரம், 2 G இதெல்லாம் பத்தி பேசாமல் இருந்தாலே 2014 ல ஒரு நாலு இடமாவது கிடைக்கும்னு தோணுது அப்பா மாதிரியே ஏதாவது உளறிக் கொட்டி மாட்டிக் கிடாதீங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201306:51:33 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் தோல்வி நிச்சயம் எனும்போது கூட்டணிக்கு ஆள் பிடிக்க பெட்டி கொடுக்கணும், அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் திமுக காசையே செலவழிக்கணும்னா எப்படி? மத்திய அரசிலும் இல்லையென்பதால் வரும்படி வேற இல்லை போனால் போகட்டும் போடா.இந்த பூமியில் நிலையாய் ஆட்டயப் போட்டவர் யாரடா?
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
15-ஏப்-201306:49:19 IST Report Abuse
naagai jagathratchagan தி மு க தனித்து போட்டியிட்டால் என்ன ....கூட்டு போட்டால் என்ன ...எத்தனை தொகுதியில் வெல்லும் ...தி மு க ஆட்சியில் இருந்தபோது ...இரவெல்லாம் ஜொலித்ததா ...அப்பவும் மக்களிடம் இதே ஒப்பாரிதான் ...அப்போது ...வெளிச்சம் வராதா என்ற ஏக்கம் ..ஆனாலும் தி மு க இடத்தை காலி செய்யவேண்டும் என்ற மக்களது நோக்கம் ..முடிந்தது ... தி மு க ஆட்சி . அடிப்படை காரணம் என்ன மின் வெட்டு பிரச்சனை தொடராமல் இருக்க தி மு க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ...மத்திய அரசுடன் கை கோர்த்து உலா வந்தபோது அதை பயன் படுத்தி மின்சாரத்தை கொண்டு வந்திருக்கலாமே ..அதை ஏன் செய்யவில்லை நிறைவேற்றவில்லை." காங்., கூட்டணியில், இனி இடம் பெற மாட்டோம் தனித்தும் போட்டி இல்லை. காங்., கூட்டணியை விட்டு தி.மு.க., விலகியது, "...இது படிக்க நல்லா இருக்கு ...நடைமுறைப் படுமா ...காங்கிரஸ் வராது ...அப்ப தி மு க மட்டும் வருமா ...எப்படி ...
Rate this:
Share this comment
Cancel
pu.ma.ko - Chennai,இந்தியா
15-ஏப்-201305:24:19 IST Report Abuse
pu.ma.ko அது வேற ஒன்னும் இல்ல, ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டியுடன் கூட்டணி வைக்கும். கூடவே கனியக்கா சேர்ந்தாலும் ஆச்சிரியப்பட ஒன்னும் இல்ல.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-ஏப்-201302:33:55 IST Report Abuse
jagan " இரண்டு ஆண்டுகளாகியும்...." அப்போ பாத்துகோங்க அண்ணன் கட்சி ஆட்சில் இருந்த போது நாட்ட எவ்ளோ பின்னுக்கு தள்ளி இருக்காங்கனு.. ..
Rate this:
Share this comment
Cancel
A JEYARAJ - Tallahassee,இந்தியா
15-ஏப்-201302:21:32 IST Report Abuse
A JEYARAJ காங்கிரஸ் (sakkaravarththi ) சவாரிசெய்ய எத்தனயோ குதிரைகள் உண்டு , திமுக குதிரை போனால் அதிமுக குதிரை தானாக வந்து சவாரிக்கு தயாராகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
15-ஏப்-201301:46:22 IST Report Abuse
Vettri அ.தி.மு.க வுடன் இத்தனை செயல்களை தங்கள் கட்சி நடவடிக்கைகளுடன் ஒப்பிடு செய்த தாங்கள், முக்கியமான ஒன்றை ஒப்பிடு செய்ய மறந்தது ஏனோ? அ.தி.மு.க வில் அனைவரும் தலைமைக்கு கட்டு பட்டவர்கள். தங்களுடைய கட்சியில்? உங்களுடைய பேட்டியில் ஒன்று மட்டும் தெள்ள தெளிவாக புரிகிறது. தமிழக முதல்வர் அடுத்த பிரதமர் ஆகி விடுவாரோ என்ற கவலை வாட்டி வதைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஏப்-201300:13:45 IST Report Abuse
Pugazh V தளபதி தெளிவாகப் பேசுகிறார். பெரும்பாலான தமிழர்கள், கலைகர் காங்கிரசுடன் இணைந்திருப்பதை பலவாறு தூற்றியும், திட்டியும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கலைஞரும் விலகி விட்டார். இனி கலைஞரின் ஆட்சித் திறன், ஸ்டாலினின் நிர்வாகத் திறன், ஸ்டாலின்மேயராக இருந்த போது செய்த சீர்திருத்தங்கள், நலத் திட்டங்கள், கடந்த ஆட்சியின் செயல்பாடுகள் இவற்றை சீர் தூக்கிப் பாத்து தி மு க விற்கு வாக்களியுங்கள். மக்களுக்காக=அது சட்ட மன்றமாக இருந்தாலும் , நாடாளுமன்றமாக இருந்தாலும், திறமையாக தெளிவாக உறுதியாகப் பேசும் உறுப்பினர்கள் தி மு க வில் தான் அதிகம் என்பதை மறுக்கவியலாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்