Advertisement
மேட்டூர் அணை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பத்து ஆண்டுக்கு பின் பக்தர்கள் வழிபாடு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மேட்டூர்:மேட்டூர் அணை வறண்டதால், நீருக்குள் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், 10 ஆண்டுக்கு பின் வெளியில் தெரிகிறது. கோபுரத்துக்குள் வைத்துள்ள சிலையில், நேற்று சூரிய ஒளி விழுந்த அற்புத காட்சி, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. அணைக்குள் ஏராளமான கிராமங்கள் இருந்தன. அணை கட்டுமான பணியின் போது, கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். நீர்மட்டம், 70 அடிக்கு மேல் உயரும் போது, கிராமங்களில் உள்ள சர்ச், ஜலகண்டேஸ்வரர் கோவில் நீருக்குள் மூழ்கி விடும். கடந்த, 2003ல் அணை நீர்மட்டம், 25 அடிக்கும் கீழே சரிந்த போது, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிந்தது. அதன் பின், நீர்மட்டம், 50 அடிக்கு மேல் நீடித்ததால் கடந்த, 10 ஆண்டாக கோபுரம் வெளியில் தெரியவில்லை.

நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியால், மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் முழுமையாக வெளியில் தெரிகிறது. அணை கரையோர கிராம மக்கள் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தை வழிபட்டு செல்கின்றனர். தற்போது, கோபுரத்தின் உள்பகுதியில் லிங்கேஸ்வரர் சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேற்று காலை கோபுரத்தின் உச்சியில் உள்ள துளை வழியாக, சூரிய ஒளிக்கதிர் உட்பகுதி லிங்கேஸ்வரர் மீது விழுந்தது. இந்த அற்புத காட்சி, சுற்றுலா பயணிகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.மேட்டூர் அணைக்குள், நாயம்பாடி கிராமத்தில் இருந்த சர்ச் இரட்டை கோபுரம் தற்போது, முழுமையாக வெளியில் தெரிகிறது. 10 ஆண்டுக்கு பின், நேற்று மாலை, 4:00 மணிக்கு கொளத்தூர் அடுத்த சவோரியார் பாளையம், பூமனூர் பகுதி கிறிஸ்தவ மக்கள், பங்குதந்தை ஜெய்பெர்னாட் ஜோசப் தலைமையில், இரட்டை கோபுரத்துக்கு சென்று மழை வேண்டி திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நடத்தினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniya - Viluppuram,இந்தியா
16-ஏப்-201300:14:58 IST Report Abuse
Iniya இப்போது இந்தமாதிரி ஒரு அணை கட்டவேண்டும் ஊரை காலி செய்யுங்கள் என்றால் அதற்காக ஒரு போராட்டம் நடத்தி திட்டத்தையே முறியடித்து லாபம் பார்க்க முயற்சிப்பார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.