வீட்டுக்குள் புகுந்த அரசு பஸ் வாசலில் விளையாடிய சிறுவன் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் புகுந்த அரசு பஸ் வாசலில் விளையாடிய சிறுவன் பலி

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வீட்டுக்குள் புகுந்த அரசு பஸ் வாசலில் விளையாடிய சிறுவன் பலி

திருப்பாச்சேத்தி:சிவகங்கை திருப்பாச்சேத்தியில், ரோடு ஓர வீட்டுக்குள் அரசு பஸ் புகுந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலியானான். திருப்பாச்சேத்தி, காமராஜர் நகர் காந்தி மகன் செல்வம், 6. இரண்டாம் வகுப்பு படித்தான். மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள, தனது அத்தை ராணி வீட்டுக்கு விளையாடச் சென்றான். நேற்று காலை 8.45 மணிக்கு, வீட்டுவாசலில், செல்வம், அழகு மகன் அபிஷேக், 8, ஆகியோர் விளையாடினர். பரமக்குடியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், கட்டுப்பாடு இழந்து, ராணி வீட்டுக்குள் புகுந்தது. வேப்பமரம் இருந்ததால், வீட்டு வாசலிலேயே பஸ் நின்றது. இதில், ராணி, செல்வம், அபிஷேக், ரோட்டில் நின்று கொண்டிருந்த ராஜா, 22, அய்யங்காளை, 15, ஆகியோர் காயம் அடைந்தனர். ராணி, அபிஷேக், அய்யங்காளை, ராஜாவை, மதுரைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். பஸ்சின் அடியில், மண்ணில் புதைந்த, சிறுவன் செல்வத்தை, தாமதமாக மீட்டனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் செல்வம் இறந்தான். அரசு பஸ் டிரைவர் நாகநாதனை, இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
15-ஏப்-201308:51:22 IST Report Abuse
p.manimaran இந்தியாவில் பஸ் சரீல்லை. கடமையை செய்பவர்கள் கம்மி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை