2.2 லட்சம் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை எங்கே?முதல்வர் திட்டத்தில் "பவர் பின்' அலட்சியம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், முதிர்வடைந்த, 2.2 லட்சம் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகையை, "பவர் பின்' நிறுவனம், வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.தமிழகத்தில், "பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்' 1992ம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டம், தற்போது, "முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில், பெண் குழந்தைகளின் பெயரில், அரசு முதலீடு செய்கிறது.

முதலீடு :இந்த நிதி, 20 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் போது, பயனாளிகளுக்கு ரொக்க தொகையாக வழங்கப்படும். உதாரணத்திற்கு, ஒரு பெண் குழந்தை உள்ள பயனாளி குடும்பங்களில், குழந்தையின் பெயரில், 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பயனாளி குடும்பங்களில், குழந்தைகளின் பெயரில், தலா, 25 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்யப்படுகிறது.குழந்தைகள் மீதான முதலீட்டு தொகை, 20 ஆண்டுகளுக்கு பின், முதிர்ச்சி அடையும்போது, பயனாளிக்கு ரொக்கமாக வழங்கப்படுகிறது. இது தவிர, திட்டத்தில் சேர்ந்த, ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஊக்கத்தொகையாக, மாதம், 150 ரூபாய் வழங்கப்படும்.இந்த திட்டத்தில், தற்போது, 4.5 லட்சம் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயரில், அரசு, ஏறத்தாழ, 703.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு, "பவர் பின்' நிறுவனத்தில் (தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு உள்ளது.அரசு முதலீடு செய்த நிதியில் இருந்து,

கிடைக்கும் வருமானத்தில், திட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், முதிர்வடைந்த, 2 லட்சம் முதலீட்டாளர்களுக்கும், ஐந்தாண்டு முடிவிலிருந்து வழங்கப்பட வேண்டிய, ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

ஊக்கத்தொகை:இதுகுறித்து, சமூக நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திட்டத்தில், 4.5 லட்சம் பெண் குழந்தைகள் மீது, அரசு முதலீடு செய்துள்ளது. இதில், 2.2 லட்சம் வைப்பீடுகள்முதிர்வடைந்துள்ளன. முதிர்வடைந்த வைப்பீடுகளில், 13 ஆயிரம் வைப்பீடுகளை மட்டுமே புதுப்பித்து, "பவர் பின்' நிறுவனம் ஊக்கத்தொகை வழங்கி உள்ளது.மீதமுள்ள, 2.07 லட்சம் வைப்பீடுகளுக்கான, ஊக்கத்தொகை வழங்கல் மற்றும் சான்றிதழ் புதுப்பிப்பு பணிகள், எதுவும் நடைபெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட, 2.3 லட்சம் பயனாளிகளுக்கு, "பவர் பின்' நிறுவனம், வைப்பீட்டுக்கான சான்றிதழை வழங்கவில்லை.இந்த திட்டத்தை, "பவர் பின்' நிறுவனம் கிடப்பில் போட்டுள்ளது. பணியாளர் பற்றாக்குறை என, காரணம் கூறி, முதலீடுகள் மீதான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. 2013-14ம் ஆண்டு, 69 ஆயிரம் பயனாளிகளை இணைக்க, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

திரும்ப பெறப்படுமா நிதி?முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், தமிழக அரசு, 703 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு, "பவர் பின்' நிறுவனத்திடம் உள்ளது.இந்த நிலையில், "பவர் பின்' நிறுவனத்திடம் இருந்து, முதலீட்டு தொகை, 703 கோடி ரூபாயை பெற்று,

Advertisement

மற்றொரு நிறுவனம் மூலம் திட்டத்தை சரிவர செயல்படுத்த, தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் விரும்புகின்றனர்.

"பவர் பின்' ஒப்புதல்:"முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்' குறித்து, இம்மாதம், 1ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, "பவர் பின்' நிறுவனம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன், தலைமை செயலர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, "பவர் பின்' நிறுவனம், இத்திட்டத்தில், முதிர்வடைந்த, 2.2 லட்சம் வைப்பீடுகளில், 13 ஆயிரம் வைப்பீடுகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள வைப்பீடுகளுக்கான ஊக்கத்தொகை வழங்கல் மற்றும் வைப்பீடு சான்றிதழ் புதுப்பிப்பு போன்ற பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை' என, தெரிவித்தது.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai Subbu - Coimbatore,இந்தியா
17-ஏப்-201315:44:01 IST Report Abuse
Kovai Subbu 'பவர் பின்" என்பது ஒரு தமிழ் நாடு அரசு நிறுவனம் - TN Power Finance - www.tnpowerfinance.com.
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
16-ஏப்-201311:09:46 IST Report Abuse
saeikkilaar ஊக்க தொகை தான , உற்சாக பானத்துக்கு செலவு செய்தாச்சு ஹாய் ஹாய்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
15-ஏப்-201311:29:20 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இதுவும் CHIT FUND நிறுவங்களை போல் மோசடி நிறுவனமோ?
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
15-ஏப்-201310:14:49 IST Report Abuse
NavaMayam பெண் புத்தி 'பவர் பின்" புத்தி ஆகி போச்சே ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201308:51:32 IST Report Abuse
Srinivasan Kannaiya பவர் பின்னுக்கு பினனால் யார் irukkindrarkalo,யாருக்கு dheriyum
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201304:08:10 IST Report Abuse
Baskaran Kasimani இன்னும் அதிக சாராயக்கடை திறந்தால்த்தான் பணம் வரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.