ஆப்ரிக்க நாடுகளில் மலர் விவசாயம் செழிப்பு : ஓசூர் விவசாயிகள் இடம் பெயர்வது அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்ரிக்க நாடுகளில் மலர் விவசாயம் செழிப்பு : ஓசூர் விவசாயிகள் இடம் பெயர்வது அதிகரிப்பு

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (4)
Advertisement
ஆப்ரிக்க நாடுகளில் மலர் விவசாயம் செழிப்பு : ஓசூர் விவசாயிகள் இடம் பெயர்வது அதிகரிப்பு

ஓசூர்: ஆப்ரிக்க நாடுகளில் மலிவு விலைக்கு விவசாய நிலம் கிடைப்பதால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், அந்நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும், 5 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆஸ்டர் உள்ளிட்ட, 25 வகை கொய்மலர்கள் உற்பத்தியாகிறது. குறிப்பாக, 5,000 ஏக்கரில் திறந்தவெளி மற்றும் உயர் தொழில்நுட்ப பசுமை குடோன் முறையில் விவசாயிகள் ரோஜா சாகுடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர், பேரிகை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில் உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஐரோப்பா, அரேபியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதியானது.கடந்த இரண்டு ஆண்டாக பருவ மழைகள் பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர் மட்டும் வறண்டது. ஆள்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. இந்நிலையில், எத்தோபியா, கென்யா, கானா உள்ளிட்ட ஆப்ரிக்கா நாடுகளில் மலர் சாகுபடிக்கு ஏற்ற குளிர்ந்த காலநிலை, மிக குறைந்த விலைக்கு விவசாய நிலம், அதிகமான நீர் ஆதாரம், கட்டமைப்பு வசதிகள், குறைந்த ஊதியதிற்கு கூலியாட்கள் கிடைப்பதால், அந்நாடுகளில் உலக தரம் வாய்ந்த ரோஜா மலர்கள் உற்பத்தியாக துவங்கியுள்ளது.அந்நாடுகளில் ஒரு ரோஜா உற்பத்தி செலவு, ஒரு ரூபாய் மட்டுமே ஆகிறது. அதனால், சர்வதேச சந்தையில், ஒரு ரோஜா, ஐந்து ரூபாய்க்கு விற்றாலே, நான்கு ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஓசூர் பகுதியில், ஒரு பூ உற்பத்தியாக, மூன்று ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை, செலவாகிறது.தற்போது, ஒரு ஓசூர் ரோஜா, 5 ரூபாய், 7 ரூபாய் வரை தான் விற்பனையாகிறது. இவற்றில் கிடைக்கும் லாபம் கூலியாட்கள், மின்சார கட்டணம், டிரான்ஸ்போர்ட்க்கு செலவாகி விடுகிறது. அதனால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், தற்போது ஆப்ரிக்கா நாடுகளில் மலர் பண்ணைகள் அமைத்து ரோஜா சாகுபடி செய்ய ஆர்வமாகியுள்ளனர்.

ஓசூர் மலர் விவசாயிகள் கூறியதாவது;எத்தோபியா, கென்யா, கானா உள்ளிட்ட ஆப்ரிக்கா நாடுகளில் ஒரு ஏக்கர் நிலம், 3,000 ஆயிரம் ரூபாய் முதல், 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசே, புறம்போக்கு நிலத்தை, 99 ஆண்டுக்கு மிக குறைந்த தொகைக்கு குத்தகைக்கு தருகிறது.மலர் சாகுபடிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், மானிய உதவிகளை அந்நாட்டு அரசுகள், வங்கிகள் செய்து கொடுக்கிறது. தோட்டங்களில் வேலை செய்ய, 25 ரூபாய் முதல், 50 ரூபாய்க்கு கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கின்றனர்.அதனால், அந்நாடுகளில் பூக்கள் உற்பத்தி செலவு மிக குறைவு. அதனால், ஆப்ரிக்க நாடுகளில் ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வருகின்றனர்.இவ்வாறு கூறினர்.

உலக மலர் உற்பத்தியில் இந்திய ரோஜா 2 சதவீதம் : கடந்த காலத்தில் இந்தியாவில் கொய் மலர்கள் சாகுபடி அதிகளவு நடந்தது. பருவநிலை மாற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பால், படிபடியாக கொய் மலர் சாகுபடி குறைந்தது. கடந்த, 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து, 750 கோடி கொய் மலர்கள் ஏற்றுமதியானது.கடந்த, 2011ம் ஆண்டு கொய் மலர்கள் ஏற்றுமதி, 286 கோடியாக வீழ்ச்சியடைந்தது. தற்போது, உலக ரோஜா ஏற்றுமதியில், இந்திய ரோஜா, 2 சதவீதம் ஏற்றுமதியாகிறது. சீன ரோஜா வருகையால், இந்த சதவீதம், 2012ம் ஆண்டு மேலும் குறைய வாய்ப்புள்ளது.ரோஜா விவசாயத்தை மேம்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், ரோஜா விவசாயம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumugan - bangalore,இந்தியா
15-ஏப்-201311:20:17 IST Report Abuse
sumugan அந்நாடுகளில் பொது பாதுகாப்பே கேள்விகுரியது ...மாலை 7 மணிக்கு மேலே
Rate this:
Share this comment
Cancel
P.Govindaraj - palladam,இந்தியா
15-ஏப்-201308:55:35 IST Report Abuse
P.Govindaraj நம்ம விவசாயிகள் எங்க போனாலும் அந்த நாடு வளரும்
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
15-ஏப்-201308:35:33 IST Report Abuse
itashokkumar காவிரியில் தண்ணி வரலேன்னா விரைவில் தமிழ்நாடும் எதியோப்பியா ஆகும். அப்பாவும் தமிழ் நாட்டை எத்தியோப்பியா ஆகியவர்களுக்கு பாராட்டு விழா எடுப்பமுள்ள.
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
15-ஏப்-201308:10:45 IST Report Abuse
Sami வேற வழி. உட்கட்டமைப்பை உருவாக்க அரசுக்கு எடுத்துரைக்கவும் ஆளில்லை அப்படியே சொன்னாலும் செய்ய அரசுக்கு மனமில்லை. நாம்தான் இலவசமா எதிர்பார்த்து ஒட்டு போடா பலகிட்டோமில்ல. எப்படியோ பஞ்சம் காணா பலநாள் தொலைவிலில்லை போல தெரியுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை