1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (97)
Advertisement
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு :  கழிப்பறையில் நடந்தது பிரசவம்

சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது:விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.


உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunprasath - Palani  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-201314:34:31 IST Report Abuse
Arunprasath அனைத்து அரசு மருத்துவமனையிலும் கேமரா மாற்றி பொதுமக்கள் முன்னிலையில் வைக்க வேண்டும் அப்பத்தான் தெரியும் டாக்டர்களின் லச்சனம்
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
20-ஏப்-201310:38:20 IST Report Abuse
R.Saminathan எப்போதும் ஏழைகளான நாங்கள் எந்த ஒரு உதவி மற்றவர்களிடம் கேக்க வேண்டுமானால் அவர்களிடம் பிச்சை போல்தான் கேக்க வேண்டியதாக இருக்கு,,அவர்களும் மனதார செய்து தர மாட்டார்கள்,,இதுதான் உண்மை இக்காலத்தில் மனிதனுக்கு மதிப்புண்டு எப்படி.? பணம் இருந்தால்தான்,,இல்லையெனில் மதிப்பு கிடையாது.,பணம் இல்லாததால் இந்த கர்ப்பிணிக்கு கழிப்பறையில் பிரசவம் நடந்திருக்கு,,. பண்ணாரி நீங்க நல்லா இருக்கணும்,.நீங்கதான் உண்மையான கடவுள்,.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
16-ஏப்-201300:48:28 IST Report Abuse
Venkatesh R Venkatesh அவசர சிகிச்சைக்கு வருபவர்களிடம்கூட(ஏழைகளிடம்) லஞ்சம் கேட்பவர்கள் மிருகத்தைவிட கேவலமானவர்கள் .அதிலும் பிழைக்க வந்த வேற்றுமாநிலத்தவர்களிடம்.வெட்கமாயில்லை? இதில் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று தம்பட்டம் வேறு...
Rate this:
Share this comment
Cancel
bala - bangalore  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201315:32:37 IST Report Abuse
bala please brought the following act in india 'lanjam vanginalo kettalo seruppalayae adikkalamnu,' thakkali seruppu pathathae....
Rate this:
Share this comment
Cancel
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
15-ஏப்-201315:30:09 IST Report Abuse
Janaki raman Pethu chetti அன்று பணியில் இருந்த அல்லது இருக்க வேண்டிய மருத்துவ 'வல்லுநர்'களையும் செவிளியர்களியும் மீண்டும் பனி புரிய தகுதி இல்லாதவாறு அவர்களின் சான்றிதல்களை செல்லாது என்று அறிவித்து மீண்டும் இந்த மருத்துவ பணியாற்ற அனுமதிக்க கூடாது. மனிதாபிமானம் இல்லாமல் பணாபிமானம் உள்ளவர்கள் எந்த படிப்பு படித்து என்ன பிரயோஜனம்?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
15-ஏப்-201315:26:34 IST Report Abuse
LAX பார்க்கும் வேலைக்கு பணி செய்யாவிட்டாலும், சம்பளம் வாங்குவதோடு இதுபோன்று அடித்துப்பிடுங்கும் பிணம் திண்ணி கழுகுகள். உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் வேறு வகையில் தெய்வத்தின் தண்டனை நிச்சயம். அப்போது "ஐயோ நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்" என்று புலம்பிப் பயனில்லை. தக்க நேரத்தில் கர்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்த அந்த அம்மா, உண்மையிலேயே அந்த பண்ணாரி மாரியம்மனின் அவதாரமாகவே அங்கு வந்திருக்கிறார். அவரின் நல்ல உள்ளத்துக்கு, நிச்சயம் அவருக்கு அரசின் உதவி கிட்டி நல்வாழ்வு பெற அம்பாள் அருள் புரிவார். வாழ்க வளமுடன்....
Rate this:
Share this comment
Cancel
BALAMURUGAN - madurai,இந்தியா
15-ஏப்-201315:24:03 IST Report Abuse
BALAMURUGAN பெண்ணின் பிரசவம் மறு ஜென்மம்னு சொல்லுவாங்க ஆனா இலவச மருத்துவமனைல இந்த கொடுமையன அரசு சலுகைல வாங்குற சம்பளம் பத்தாத, காச்சல் தலைவலின பொறுத்துக்கலாம் இப்படி பட்டவர்கள் எல்லாம் வேலைய விட்டு கண்டிப்பா தூக்கணும் அப்பதான் இதுமாதிரி நடக்காது அப்பதான் மக்கள் மத்தியல ஒரு நம்பிக்கை பிறக்கும், அப்பதான் அரசு வேலை பாக்குற எல்லாத்துக்கும் வேலை பொஎருமினு ஒரு பயம் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
15-ஏப்-201314:59:04 IST Report Abuse
Sundeli Siththar முதலில், அந்த மருத்துவமனையில் பிரசவ வார்டில் பணிபுரிந்த செவிலியரையும், பணிநேர மருத்துவர் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவேண்டும். இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு இறைவனின் சபையில் தண்டனை நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
பீரங்கி மூக்கன் - இமயமலை,இந்தியா
15-ஏப்-201314:51:14 IST Report Abuse
பீரங்கி மூக்கன் தன் மனைவிக்கு ஒழுங்காக பிரசவம் பார்க்காமல் தயையும் குழந்தையையும் இறந்ததால் , ஒரு ஆட்டோகாரர் அந்த டாக்டரை கொன்றது ஞாபகம் இருக்கிறதா......??? இது போல் தவறை தட்டி கேட்டால் மட்டுமே. நாடு திருந்தும்....அது ஏன்...எந்த ஆட்சியாக இருந்தாலும் மருத்துவ துறை சார்ந்தவர்கள் இப்படி உள்ளார்கள் என்றே தெரியவில்லை...........இனி மருத்துவ மனை செல்லும் பொது போக்கிரி " விஜய் போல பிளேடுடன் செல்லுங்கள்.......அநியாயத்திற்கு வன்முறை தான் சரியாகும்.......
Rate this:
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
15-ஏப்-201314:49:23 IST Report Abuse
KKsamy நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வதை விடுத்தது நம் சமூகத்தோடு ஒன்றி இருக்கும் அரசு ஊழியர்கள் மட்டும் அதிகாரிகளை கவனித்தால் லஞ்சத்தை ஒழிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை