நிதி ஒதுக்கியும் பலன் இல்லை: சாலை விபத்துகளை குறைக்க மாற்று வழி தேவை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க, பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியும், உயிரிழப்புகள், ஆண்டுக்கு, 500 என்ற அளவில் உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், கடந்தாண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, வாகனங்களின் எண்ணிக்கை, 1.65 கோடி. மாதந்தோறும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


அதிகரிப்பு:

வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, சாலை வசதி இல்லாதது, விபத்துக்கு காரணமாக கூறப்பட்டாலும், வாகன ஓட்டிகளின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு தான் விபத்துகள் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஊருக்குள் செல்லும் சாலைகளில், சரக்கு வாகனங்கள் செல்வதால், உயிரிழப்பு விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தற்போது, உள்வட்டச் சாலைகள், வெளிவட்டச் சாலைகள் அமைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளும், ஆறு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தனை வசதிகள் வந்த பின்பும், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், விபத்துகளில் பலியாகி உள்ளனர்.


ஒதுக்கீடு:

சாலை விபத்துகளை குறைக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.நெடுஞ்சாலை ரோந்துப்படைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், விபத்து நடக்கும் இடங்களை கண்காணித்து, போக்குவரத்தில் மாற்றம் செய்தல், சாலையின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவற்றிற்காக ஆண்டு தோறும், கோடிக்கணக்கான ரூபாய், மாநில அரசால் ஒதுக்கப்படுகிறது.கடந்த, 2011-12ம் நிதியாண்டில், சாலை பாதுகாப்புக்காக, 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட தொகை, நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதே போல், கடந்த நிதியாண்டிற்கு, 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 25 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத்துறைக்கு பிரித்தளிக்கப்பட்டு உள்ளது.


பயிற்சி அளித்தல்:

போக்குவரத்து கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், சாலையில், சிக்னல்கள் இல்லாத இடங்களில், புதிய சிக்னல் அமைப்புகளை உருவாக்குதல், சாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்தல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்ற பணிகளுக்காக, இந்த தொகை செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இது போக, கனரக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும், பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டது. இதில், சாலைகள் திருத்திஅமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பணிகள், மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.கடந்த, 2011ம் ஆண்டில் நடந்த, 14 ஆயிரத்து 359 விபத்துகளில், 15 ஆயிரத்து 422 பேர் பலியாகியிருந்தனர். தொடர்ந்து, கடந்தாண்டில், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 15 ஆயிரத்து 72 விபத்துக்களில், 16 ஆயிரத்து 175 பேர் பலியானார்கள். எனவே, நிதி ஒதுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


70 ஆயிரம்:

விபத்துகளால் உயிரிழப்புகளை போல், உடல் பாகங்களை இழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஐந்தாண்டுகளில், 70 ஆயிரத்தை தாண்டுகிறது. கடந்தாண்டு மட்டும், 78 ஆயிரத்து 348 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, 25 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.விபத்துகளால், இதுபோன்ற நிதி உதவி வழங்குவதும் அதிகரிக்கிறது. எனவே, உயிரிழப்பு, நிதியிழப்பு போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தேர்வுகள் :

போக்குவரத்து ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:வெளி நாடுகள் சிலவற்றில், போக்குவரத்து லைசென்ஸ் பெறுவதற்கே, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒருவர் 700க்கும் மேற்பட்ட முறை, எழுதியும், தேர்வாகாத நிலை உள்ளது. இதுபோன்ற நடைமுறைகளை, இங்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், சாலை கட்டமைப்பில், பெரிய மாற்றம் இல்லை.வாகனங்கள் பதிவில், புதிய நடைமுறைகள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்தால், விபத்துகளை குறைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

-நமது நிருபர்-

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
15-ஏப்-201313:43:00 IST Report Abuse
Rangarajan Pg ஒதுக்கப்படும் பணத்தை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தனக்காக ஒதுக்கி கொள்ளாமல் முழுமையாக அந்த பயன்பாட்டிற்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும். அதே போல வாகன போக்குவரத்து கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் வைக்க வேண்டும். அவை முழு பயன்பாட்டிற்கு வர வேண்டும். அதை கொண்டு போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். . கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். கேமராக்கள் வைத்திருப்பதை கிண்டலடித்து சில வார பத்திரிக்கைகள் ஜோக் எழுதி அந்த முறையையே கேவலபடுத்தி விட்டார்கள். அதில் முதலீடு செய்த பணம் வேஸ்ட் தான். அப்படி இல்லாமல் எதையும் ஒரு சீரியஸ் கண்ணோட்டத்தோடு செய்ய வேண்டும். சட்டம் விதிகள் எல்லாம் ஒட்டுமொத மக்கள் காப்பதற்கு தான் ஒரு சில மக்களை காப்பதற்கு மட்டும் அல்ல. அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் மக்கள் பணத்தை கொண்டு ஏதேனும் உருப்படியாக செய்தால் தேவலாம்.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
15-ஏப்-201313:26:55 IST Report Abuse
yila ஊழல், அரசுச் சாராயம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நடவடிக்கையில்லாமை இவைகளே அநேக விபத்துக்களுக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-201312:26:29 IST Report Abuse
Kavee நிதி யாருக்கு ஒதுக்குனீங்க? அந்த நிதி எப்படி சிலவு செய்யப்பட்டது? அதற்கான திட்டங்கள் செயல்பாடுகள் ஏதாவது உண்டா? முதல்லே ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது சியா வழங்கப்படுதான்னு பாருங்கப்பா ..... பணம் கொடுத்தால் ஆளே அங்கே போக வேணாம் உரிமம் வீடு தேடி வரும் .... எல்லாம் லஞ்சம்மயம் .... உரிமமே இல்லாமல் ஓட்டினாலும் கவலை இல்லை மாட்டினால் காவலுக்கு கப்பம் கட்டினால் போதும் .... அப்புறம் எங்கிருந்து விபத்துக்கள் குறையும் .... ரோடு பொரிக்கி தின்னுக்கிட்டு இருந்தவங்களே எல்லாம் அதிகாரியா போட்டால் அதே புத்திதான் வரும்.
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
15-ஏப்-201311:42:25 IST Report Abuse
Asokaraj ஒதுக்கப் பட்டது ஒதுக்கப் பட்டது என்றால் தெளிவாக யார், யாருக்காக எங்கே ஒதுக்கப் பட்டது என்று தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு நிதியானாலும், பட்ஜெட் ஆனாலும் நிவாரணம் ஆனாலும் எப்போது ஒதுக்கப் படும் என்று பிணம் தின்னி பறவைப் போல் ஒரு கும்பல் கட்சி பாகு பாடின்றி வாயை பிளந்துக் கொண்டு விழுங்க தயாராயிருக்கும் போது இதற்கெல்லாம் எங்கே விடிவுக் காலம்?
Rate this:
Share this comment
Cancel
sumugan - bangalore,இந்தியா
15-ஏப்-201311:36:44 IST Report Abuse
sumugan " வாகன ஓட்டிகளின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு தான் விபத்துகள் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" - அதுமட்டும் இல்லாமல் கிராம மக்கள் இரண்டு சக்கர வாகனகளில் எதிர் திசையில் வருவது , கடப்பது, நடந்து கடப்பது மற்றும் பல... இது தெரியாமல் வாகன ஓட்டிகள் 120/100 KM வேகத்தில் செல்லும் போது விபத்து ....கிராம மக்கள் வாழ்க்கையில் 120-KM வேகத்தில் பயணம் செய்ய வாய்ப்பு இல்லை ....இது அண்டை மாநிலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் ... ஆனாலும் சாலை நன்றாக காலியாக இருப்பதால் வேகத்தில் செல்கிறார்கள் .....பல இடங்களில் NHAI (national highway authority of India) சரியான திட்டம் இல்லாமல் , வழி கிராமங்களுக்கு பாலம் கட்டாமல் சாலை போட்டது தவறு.. ..e.g at many places from hosur to vellore to ranipet - Bangalore-Chennai Highway, mid-way-tunnel are constructed now... NHAI should have done this in their initial plan, but now with additional inflation cost they are doing it...because they are run by great brains with IAS title
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஏப்-201311:17:04 IST Report Abuse
g.s,rajan படித்தவர்களும் படிக்காதவர்களும் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டம் போல் ஒட்டுவதால் நாள்தோறும் விபத்துக்கள் பெருகி வருகின்றன .தாறுமாறான வேகத்தில் செல்வது ,குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவது ,கட்டுப்பாடற்ற வாகனங்களின் உற்பத்தி மற்றும் உபயோகம் ,உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது போன்றவற்றால் வாகன விபத்துக்கள் அதிகரிக்கிறது .நன்கு படித்தவர்களே போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் கண்டபடி ஓட்டுவது அதிகரித்து வருவது வேதனை .பள்ளி கல்லூரி மாணவர்கள் எங்கு பார்த்தாலும் அசுர வேகத்தில் பறக்கின்றனர் அதிக குதிரை சக்தி கொண்ட வாகனங்களை ஓட்டும் நபர்கள் தலைக்கவசம் அணிந்துகொண்டோ ,அணியாமலோ சாலையில் செய்யும் அட்டாகாசம் வர வர தாங்கமுடியவில்லை .இவர்களுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகின்றதோ தெரியவில்லை .பலர் படுகாயம் அடைத்து மருத்துவமனையில் உயிருக்கு போராடியும் ,பலர் தங்களது உயிரை இழந்தும் குடும்பத்தை மீளாத துயரில் அழ்த்திவிட்டுச் செல்கின்றனர் காலமெல்லாம் அவர்தம் தாய் தந்தைகளை கண்ணீரில் நனைந்து வருந்தும்படி செய்து வருவது தொடர்கதை ஆகிவிட்டது .வாகனங்களும் மிகவும் எடை குறைவாக எரிபொருள் சிக்கனம் கருதி தயாரிக்கப்படுவதால் உறுதியும் ,தரமும் எந்த வாகனத்திலும் இல்லாமல் இருக்கிறது .வாகங்களின் பெரும்பாலான பாகங்கள் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டு ,உதிரி பாகங்களைப் பொருத்தி வாகனங்களின் தயாரிப்பாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருவதால் விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள் முட்டைக்கூடு நொறுங்கி சுக்கு நூறாக சிதறி பலரின் உயிருக்கு உலை வைக்கிறது . பலர் கூண்டோடு கைலாசமும் செல்கின்றனர் .வாகனங்களில் நவீன வசதிகள் இருக்கிறது ஆனால் நிச்சயம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை .உண்மையில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் ,மற்றும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் ஓட்டுனர் உரிமம் உட்பட அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக சோதனை செய்தால் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டும் நபர்கள்,வாகங்களுக்கு உரிய ஆவங்கள் இல்லாமல் ஓட்டும் நபர்கள் பலர் பிடிபடுவார்கள் .அரசு இதை பார பட்சமின்றி செய்ய வேண்டும் ,அவ்வாறு செய்தால் சாலையில் செல்லும் பல வாகனங்கள் மாட்டும் ,ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டும் நபர்கள் கட்டாயம் சிக்குவார்கள் .எனவே அரசு கவனிக்குமா ?தீவிர நடவடிக்கை எடுக்குமா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
15-ஏப்-201310:51:32 IST Report Abuse
chinnamanibalan வட்டார போக்குவரத்துத்துறையில் உள்ள லஞ்ச லாவண்யம் காரணமாக தகுதியற்றவர்களுக்கும், தகுதியற்ற வாகனங்களுக்கும் உரிமம் வழங்குதல் , அரசின் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரை காவல்துறை கண்டு கொள்ளாமை ,கமிசன் பெற்று போடப்படும் தரமற்ற குண்டும் குழியுமான சாலைகள், போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படாமை போன்ற அடிப்படை காரணங்களால்தான் தமிழகத்தில் விபத்துக்கள் பெருகுகிறது. மக்கள் மடிவதும் அதிகரிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
15-ஏப்-201309:17:11 IST Report Abuse
Wilsonsam Sp இந்தியாவில் தான் லைசென்சே சீக்கிரம் கிடைக்கும் 3000 கட்டினால் உடனே கிடைக்கும் இது மாறவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201307:52:05 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நிவாரண தொகை கொடுத்தால் தீர்ந்தது பிரச்சனை. இதுதான் இன்றைய அணுகுமுறை.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201307:51:13 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை பாருங்கள். உலகத்திலேயே மிக மிக அதிக நாட்களாக பணிகள் நடை பெற்ற, பெரும், பெறப்போகும் நெடுஞ்சாலை இதுதான்.
Rate this:
Share this comment
Sha Navas Katherbatcha - madurai,இந்தியா
15-ஏப்-201314:20:01 IST Report Abuse
Sha Navas Katherbatchaஒரு புறம் காவேரி மறுபுறம் இருப்புபாதை நடுவில் குடியிருப்பு . இன்னும் ரொம்ப நாளாகும் பொறுமையா இருங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்