E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை: அரசு முக்கிய முடிவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
23:21

புதுடில்லி:கடந்த, 2004ம் ஆண்டு முதல், மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், மத்திய அரசு தலையிடுவதாக புகார் கூறப்பட்டது.

மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார், சமீபத்தில், சி.பி.ஐ., இயக்குனரை அழைத்து, இது தொடர்பாக பேசியதாகவும், அதன் பின், சி.பி.ஐ., அறிக்கையில் மாற்றம் செய்யபட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.இதையடுத்து, "நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, பா.ஜ., கூறியுள்ளது. இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, மத்திய அரசு, இந்த விஷயத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:நிலக்கரி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, நேற்று முன்தினம், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியுடன், மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார், ஆலோசனை நடத்தினார். இந்த விஷயத்தில், அடுத்த கட்டமாக, என்ன செய்யலாம் என்பது பற்றி, அட்டர்னி ஜெனரலிடம், அமைச்சர், ஆலோசனை கேட்டதாக தெரிகிறது.இதன்படி, நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கவுள்ள விசாரணையின் போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவியாக, அட்டர்னி ஜெனரல் உட்பட, மத்திய அரசு சார்பில், எந்த சட்ட நிபுணரையும் அனுப்புவது இல்லை என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201307:17:09 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இருக்கவே இருக்கிறது ஆவணங்கள் காணவில்லை என்று சொல்லிவிடலாம். இல்லை என்றால் ஒரு தீ விபத்து ஏற்படுத்தி முக்கிய ஆவணங்கள் எரிந்து விட்டது என்று சொல்லலாம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
15-ஏப்-201301:35:45 IST Report Abuse
Vettri நாட்டில் ஊழலை ஒழிக்க ஒரே வழி தான் உள்ளது. அது காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான்.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.