E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மின் பற்றாக்குறையால் தென் மாநிலங்கள் அதிகம் பாதிப்பு: மத்திய ஆணையம் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
23:26

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த மின் தேவையில், 12 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு பற்றாக்குறை நிலவியதாக, மத்திய மின் ஆணையம் தெரிவித்துள்ளது.

போதிய மழை இல்லாதது, எரிபொருட்களான, நிலக்கரி, டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை போன்ற காரணங்களால், நாடு முழுவதும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மாதம், 31ம் தேதியுடன் நிறைவடைந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 12 ஆயிரம் மெகா வாட் மின் பற்றாக்குறை நிலவியுள்ள தகவலை, மத்திய மின் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், "பீக் ஹவர்' எனப்படும், மின்சாரம் அதிகம் தேவைப்படும் நேரத்தில், 1.35 லட்சம் மெகா வாட் மின்சாரம் தேவைப்பட்ட நிலையில், 1.23 லட்சம் மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது.

மின் பற்றாக்குறையால், அதிகம் பாதிக்கப்பட்டது, தென் மாநிலங்கள் தான். இந்த காலகட்டத்தில், தென் மாநிலங்களில், 31 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது; இது, 6,000 மெகா வாட் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.பீக் ஹவரில், மின் பற்றாக்குறையால் அவதிப்பட்ட மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில், 20 சதவீதம் அளவுக்கு மின் பற்றாக்குறை இருந்துள்ளது.மிகக்குறைவாக, மேற்கு பகுதி மாநிலங்களில் மின் பற்றாக்குறை இருந்துள்ளது. குறிப்பாக, குஜராத், மத்திய பிரதேசம், டாமன் மற்றும் டையூ, தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா ஆகிய மாநிலங்களில், 1.5 சதவீதம் அளவிற்கே பற்றாக்குறை காணப்பட்டுள்ளது.கிழக்கு பகுதி மாநிலங்களான, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில், 7.4 சதவீதம், பீக் ஹவர் மின் பற்றாக்குறை இருந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், 10 சதவீதம் மின் பற்றாக்குறை இருந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sairam Sairam - muscat,ஓமன்
15-ஏப்-201314:34:35 IST Report Abuse
Sairam Sairam தம்பி டீ இன்னும் வரல... கண்டு புடிச்சிட்டங்க விஞ்சனிக.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஏப்-201313:38:09 IST Report Abuse
g.s,rajan கூடங்குளம் ஏன் தாமதம்,அரசியல் சதியா ?மத்திய அரசுக்கு தமிழகம் தத்தளிக்கட்டும் என்ற நல்ல எண்ணமா ? அணு மின்சாரம் இல்லாமல் இனி சமாளிக்க முடியாது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்று ஆள்பவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை இல்லை இதுவும் ஒரு வகையில் வெளி நாட்டு சதியோ ?இல்லை ஒரு வேளை உள்நாட்டு சதியோ தெரியவில்லை.புரியவும் இல்லை . .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
15-ஏப்-201312:32:19 IST Report Abuse
ANBE VAA J.P. இந்தியா முழுவதும் மின்வெட்டு இருக்கலாம் ஆனால் எங்கள் ஊரில் இருப்பது போல் 16 மணிநேர மின்வெட்டு எங்கும் இருப்பதாக தெரியவில்லை (ஜார்கண்ட் .,சட்டிஸ்கர் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் கூட இல்லை ) இந்த நீங்கா புகழ் எல்லாம் ,எங்கள் முதல்வருக்கே ..இதுவரை 24 மாதத்தில் ஒரு மூடை நிலக்கரி கூட இறக்குமதி செய்து மகளுக்கு மின்சாரம் தரவில்லை ..தமிழ் நாட்டு உற்பத்தி நிலையங்கள் இதுவரை 100 மெகா வாட் மின் உற்பத்தி கூட இதுவரை உற்பத்தி செய்து தந்தது போல் தெரியவில்லை .மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வருவதையும் .,எங்கள் ஊர் காற்றாலைகளின் ,உற்பத்திகளை வைத்தே காலம் தள்ளுவதால் இந்த 16 மணிநேர மின்வெட்டு மக்களுக்கு பரிசு இதில் தொழில் துறை எப்படி இருக்கும் இந்தியா முழுவதும் மின்வெட்டு இருக்கலாம் ஆனால் எங்கள் ஊரில் இருப்பது போல் 16 மணிநேர மின்வெட்டு எங்கும் இருபதாக தெரியவில்லை .,
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
15-ஏப்-201311:54:41 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எல்லாம் வெளியிட்ட நிருபர் தமிழ் நாட்டை பற்றி குறிப்பிடாமல் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டார்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
15-ஏப்-201309:00:42 IST Report Abuse
PRAKASH அடேங்கப்பா ?? என்ன ஒரு கண்டுபுடிப்பு ???
Rate this:
1 members
0 members
32 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201308:39:55 IST Report Abuse
Srinivasan Kannaiya கரண்ட் இருந்தது என்று சரித்திரம் ஆகாமல் parthukollungal
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201307:23:53 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இந்த மின் தட்டுப்பாடு எதிர்கட்சிகளின் சதி - அடுத்தவாரம் நாராயண சாமி அறிக்கை.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-ஏப்-201307:00:08 IST Report Abuse
ஆரூர் ரங நுகர்வோர் கலாச்சாரம் இன்னும் பல சீரழிவுகளை ஏற்ப்படுத்தத்தான்போகிறது
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201304:03:19 IST Report Abuse
Baskaran Kasimani இவர்களுக்கும் கூட தமிழ் நாட்டில் மின்பற்றாக்குறை நிலவுவது தெரியாதோ? தமிழ் நாடு இலங்கையின் ஒரு பகுதி என்று நினைத்து விட்டார்களோ?
Rate this:
3 members
0 members
63 members
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
15-ஏப்-201302:50:43 IST Report Abuse
Panchu Mani கட்டுரை படிக்கும் போது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ் நாடு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது
Rate this:
138 members
0 members
42 members
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
15-ஏப்-201308:51:39 IST Report Abuse
R.BALAMURUGESAN...அப்பெல்லாம் நினைத்து சந்தோஷப்படாதீர்கள்... தமிழகத்தில் மட்டும் பீக் ஹவரில் எவ்வளவு மின்பற்றாக்குறை இருந்தது, இருக்கிறது என்று ஏன் எழுதவில்லை... ஏனென்றால், இங்குதான் மிக மிக கூடுதல் அய்யா... ஒரு நாள், 24 மணி நேரத்தில் 18 முதல் 20 மணி நேரம் மின் வெட்டென்றால்... பார்த்துக் கொள்ளுங்கள், எத்தனை சதவீதம் என்று... இது ஒரு தோராயக் கணக்குதான்... ...
Rate this:
9 members
0 members
78 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.