Karunanidhi upset over stalin | அழகிரியை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்? ஸ்டாலின் மீது கருணாநிதி வருத்தம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரியை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்? ஸ்டாலின் மீது கருணாநிதி வருத்தம்

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (46)
Advertisement
அழகிரியை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்?  ஸ்டாலின் மீது கருணாநிதி வருத்தம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரியை சந்திக்காமல், சென்னை திரும்பினார். இது, தி.மு.க., தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க.,வில், அடுத்த தலைவர் பதவியை கைபற்றுவதில், ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பனிப்போர் நீடித்து வருகிறது.சமீபத்தில், மதுரைக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கனிமொழி சென்றார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில். அழகிரி ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அழகிரியின் வீட்டிற்கு கனிமொழி சென்றார்.அப்போது, "நீங்களும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும்' என, அழகிரியிடம் கனிமொழி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி, மதுரைக்கு ஸ்டாலின் சென்றார். அவரை விமான நிலையத்தில் கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர். ஆனால், ஸ்டாலினை வரவேற்க அழகிரி ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வரவில்லை.மதுரையில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் மூத்த சகோதரர், கமலா தியாகராஜன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் ராதா தியாகராஜனின் குடும்பத்தினரை சந்தித்து, ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். ஆனால், அழகிரி வீட்டிற்கு, ஸ்டாலின் செல்லவில்லை.

மேலும், அன்று இரவு ஸ்டாலின் மதுரையில் தங்கினால், அழகிரியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், ஓட்டலில், ஏற்கனவே புக்கிங் செய்திருந்த அறை, ரத்து செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்ற ஸ்டாலின், அங்கு தங்கினார். நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம், சிவகங்கை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, சென்னைக்கு ஸ்டாலின் திரும்பினார். இரண்டு நாள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் என, சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், மதுரையில் அழகிரியை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலில், தென் மண்டலத்தில் அழகிரியும், ஸ்டாலினும் இரு துருவமாக செயல்பட்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஸ்டாலின் ஏற்காததால், கருணாநிதி மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.மேலும், மதுரையில் கனிமொழிக்கு, அழகிரி ஆதரவாளர்கள், "தடபுல்' வரவேற்பு கொடுத்ததை, ஸ்டாலின் விரும்பாத காரணத்தினால் தான், அழகிரியை, ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
15-ஏப்-201310:24:10 IST Report Abuse
MOHAMED GANI ஸ்டாலின், அழகிரி சகோதரர்கள் இருவரும் செய்யும் பரபரப்பு, மோதல் அரசியலால் தி.மு.க விற்குதான் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆனால், கனிமொழியுடைய பேட்டி, அறிக்கை எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நிதானமாகவே உள்ளது. திண்டிவனத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை பொன்முடியின் தலையீட்டால் பிரச்சினை ஏற்பட்டபோது, தான் விட்டுக்கொடுத்து, அக்கூட்டத்திற்கு செல்லாமல் ரத்து செய்தார் கனிமொழி. கலைஞர் டி,வி விவகாரத்திலும் கட்சியின் நலனுக்காக தான் சிறை சென்று வந்தாலும் அமைதியாக தன் பணியைக் கவனிக்கிறார் கனிமொழி. பாராளுமன்றத்திலும் அவருடைய செயல்பாடு நல்லபடியாக அமைந்துள்ளது. கனிமொழியை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால், தி.மு.க எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அடுத்த தலைவராக வழிமொழியப்படும் ஸ்டாலின் தன்னுடைய தந்தையின் வழியில் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து நடந்தால் எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஏப்-201317:39:27 IST Report Abuse
சு கனகராஜ் கருணாவிற்கு நாடு எட்டு பட்டாலும் சரி தன் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மொத்த சொத்தையும் அடைய வேண்டும் அதுவே அவரது லட்சியம் ...
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
15-ஏப்-201310:18:56 IST Report Abuse
JOHN SELVARAJ மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயனத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அழகிரியை சந்தித்திருக்கவேண்டும். தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் அழகிரியப் புறக்கணித்திருப்பது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். சமீபத்தில், கனிமொழி மதுரை சென்றபோது கூறியபடி, அழகிரியும், ஸ்டாலினும் ஒன்றாகப் பணியாற்றினால், கட்சி பலம் பெறும். வருங்காலத் தலைவராக உருவகப்படுத்தப்படும் ஸ்டாலின் யாரையும் புறக்கணிக்காமல், எல்லோரையும் அனுசரித்து நடந்தால்தான் அவர் அந்தத் தலைமைப் பதவியை அலங்கரிக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Maha Lingam - kerala,இந்தியா
15-ஏப்-201310:02:14 IST Report Abuse
Maha Lingam உங்கள எல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. நாம என்னைக்கு இந்த கட்சிகரங்கள நம்பாம இருக்கோமோ அன்னைக்குதான் நமக்கு சுதந்திரம். இங்க எவனும் நல்லவன் இல்ல. மு க வரும்போது என்ன கொண்டு வந்தார் இன்று அவங்க குடும்பம் இந்தியாவிலே பெரிய கோடிஸ்வரங்க. அதுக்காக மத்தவங்க நல்லவங்கனு சொல்லல ஆனால் இவனுங்க ரெம்ப மோசம். இளைய சமுதாயம் இவங்கள நம்பாதீங்க. இவங்க இந்தியாவோட தரித்திரங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
15-ஏப்-201309:55:21 IST Report Abuse
Ambaiyaar@raja கருணா அவர்கள் குடும்பமே அவருக்கு பலம் அதே குடும்பமே அவருக்கு பலவீனம் இங்கு நிறைய பேர் கருது தெரிவித்து உள்ளார்கள் அவர் குடும்பத்தால் கட்சி அழிந்து விட்டது என்று அது உண்மை தான். அது அவர்களுக்கு தேவை இல்லை அந்த குடும்ப சொத்து ஆக அந்த கட்சிய மாற்றி விட்டாரே அது போதும் அவர்களுக்கு இனி வெற்றி முக்கியம் இல்லை. அவர் என்ன கொடுமை செய்தாலும் அவரை ஆதரிக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாரா இருக்கும். அதே போல ஜெயாவும் என்ன கொடுமை செய்தாலும் அவரை ஆதரிக்கும் கூட்டமும் மாறாது. அந்த 50 சதா வாக்குகளை தவிர மற்ற மக்கள் அனைவரும் ஒன்ன சேர்ந்து நின்று ஒரு அரசை உருவாக்கினால் தான் தமிழ் நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Madabhooshi Rajan - Chennai,இந்தியா
15-ஏப்-201310:21:48 IST Report Abuse
Madabhooshi Rajanகேப்டன் தலைமையில் தானே ? உருப்புடும் நாடு ...
Rate this:
Share this comment
Cancel
Maha Lingam - kerala,இந்தியா
15-ஏப்-201309:53:40 IST Report Abuse
Maha Lingam இன்னமும் இந்த தி மு கவ நம்பி மன்னிக்கவும் மு க கட்சிய நம்பி நாலு பேரு இருக்கங்களே அத நெனச்சா ரெம்ப பெருமைய இருக்கு. இந்த மாதிரி முட்டாள்கள் இன்னும் தமிழ் நாட்டுல இருக்காங்க. காமராஜர் பெரியார் அண்ணா எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நீங்கமடர்கள் அதே போல் நம் மு க வும் நீங்க மாட்டார்....(176000 கோடி)
Rate this:
Share this comment
Cancel
Sudheer - Padmanabhapuram / K.K.Dt /,இந்தியா
15-ஏப்-201309:41:48 IST Report Abuse
Sudheer புத்தி இல்லாத தமிழ் நாடு மக்களே இனியாவது இந்த கருணா வீட்டு குடும்ப அரசியலை வெறுத்துவிடுங்கள்.ஸ்டாலின் அழகிரி இவனுகளுக்கு ஜாஸ்தி demand குடுக்காதீர்கள்.அடித்து சாவட்டும் அவனுங்கள் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.ஏன்யா தமிழ் நாட்டில் இவனுகளை விட்டால் வேறு யாரும் இல்லையா சட்ட சபைக்கு அனுப்ப.இவங்களுக்கு எங்கிருந்தையா இந்த காசு வெளி நாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்து ஓட்டுவதற்கு எல்லாம் நாட்டை கொள்ளை அடித்துதான்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
15-ஏப்-201309:10:43 IST Report Abuse
PRAKASH அண்ணன் தம்பி எப்படி இருக்க கூடாது என்பதிற்கு உதாரணம் ...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
15-ஏப்-201309:10:18 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..
Rate this:
Share this comment
Cancel
kenney - Chennai,இந்தியா
15-ஏப்-201309:08:08 IST Report Abuse
kenney அடப்பாவிகளா... திமுக-வோட வரலாற்றை கொஞ்சம் யோசித்துபாருங்க.. அண்ணாதுரை தொடங்குன கட்சி.. இப்ப அது கருணாநிதியொட குடும்பக்கட்சி.. கருணாநிதியோட ஊழல்களில் பெரிய ஊழல், திமுகவை அபகரிச்சது தான்.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஏப்-201317:42:28 IST Report Abuse
சு கனகராஜ் காலில் விழுது குறுக்கு வழியில் உள்ளே நுழைந்தவர இன்று கட்சிக்கு ஏகபோக தலைவர் அதுவும் சாகும் வரை தான் மட்டுமே தலைவராம் ஒப்புசப்பாநியாக அன்பழகன் என்ன கொடுமை ...
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
15-ஏப்-201308:46:56 IST Report Abuse
PRAKASH தாத்தா முதல உடம்ப பாத்துகோங்க ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை