Doubt for poltical power to srilanka tamils | இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே: எம்.பி., பேட்டி| Dinamalar

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே: எம்.பி., பேட்டி

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (18)
Advertisement
அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே

""இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.


ஐந்து பேர் குழு:

இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறியதாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில், சிங்களர்கள் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள்ளனர். மற்றபடி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.


தயக்கம்:

இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்னை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.போலீஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் குறை சொல்கின்றனர்.அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.


நேரமின்மை:

இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம்.இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kavee - Jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-201310:27:45 IST Report Abuse
Kavee இங்கே குடிக்க தண்ணி இல்லை விவசாயி முதல் நெசவாளி வரை தற்கொலை முடிவுக்கு வந்துகிட்டு இருக்காங்க ஒரு நாதி இல்லை கேக்க ... இவங்க ஊருக்கு உபதேசம் பண்ணுறாங்க போங்கப்பா நீங்களும் உங்க மனிதாபிமானமும் மொழி பற்றும்.
Rate this:
Share this comment
Cancel
குமரி முத்து - Nagercoil,இந்தியா
15-ஏப்-201309:42:48 IST Report Abuse
குமரி முத்து ஒருமித்த இலங்கைக்குள் சமாதானமாக வாழ்வதையே இலங்கை தமிழர்கள் விரும்புகிறார்கள். இங்குள்ள அரசியல் வாதிகள் தான் பிழைப்புக்காக இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் தீங்கு இழைக்கிறார்கள். இது வரை இலங்கை தமிழர்களின் சமாதானத்தை விடுதலை புலிகள் கெடுத்து கொண்டிருந்தார்கள், இப்போது அந்த பணியை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்கிறார்கள். பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
siruppanikoothan - canberra ,ஆஸ்திரேலியா
15-ஏப்-201309:19:04 IST Report Abuse
siruppanikoothan தமிழனை தமிழன் அழிக்கிறான் இதுக்கு மத்தவன் பங்குக்கு அவனும் அழிக்கிறான் தமிழன் அழிவை யாரும் தடுக்கமுடியாது சாதி, மத உணர்வு இருக்கும்வரை
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-ஏப்-201306:55:11 IST Report Abuse
ஆரூர் ரங ஆயுதப் போர் சண்டை என இருந்தபோதவது பேச்சு வார்த்தை சம உரிமை கொடுக்கவேண்டிய காட்டாயம் கொஞ்சம் இருந்தது. இப்போது இந்தியாவும் சிங்களனோடு இணைந்து தமிழனை அழிக்க உதவும்போது ராஜபக்செவுக்கோ மற்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கோ தமிழரை சமமாக பாவிக்க வேண்டிய கட்டாயம் இல்லவே இல்லை தமிழனின் முக்கிய எதிரி சோனியாவும் அவளது அடிவருடிக்களும்தான்
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
15-ஏப்-201305:27:18 IST Report Abuse
mangai நீங்க வேற .. எங்களுக்கே நம்ம நாட்டுல அதிகாரம் கிடையாது.. சலுகை கிடையாது. அப்படியே அந்த 5 பேர் குழு தமிழ்நாட்டுக்கு வந்தா தேவலாம்..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-ஏப்-201303:37:14 IST Report Abuse
jagan இலங்கை தமிழருக்கு விடுதலை எலிகள் மற்றும் ராணுவம் என்று 2 முனை தாக்குதல் இருந்தது....ஒன்னு ஒழிஞ்சுதுனு பார்த்த, அந்த இடத்தை நிரப்ப மாணவர் மற்றும் மஞ்சள் துண்டு/அம்மா தொல்லை.....இங்க இருக்கிறவங்க சும்மா இருந்தாலே போதும்....இங்க இருகிரவங்களாள ஒரு ஆணியும் புடுங்க முடியாது.... ஐ ந தீர்மானம் கூட எங்கேயோ இருக்கிற (இலங்கை தமிழார் குறைவாக உள்ள) அமெரிக்ககாரன் கொண்டு வந்தது.....அதயும் நீர்த்து போக செய்தாச்சு.....அங்க புலிகள் போய் இப்போ தான் அறிவு உள்ளவங்க பேச முடியுது....
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
15-ஏப்-201303:24:13 IST Report Abuse
karuvaayan வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள்நம் இந்திய நாட்டில் இருந்து எல்லாத்தையும் இறக்குமதி செய்துகொள்வார்கள், உணவு உடைகள் மற்றும் இங்கே உணவகம், திரை அரங்கம் என்று "" நம் இந்திய நாட்டால் உயிர் பிழைத்து கொண்டு நம் நாட்டையே கேவலமாக பேசும் நன்றி கேட்ட மனிதர்கள் "".. இலங்கை தமிழனின் சுயரூபம் தெரியாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனையான ஒன்று ...ஈழத்தை எதிர்ப்பவர்கள் எலாம் காங்கிரஸகாரர்கள் இல்லை.. நாம் இவர்களுக்கு கவலைப் படுவது போல் இங்குள்ள ( வெளிநாட்டில் ) ஈழ தமிழர்கள் அதை பற்றி பேசக்கூட மாட்டார்கள் .. ஆனால் சில முட்டாள்கள் இவர்களுக்கு தன வாழ்கையை தொலைப்பது ஏன் என்று புரியவில்லை ..
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
15-ஏப்-201303:03:38 IST Report Abuse
karuvaayan வெளிநாட்டுக்கு வந்து பார்த்தால்தான் தெரியும் இலங்கை தமிழர்களின் அட்டகாசம் .. தம் மக்களை பற்றி கவலை ஏதும் இல்லாமல் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர் .. நம் தமிழ்நாட்டு மக்கள் தன் ஈழம் ஈழம் என்று முட்டாள்தனமாக உயிர்விட்டு கொண்டிருக்கிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
15-ஏப்-201302:29:12 IST Report Abuse
விருமாண்டி நம் தமிழ்நாட்டில் ஏழை மக்கள் சாலை ஓரத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமலும் , ஒரு வேலை உணவு இல்லமாலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...ஊரருகே உணவை கொடுத்து தன கழுத்தில் கயிற்றை போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் எத்தனை பேர் ..? நடுக் கடலில் வகை வகையாய் மீன்பிடித்து நம் மக்களுக்கு கொடுக்கும் மீனவர்களின் பாடு சொல்லி அழ முடியாது .. இதையெல்லாம் விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் இலங்கை தமிழன் னு சொல்வது நம் தமிழ்நாட்டு மக்களை மறந்ததாகவே அர்த்தம் ..
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
15-ஏப்-201301:28:28 IST Report Abuse
Vettri இது தமிழக மக்களுக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். உங்களுக்கு ராஜபக்சே குடுத்த பரிசு என்ன என்பதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை