Wikileaks: Indira Gandhi 'didn't believe' Richard Nixon was supporting Pakistan | பாக்.,குக்கு ஆதரவாக செயல்பட கூடாது: அமெரிக்காவுக்கு இந்திரா கண்டிப்பு| Dinamalar

பாக்.,குக்கு ஆதரவாக செயல்பட கூடாது: அமெரிக்காவுக்கு இந்திரா கண்டிப்பு

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (3)
Advertisement
பாக்.,குக்கு ஆதரவாக செயல்பட கூடாது: அமெரிக்காவுக்கு இந்திரா கண்டிப்பு

புதுடில்லி : "பாகிஸ்தானுக்கு ஆதரவாக, அமெரிக்கா செயல்படக் கூடாது' என, அந்நாட்டுக்கு, முன்னாள் பிரதமர் இந்திராவும், "பாகிஸ்தான் உள்விவகாரங்களில், இந்தியா தலையிடக் கூடாது' என, பிரதமர் இந்திராவிடம் அமெரிக்காவும், 1971ம் ஆண்டில், பரஸ்பரம் பேசிக்கொண்ட தகவலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.


ஆவணங்கள்:

அமெரிக்க தூதரக விவகாரங்கள், உளவுப்பிரிவு செயல்பாடுகள் குறித்த, லட்சக்கணக்கான ஆவணங்களை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது.அந்த வரிசையில், 1970ம் ஆண்டுகளில், இந்தியா தொடர்பான, அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள், அமெரிக்க நிர்வாகத்திற்கு எழுதிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.அதில், அப்போதைய பிரதமர், இந்திராவுக்கும், அமெரிக்க தூதர், டேனியல் பேட்ரிக் மொய்னிஹானுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களை, "விக்கிலீக்ஸ்' வெளியிட்டு உள்ளது.


அஞ்சவில்லை:

அதில், 1971ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது, அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிக்கு, தன் கடற்படையை அனுப்பி வைக்கப் போவதாகவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது. எனினும், அதுபற்றி, பிரதமர் இந்திரா அஞ்சவில்லை; "எந்த சவாலையும் முறியடிப்போம்' என, கூறியுள்ளார்.இந்திராவை, அப்போதைய அமெரிக்க அதிபர், நிக்சன், "கிழட்டு சூனியக்காரி' என, கூறியுள்ளார்.பாகிஸ்தான் உள்விவகாரங்களில், இந்தியா தலையிடக் கூடாது. பாகிஸ்தானை பிரித்து, பலுசிஸ்தான் மற்றும் பஸ்துனிஸ்தான் நாடுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட வேண்டும் என, அமெரிக்கா
வலியுறுத்தியுள்ளது.


அதிபர் கவலை:

"பாகிஸ்தானுக்கு ஆதரவான மனப்பான்மையை, அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும்' என, இந்திரா தெரிவித்தார். "ஆப்கன் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் கவலை கொண்டுள்ளார்; தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என, அதிபர் விரும்புகிறார்' என, அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.அதற்கு பதிலளித்த இந்திரா, "அது அவ்வளவு எளிதானதல்ல' என, கூறியுள்ளார்.இவ்வாறு பல ஆவணங்களை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஏப்-201308:11:01 IST Report Abuse
Pugazh V எனது தாய் நாட்டு விவகாரங்களில் தனது அழுக்கு மூக்கை நுழைக்க விக்கி லீக்சிர்க்கு எந்த அதிகாரமும் இல்லை. உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள். பிறத்தியார் வீட்டு விஷயங்களில் தலையிடுவது அநாகரீகம். இவன் எல்லாம் கலாச்சாரமற்ற மனிதன்.
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201306:47:45 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் உண்மையில் அமெரிக்காவுக்கு இந்திராபயப்படாமல் இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை 1971 போரின்போதே கைபற்றியிருப்பார். அவர்களது ஏழாவது கடற்படைக் கப்பல் வருகிறது என்றதும் பயந்துபோய் திடீரென்று போரை நிறுத்திவிட்டார். போதாததற்கு அமெரிக்க நெருக்குதல்களுக்கு பணிந்து இந்தியா பிடித்து வைத்திருந்த பல்லாயிரம் பாக் ரானுவக்கைதிகளையும் இலவசமாக விடுதலை செய்தார் .அப்போது இந்திய வானொலி, டிவி அரசு வசமிருந்ததால் இவற்றை மறைக்க முடிந்தது இப்போதோ காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் சீனாவுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது இனிமேல் அவற்றை இந்தியா திரும்பப்பெறுவது நடவாது. ஆகமொத்தம் இந்திராவின் வீரமெல்லாம் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட மாயை
Rate this:
Share this comment
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
15-ஏப்-201300:51:26 IST Report Abuse
மண்ணாந்தை இம்சை அரசன் படத்துல வர ஒற்றனே தேவலாம். மாமனார் வீட்டில் கறி விருந்து சாப்புட்டு போட்டு, எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்து போன அடுத்த நாளாவது வந்து, எதிரி நாட்டு அரசன் படை எடுத்து வரப் போவதாக அறிவிப்பான். எப்பவோ நடந்த உப்பு சப்பு இல்லாத விஷயங்களா வெளியிட்டுக்கிட்டு இருக்காங்க. கருணை மனுக்கள் மீதான முடிவை விட மெதுவாக வருகிறது உளவு சமாச்சாரங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை