E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆந்திர "மாஜி' முதல்வர் மீது காங்கிரஸ் அமைச்சர்கள் "திடுக்' புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 ஏப்
2013
01:23
பதிவு செய்த நாள்
ஏப் 14,2013 23:39

ஐதராபாத் :ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், இப்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜெகனுக்கு எதிராக, அமைச்சர்கள் பலர் திரும்பியுள்ளனர். ஜெகனையும், அவரின் தந்தையையும், "திருடன், கொலைகாரன்' என, கூறி வருகின்றனர்.

யாத்திரை:



ஆந்திராவில், தெலுங்கு தேசம் அலை வீசிய போது, மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, விவசாயிகளின் ஆதரவை பெற்று, 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தவர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.ஐந்தாண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்த அவர், 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி, சில மாதங்களிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.ராஜசேகர ரெட்டிக்குப் பதிலாக, அவர் மகன், ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதல்வர் பதவி வழங்க முன் வந்த காங்கிரஸ் மேலிடம், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டதால், கட்சி மேலிடத் தலைவர்களான, சோனியா, ராகுல் பற்றி, ஜெகன் மோகன் நடத்தும், "சாக்ஷி டிவி' அவதூறு செய்திகள் வெளியிட்டது.இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி, கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதற்கு அஞ்சாத அவர், "ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கி, எம்.பி.,யானார். இன்னொரு எம்.பி., மற்றும், 17 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டுள்ள அக்கட்சிக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.இதற்கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதாகி, 11 மாதங்களாக, ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டி, ஜெகனின் தாய், விஜயா, சகோதரி ஷர்மிளா ஆகியோர், பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை:



ஜெகன் மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், கடந்த ஆண்டு, மாநில அமைச்சர், தர்மன பிரசாத் ராவ் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது போல், கடந்த சில நாட்களுக்கு முன், உள்துறை அமைச்சர், சபிதா ரெட்டி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இதனால், ஜெகனுக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மாநில நிதியமைச்சர், ஆனம் ராமநாராயண ரெட்டி கூறியதாவது:முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, கை காட்டிய இடத்தில் நாங்கள் கையெழுத்து போட்டோம்; எங்களுக்கு எதுவுமே தெரியாது; எல்லாவற்றையும் ராஜசேகர ரெட்டி தான் செய்தார்; அவர் பின்னணியில், ஜெகன் இருந்தார். இப்போது எங்களை சி.பி.ஐ., பிடித்து வருகிறது.நடந்த முறைகேடுகள் அனைத்திற்கும், ஜெகன் மோகன் ரெட்டியும், அவரின் மச்சான், மதபோதகர், அனில்குமாரும் தான் காரணம். ஒன்றுமே தெரியாத அமைச்சர்கள், அவர்களால் இப்போது சிக்கலில் சிக்கியுள்ளனர்.ஜெகன் அடைக்கப்பட்டுள்ள, ஐதராபாத், சஞ்சலகுடா சிறையில், அவருக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது; ஆடம்பரமாக உள்ளே வாழ்ந்து வருகிறார்; அங்கிருந்தவாறு, மாநில அரசியலை ஜெகன் ஆட்டிப் படைக்கிறார்; திருடன், கொலைகாரரான, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான, போட்சா சத்யநாராயணா கூறும் போது, ""அடுத்த தேர்தலில், ஜெகன் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது; அவரை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

மற்றொரு அமைச்சரான, பார்த்தசாரதி, ""ஒய்.எஸ்.ஆர்., என்ன செய்தாலும், அதை எங்களால் தட்டிக்கேட்க முடியாத நிலையில் தான் இருந்தோம். அதற்கான தண்டனையை, எங்கள் அமைச்சர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்'' என்றார்.

பதிலடி:



இவர்களைப் போலவே, விவசாய அமைச்சர், கண்ணா லட்சுமி நாராயணா போன்ற பலரும், ஜெகனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளதால், ஜெகனில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்."இவர்கள் என்ன சின்னக் குழந்தையா... காட்டும் இடத்தில் கையெழுத்து போட? மறைந்த தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்; ஏராளமான பணத்தை சுருட்டி, கொழுத்துப் போயுள்ள இவர்கள், குறை சொல்வதா?' என, ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறி வருவதால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
15-ஏப்-201310:21:03 IST Report Abuse
பொன்மலை ராஜா CBI ஜெகனுக்கு எதிராக இருந்தால் ... CPI-யை ஜெகன் தனக்கு துணையாக வைத்துக்கொள்ள வேண்டும் ...
Rate this:
5 members
0 members
7 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
15-ஏப்-201309:24:34 IST Report Abuse
Ambaiyaar@raja காங் கட்சி மக்கள் ஆதரவு பெற்ற மாநில தலைமை வருவதை விரும்பாது. ஆந்திராவில் ஜகன் மோகன் அதே போல புதுவையில் ரெங்கசாமி இந்த இரண்டு பேருக்கும் மக்கள் ஆதரவு நல்ல இருந்து வரும் போதும் அவர்கள் வளர்ந்து விட கூடாது என்று தன அல்ல கைகள், அடிமைகளை, இந்த இரண்டு மாநிலத்திலும் நியமனம் செய்தது ஆனா மக்கள் ஆதரவு அதற்க்கு இல்லை. இப்போ பாருங்கள் அந்த ரெங்கசாமீடமும், ஜகநிடமும், பேரம் பேசுதுங்க இங்க நம்ம முப்பனார் கட்சியை இணைத்து போல இனைபதுக்கு.
Rate this:
3 members
0 members
11 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
15-ஏப்-201306:56:29 IST Report Abuse
Thangairaja யானை படுத்தாலும் குதிரை மட்டம், சிற்றெறும்புகள் சீண்டுவதால் சிறுத்துப்போகாது. காங்கிரசின் மிராசுதனமான போக்கிற்கு ஆந்திரம் பதில் சொல்லும். ஜெகன் மூன்றாம் அணிக்கு பயணிக்க வேண்டும், பிரதமராக கூட ஆகலாம்.
Rate this:
15 members
0 members
4 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
15-ஏப்-201306:41:33 IST Report Abuse
T.R.Radhakrishnan பாம்பின் கால் பாம்பறியும்......காங்கிரஸ் காரர்களின் ஊழல் காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே தெரியும்.......இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால், அவர்கள் நல்லவர்கள்.....தலைமையை கேள்வி கேட்டால், ரைட் வரும்....சிறை அழைக்கும்.......இந்தியாவில் மக்களாட்சியா நடக்குது? அரசியின் ஆட்சியே நடக்குது.....
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
15-ஏப்-201304:49:32 IST Report Abuse
Sekar Sekaran காங்கிரசின் கோழைத்தனம் இது. கர்நாடகாவில் பாஜக செய்த மாபெரும் பிழைகளால்தான் கட்சி பிழைத்து வருகின்றது. ஆனால் ஜெகனை சிறையிலே வைத்து அவருக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்தால் கட்சி பிழைக்கும் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்.அது இவர்களுக்கு எதிராக இன்னமும் அதிக அளவில் காங்கிரசை குழியில் தள்ளவே பயன்படப்போகிறது.சிபிஐ முழுமையாக காங்கிரசின் ஆதிக்கத்தில் உள்ளது என்பதற்கான சான்றுதான்..ஜெகனுக்கு எதிரான பிரச்சாரம். ஜாமீன் என்பதையே கொடுக்காமல்..பலலட்சம் கோடி உலக மெகா ஊழல் நாயகன்- நாயகிக்கே கொடுக்கும் சிபிஐ ஜெகனுக்கு கொடுக்க மறுத்து வருவதே சான்று. தமிழகத்தில் எப்படி காங்கிரஸ் காணாமல் துடைத்து அளிக்கப்பட்டதோ..அதைவிட அதிகமாக காங்கிரஸ் ஆந்திராவில் காணாமல் போகப்போக இவர்கள் எல்லோரும் பின்னணி காரணமாய் இருக்கப்போகிறார்கள். சிபிஐ வைத்து அரசியல் சித்து நாடகம் நடத்த எண்ணியது எவ்வளவு தவறாய் போய்விட்டது என்று காலமெல்லாம் வருந்தும் அளவுக்கு தோல்வி என்பது காங்கிரஸ் சந்திக்கும்..எட்டப்பர்கள் இந்த அமைச்சர்கள்..கோழைகள்..மிக கேவலமான ஜந்துக்கள்..இப்படி எல்லா மக்களும் தூற்றுவார்கள்..என்பதே இப்போது உள்ள ஆந்திரா நிலைமை..ஜெகனுக்கு ஆதரவாய் இந்த கருத்துக்கள் மாறுகின்றன என்பதை தேர்தல் முடிவுகள் காட்டத்தான் போகிறது..
Rate this:
12 members
0 members
31 members
Share this comment
ugoodguy - Jiangsu,சீனா
15-ஏப்-201309:45:15 IST Report Abuse
ugoodguyநீங்கள் சொல்லுவது புரிகிறது கோடி கோடியாக கொள்ளை அடித்தது தவறில்லை, அவரை இனியும் ஆதரிக்கும் மக்கள் குற்றம் இல்லை, CBI பிடித்தல் அது காங்கிரஸ் செய்த குற்றம் வெரி குட் கீப் இட் காங்கிரஸ் பற்றி குறைகளை மட்டுமே இங்கு பதியவேண்டும் அடுத்த முறை பிஜேபி வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும்...
Rate this:
6 members
2 members
47 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201303:57:42 IST Report Abuse
Baskaran Kasimani இதிலிருந்து காங்கிரஸ் ஒரு "உயர்ந்த" கட்சி என்பதை புரிந்து கொள்ளலாம்.
Rate this:
2 members
1 members
10 members
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
15-ஏப்-201303:49:01 IST Report Abuse
Panchu Mani அரசியல் அரிசுவடி தெரியாத தலைவர்கள் ஜெகனிடம் அரசியல் கற்க வேண்டும். இத்தனை சிறிய வயதில் ஜெகனின் அரசியல் சாணக்கியம் அளவிடற்கரியது.அவரின் ஒவ்வொரு அசைவுகளும், அரசியல் அடிகளும் பிரமிப்பு ஊட்ட கூடியவை.
Rate this:
11 members
0 members
21 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.