E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013,23:42 IST
கருத்துகள் (16)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:"அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, தே.ஜ., கூட்டணியின், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, எட்டு மாதங்களுக்குள், பா.ஜ., அறிவிக்க வேண்டும். கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், அனைத்து தரப்பினராலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய, மதச் சார்பற்ற தன்மை உடையவராக இருக்க வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் விதித்துள்ள இந்த கெடு மற்றும் நிர்பந்தத்தால், பா.ஜ.,வுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பீகாரில், ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவிப்பதற்கான முயற்சியில், பா.ஜ., மேலிடம், தீவிரமாக உள்ளது.இதை, ஐக்கிய ஜனதா தளம், கடுமையாக எதிர்த்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமார், மோடியை, பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவதை, துவக்கத்திலிருந்தே, எதிர்த்து வருகிறார்.நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், பீகாரில், தங்களுக்கு சிறுபான்மை ஓட்டு கிடைக்காது என்பதற்காகவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, இந்த எதிர்ப்பை காட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில், நேற்று முன்தினம் துவங்கியது.

நேற்றைய கூட்டத்தில், நிதிஷ் குமார் பேசியதாவது:அடுத்த லோக்சபா தேர்தலின், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, என் பெயரை சிலர் கூறுகின்றனர். இது, தவறான கருத்து. அதுபோன்ற, மாயத் தோற்றத்தை, யாரும் ஏற்படுத்த வேண்டாம். பிரதமர் பதவிக்காக, நான் ஆசைப்படவில்லை.வாஜ்பாய் போன்று, அனைத்து தரப்பினரையும், அரவணைத்துச் செல்லும் வகையிலான, ஒரு தலைவர் தான், அடுத்த பிரதமராக வேண்டும். இந்த அணுகுமுறையில், ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், கூட்டணிக்குள் பிரச்னை ஏற்படும்.ஒரு சிலர், தங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகவும், ஆதரவு அலை வீசுவதாகவும், தப்பு கணக்கு போடுகின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. மக்கள், அவர்களை ஆதரிக்க மாட்டார்கள்.ஒரு சிலரின் அடிப்படை குணாதிசயங்களை மாற்ற முடியாது.

அப்படி மாற்ற நினைத்தால், கடும் விளைவுகள் ஏற்படும். பிரதமர் வேட்பாளர் விஷயத்தில்,எங்களின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தால், அதற்கு பின், எங்கள் நடவடிக்கை, வேறு மாதிரியாக இருக்கும்.இவ்வாறு, நிதிஷ் குமார் பேசினார்.

தீர்மானம்:

இதன்பின், செயற்குழு கூட்டத்தில், பரபரப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, இந்தாண்டு இறுதிக்குள் (எட்டு மாதங்களுக்குள்), பா.ஜ., தெரிவிக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் தலைவர், அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, மதச் சார்பற்ற தலைவராக இருக்க வேண்டும்.அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெற்ற, அனைவரையும், அரவணைத்து செல்லக் கூடிய தலைவரே, பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும்.தே.ஜ., கூட்டணிக்கென, தனியாக, ஒரு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ராமர் கோவில், சட்டப் பிரிவு, 370ஐ, ரத்து செய்வது, ஒரே மாதிரியான சட்டம் போன்ற விவகாரங்களைப் பற்றி, கூறப்பட்டுள்ளது. அந்த கொள்கையில், உறுதியுடையவரைத் தான், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

சரத் யாதவ் மீண்டும் தேர்வு :
நேற்று நடந்த, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவராக, சரத் யாதவ், மூன்றாவது முறையாக, மீண்டும்

Advertisement

தேர்வு செய்யப்பட்டார். அவர் பேசியதாவது:கட்சியை பலப்படுத்தும் பணிகளில், தீவிரமாக ஈடுபடுவதே, என் நோக்கம். ஐக்கிய ஜனதா தளம் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி சேரப் போவதாக, சிலர் கூறி வருகின்றனர். காங்கிரசின் கை, கால்களை முறித்தவர், ராம் மனோகர் லோகியா.அவரின் வழியை பின்பற்றும் நாங்கள், சுய நலத்துடன் செயல்பட மாட்டோம். பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் இடையேயான உறவு, 17 ஆண்டுகளாக நீடிக்கிறது. கூட்டணிக்குள், அவ்வப்போது, பிரச்னை ஏற்பட்டாலும், அவற்றை சுமுகமாக பேசித் தீர்த்து விடுவோம். இவ்வாறு, சரத் யாதவ் கூறினார்.

""பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, பா.ஜ., பார்லிமென்ட் குழு தான், முடிவு செய்யும். எனவே, பிரதமர் வேட்பாளர் விஷயத்தில், இப்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. நரேந்திர மோடி, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதில், எந்த மாற்று கருத்தும் இல்லை.
-ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசிய தலைவர்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kavee - Jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-201310:20:00 IST Report Abuse
Kavee ஒவொருவருக்கும் அல்லது அவரது கட்சிக்கு ஒரு கொள்கை உண்டு அந்த கொள்கையில் அடிப்படையில் இவர் கருத்து இப்படி இருக்கலாம். பாஜக எடுக்கும் முடிவை இவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது அவசியமோ நிர்பந்தமோ இல்லை. அதே சமயம் பாஜகமற்றவர்களது ஆதரவு வேண்டும் என்றால் அனுசரித்துதான் போக வேண்டும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவரை அறிவிக்க வேண்டும் அதுதானே கூட்டணி தர்மம் . இல்லையேல் பாஜக தன் நிலை பாட்டை மாற்றி கூட்டணியை கைவிட்டு புதிய கூட்டணி அமைக்க வேண்டியதுதான்.
Rate this:
18 members
0 members
20 members
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
15-ஏப்-201308:55:08 IST Report Abuse
Thamilan-indian கூட்டணியில் உள்ள தனியொரு தலைவரை தொடர்ந்து விமர்சித்தல், கலந்கபடுதுதல், கூட்டணி கட்சியினரை மிரட்டுதல், கெடு விதித்தல் என்ற கூட்டணி கட்சியின் போக்கு தொடர்ந்து கொண்டேயிருந்தால், எட்டு மாதங்களுக்குள் அக்கட்சியை கூட்டணியை விட்டே தூக்கி ஏறிய வேண்டும்.
Rate this:
12 members
0 members
28 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
15-ஏப்-201310:13:21 IST Report Abuse
பொன்மலை ராஜாகூட்டணிக் கட்சியை விட்டுவிடுங்கள் ... இது பாஜக கட்சிக்குள்ளேயே தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கக் கூடிய விஷயம் ... மோடி ஆதரவாளர்கள் கை ஓங்கியிருக்கிறதே தவிர கட்சிக்குள்ளேயே பெரும்பான்மையினரின் கருத்தாகக் கூட அது இன்னும் உருவெடுக்கவில்லை ......
Rate this:
12 members
0 members
20 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
15-ஏப்-201308:50:30 IST Report Abuse
Ambaiyaar@raja நிதிச் குமார் பெரியா ஆளா ஆகணும்னா பிஜேபி கூட்டணியை விட்டு விட்டு தனியா வந்து பிரதமரா ஆகட்டும் அதை விட்டு விட்டு இன்னொரு கட்சி இன் உள்விவகாரங்களில் தலை இடுவது என்பது தவறான ஒரு விஷயம். அவர்கள் ஒரு கழுதையை கூட நிறுத்துவார்கள் உனக்கு பிடித்தால் இரு இல்லாவிட்டால் கிளம்பி வெளியே போய்விடு.
Rate this:
16 members
0 members
43 members
Share this comment
Cancel
K R RADHAKRISHNAN - udumalpet ,இந்தியா
15-ஏப்-201308:14:12 IST Report Abuse
K R RADHAKRISHNAN பிரதமர் வேட்ப்பளார் தேர்வு பா ஜ க வின் உள் கட்சி விவகாரம் இதில் கூட்டணி கட்சியோ மாநில கட்சியோ கெடு விதிப்பது மிரட்டுவது பற்றி கவலைப்படாமல் பிரதமர் வேட்ப்பாளராக மக்கள் விரும்பும் மோதியை அறிவிக்கவேண்டும் கூட்டணி கட்சிகளுக்கு அடிபணிந்தால் காங்கிரஸ் கட்சியை கருணாநிதி மம்தா முலாயம்சிங் மிரட்டுவது போல் நிதிஷ் மிரட்ட துவங்குவார். அதனால் பா ஜ க கூட்டணி கட்சிகளோடு துணை இல்லாமல் மோதியை பிரதமராகஅறிவிக்க வேண்டும் கண்டிப்பாக தனி மெஜாரிட்டியுடன் பா ஜ க ஆட்சியை பிடிக்கும் . மதவாதம் பற்றி பேசுவது மக்கள் அல்ல இதுவரை நாட்டை கொள்ளை அடிதுக்கொண்டிறிக்கும்கட்சிகளே அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக மோதியை தான் கூறுவார்கள் அடுத்து நாட்டை ஆள்வது மோதிதான்.
Rate this:
19 members
0 members
34 members
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201307:57:42 IST Report Abuse
Mahesh தனது கருத்தை மாற்றிக்கொள்ள அவர் தனக்குதானே விதித்துக்கொண்ட கெடு அது.
Rate this:
8 members
0 members
30 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201306:55:17 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பிஜேபி மானம் உள்ள கட்சியாக இருந்தால், நிதிஷ் குமாரை (ஜனதா தாளத்தை) கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும். இதையும் மீறி பிஜேபி கால தாமதம் செய்தால், மோடி பிரதமர் ஆவதில் பிஜேபி/ மற்றும் அதன் வழிகாட்டிகளுக்கே சங்கடம் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும்.
Rate this:
6 members
2 members
29 members
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
15-ஏப்-201306:53:06 IST Report Abuse
Prabhakaran Shenoy dissolve NDA&UPA. EVERY PARTY SHOULD CONTEST IN THEIR OWN SYMBOL AND SEEK MANDATE OF THE PEOPLE SOAS TO KNOW THEIR OWN STRENGTH
Rate this:
6 members
0 members
8 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
15-ஏப்-201306:29:34 IST Report Abuse
Thangairaja அனுபவமும் கை சுத்துமுமுள்ள அத்வானிஜியை விட்டால் பிஜேபியில் சரியான தலைவர் கிடையாது. மோடிக்கு கொம்பு சீவுவதை விட்டு பத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் நிதீஷும் ஆதரிப்பார், பா ஜ க ஆட்சிக்கனவும் மேலும் சில மாநில கட்சிகளின் துணையோடு கைகூட வாய்ப்புண்டு. பலதரப்பட்ட்ட மக்கள் வாழும் நம்நாட்டிற்கு மோடி போன்ற ஒருதலைப்பட்சமான ரத்தவெறி பிடித்த ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்போம் என்று பாஜக ஒற்றைக்காலில் நின்றால் அது காங்கிரசை விட மூன்றாவது அணிக்குத்தான் மாபெரும் வெற்றியை மீண்டும் ஒரு முறை தேடித்தரும். அந்த ஆட்சிமுன்பு போல இல்லாமல் வெற்றிகரமானதாகவும் அமையும்,
Rate this:
43 members
1 members
22 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
15-ஏப்-201310:03:56 IST Report Abuse
பொன்மலை ராஜாமூன்றாவது அணி என்பது காங்கிரசிற்கு மாற்று அணியாக அமையாமல் காங்கிரசிற்கு சரிவு ஏற்படும் காலங்களில் முட்டுக் கொடுக்கின்ற மார்க்சிஸ்டுக் கட்சியையும் உள்ளடக்கிய ஒரு காங்கிரஸ் பினாமி அணியாகவே அமையும் ......
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Cancel
madurai mani bharathi - madurai,இந்தியா
15-ஏப்-201304:05:23 IST Report Abuse
madurai mani bharathi மோடி அவர்கள் மாநில அரசியலை விட்டு வெளிவரவேண்டும் குறைந்தது தேசிய அரசியலில் ஐந்து ஆண்டுகளாவது பணியாற்றினால் தான் மக்கள் அவர் மீது நம்பிக்கை பெறுவார்கள்.
Rate this:
12 members
1 members
30 members
Share this comment
Cancel
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201303:04:24 IST Report Abuse
sadasivan துபாயில் குழந்தைகளை பள்ளிகூடத்தில் சேர்க்கும் போது விண்ணப்ப படிவத்தில் இஸ்லாம், கிறிஸ்துவம் என்ற இரண்டோடு மூன்றாவதாக நம்பிக்கை இல்லாதவர் என்ற ஒரு கட்டம் இருக்கும், ஆக இந்து என்றால் மதசாற்பற்றவன் என்று இஸ்லாமிய நாடு ஒத்து கொள்கிறது, இஸ்லாமிய ஓட்டு வங்கியை குறி வைக்கும் நிதிஷ் போன்ற அரசியல்வியாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மக்களும் இந்த புரியாத அறிவிலிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள், இந்த சிறுபான்மை ஓட்டு வங்கி பாசம் பற்றி கட்ஜு இன்னும் ஒன்றும் சொல்லவில்லையே இவர் அல்லது எவராவது இது பற்றி சொல்கிறார்களா பார்ப்போம்.
Rate this:
17 members
0 members
61 members
Share this comment
RAAK - VATHILAI,இந்தியா
16-ஏப்-201300:25:05 IST Report Abuse
RAAKஅட அறிவிழி சதாசிவன், அரபுகள் அனைவரும் இந்த மூன்றில் ஒன்றாக தான் இருக்க முடியும். எந்த ஒரு அரபியும் இந்துவாக இருக்க வாய்ப்பில்லை (ஆனால் அதேவேளையில் ஒரு இந்தியன் முஸ்லிமாக இருக்க முடியும்.) அதனால் தான் அரபு நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக (இந்து, முஸ்லிம், கிருத்தவர், சிங்க், மற்றும் நப்பிக்கை இல்லாதவர்) இந்த பள்ளி சேர்ப்பு படிவம் உருவாக்க வில்லை என்பதை புரிந்து கொள்ளவும். இந்தியர்கள் அனைவரும் அரபு நாட்டுக்கு பஞ்சம் பொழைக்க சென்றுள்ளோம் என்பதை மறக்கக கூடாது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.