சர்ச்சை பேச்சுக்கு பரிகாரம் தேட உண்ணாவிரதமிருந்தார் அஜித்| Dinamalar

சர்ச்சை பேச்சுக்கு பரிகாரம் தேட உண்ணாவிரதமிருந்தார் அஜித்

Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை : "அணைகளில் தண்ணீர் இல்லையெனில், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தன் பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார், சமீபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "மாநில அணைகளில் தண்ணீர் இல்லையென்றால், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்' என, பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது.அஜித் பவாரின் பேச்சுக்காக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரே மன்னிப்பு கேட்டார். பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அஜித் பவாரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இருந்தாலும், சிவசேனா, பா.ஜ., மற்றும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள், அஜித் பவார் பதவி விலக வேண்டும் என, கோரி வருகின்றன. இந்த நிலையில், தன் சர்ச்சை பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், சதாரா மாவட்டத்தில் உள்ள கராத் என்ற இடத்தில், அஜித் பவார் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முதல்வர், யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடம் அருகே, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. ""செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயே, இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன்; இது ஒன்றும் நாடகமல்ல,'' என, உண்ணாவிரதம் இருந்த அஜித் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201306:57:54 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி உண்ணாவிரதம் இருந்து விட்டால் இவர் கொலைகள் செய்தால் கூட நாளை குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201306:56:49 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இவர் பேசிய பேச்சுக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கணும். மலிவான, கீழ்த்தரமான இழிவான விளம்பரம் தேடும் செயல் இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X