E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பெண்கள் தபால் அலுவலகங்களை கிராமங்களில் துவக்க அரசு திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 ஏப்
2013
10:18
பதிவு செய்த நாள்
ஏப் 14,2013 23:47

புதுடில்லி : முழுவதும் பெண்களே பணியாற்றும் தபால் அலுவலகங்களை, கிராமப்புறங்களில் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டில்லியில் திறப்பு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடந்த மாதம், 8ம் தேதி, டில்லி சாஸ்திரி பவனில், முழுவதும் பெண்களே பணியாற்றும், தபால் அலுவலகத்தை, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், கபில்சிபல் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ""விரைவில், பெருநகரங்களில், பெண்கள் தபால் அலுவலகங்கள் திறக்கப்படும்'' என்றார். தற்போது, டில்லி பல்கலை கழகத்திலும், பெண்கள் தபால் அலுவலகம் செயல்படுகிறது. மத்திய தபால் துறை செயலர் கோபிநாத், மும்பையில் டவுன்ஹால் பகுதியிலும், ஐதராபாத்திலும் துவக்கி வைத்தார். பெரு நகரங்களில், மூன்று முதல் நான்கு பெண்கள் தபால் அலுவலகங்களை திறக்க, தபால் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டாம் தர நகரங்களில், குறைந்தபட்சம் ஒரு அலுவலகத்தையாவது திறக்க, தபால் துறை முயன்று வருகிறது. இது அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என, செயலர், கோபிநாத் தெரிவித்தார். மகளிருக்கு எளிது .

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: முழுவதும் பெண்களே பணியாற்றும், தபால் நிலையங்களை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக, கிராமப்புறங்களில் தபால் அலுவலகங்களை திறக்க முயன்று வருகிறோம். இங்கு தபால் அலுவலகங்களை செயல்படுத்த, குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் இருந்தால் போதுமானது. மேலும், வேலைக்கு பெண்கள் வருவதற்கு எளிதாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் முதலில் கவனம் செலுத்திவிட்டு, பின் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். பெண்களே ஆர்வமாக முன்வந்து, அலுவலகங்களை திறப்பதற்கு வாய்ப்பு அளிக்க உள்ளோம். இவ்வாறு, கபில் சிபல் கூறினார். தற்போது, நாடு முழுவதும், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில், 1.39 லட்சம் அலுவலகங்கள் கிராமப்புறங்களிலும், 16 ஆயிரம் அலுவலகங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
15-ஏப்-201309:06:06 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இருக்கிற தபால் நிலையங்களே ஈ ஓட்டிக்கொண்டு இருக்கிறது..அங்கு தாத்தா மற்றும் பாட்டி எழுதும் கடிதங்களை தவிர வேறெதுவும் பட்டுவாடா செய்ய இல்லை..இந்த நிலையில் மகளிருக்கான தபால் நிலையங்களை திறந்து என்ன செய்யபோகிறார்கள்?
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel
ராமசாமி TNEB - உடுமலைப்பேட்டை  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201308:13:40 IST Report Abuse
ராமசாமி TNEB காரணம் புரியலை இருந்தாலும் பரவாயில்லை தி்றங்க
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201307:13:53 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி முதலில் டெல்லி யில் துவக்குங்க. பாலியல் வன்முறை எதுவும் இல்லை என்றால் அப்புறம் கிராமங்களை உசுபெத்தலாம்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
15-ஏப்-201303:20:16 IST Report Abuse
R.Subramanian அது ஏன் பெண்கள் வங்கி பெண்கள் தபால் நிலையம் என்று ஆரம்பிக்கிறார்கள் இதனால் என்ன பலன் யாரவுது சொல்ல முடியும்மா ? இதற்க்கான காரணம் புரியவில்லை
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
15-ஏப்-201308:11:19 IST Report Abuse
Chenduraanபலன் - காங்கிரஸ் எதிர்பார்க்கும் பெண்கள் ஓட்டுதான் ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.