Advertisement
தொழிலதிபர் ஆர்.பி.கோயங்கா கோல்கட்டாவில் காலமானார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோல்கட்டா : நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான, ஆர்.பி.கோயங்கா, கோல்கட்டாவில் நேற்று காலமானார். பல துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும், "ஆர்.பி.ஜி.,' நிறுவனர், ஆர்.பி.கோயங்கா, 83, நேற்று காலமானார். வயது முதிர்வின் காரணமாக, சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலை உயிரிழந்தார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றிய அவர், 1970 - 80களில் நிலவிய கடும் தொழில் போட்டியிலும், தன் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தை விட்டு வெளியே வராமல், அங்கேயே இருந்து சாதித்து காட்டினார். ஆர்.பி.ஜி., மட்டுமின்றி, ஸ்பென்சர்ஸ், சரிகம, சியட் டயர்ஸ் உட்பட, பல நிறுவனங்களையும் தொடங்கியவர் இவர். கோல்கட்டா பிரசிடன்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பு படித்துள்ளார். இவரது நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன், தனது நிறுவனங்களின், நிர்வாகத்தை இரு மகன்களிடமும் ஒப்படைத்து விட்டு ஓய்வில் இருந்த கோயங்கா, நேற்று காலமானார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.