பஸ் - லாரி மோதல் 12 பேர் பலி| Dinamalar

பஸ் - லாரி மோதல் 12 பேர் பலி

Added : ஏப் 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில், பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து மீது லாரி மோதியதில், 12 பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். குஜராத் மாநிலம், அம்ரேலியிலிருந்து, சூரத் நோக்கி, பயணிகள் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தை முந்திச் செல்ல முயன்ற லாரி, பேருந்து மீது மோதியதில், பேருந்தில் இருந்த, மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட, 12 பேர் பலியாகினர்; மேலும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் லாரி ஓட்டுனரும் பலியானார்.

நடுக்கடலில்தத்தளித்த மீனவர்கள் : ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு மீனவர்கள், கடந்த வியாழன் அன்று, மீன் பிடிப்பதற்காக, படகுகளில், கடலுக்குள் சென்றனர். படகில் தீடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவர்கள் அனைவரும் நடுக்கடலில் சிக்கி கொண்டனர். நேற்று, இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர், ஏழு மீனவர்களையும் மீட்டு, மீன்பிடித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இளம்பெண் பலாத்காரம் : தானே: மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் பகுதியில், லாட்ஜ் ஒன்றில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், 26, தன் கணவருடன் தங்கியிருந்தார். வேலை விஷயமாக பெண்ணின் கணவர், வெளியில் சென்றபோது, லாட்ஜ் மேனேஜர் மற்றும் அங்கு பணியாற்றும், மூன்று பேர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தார். தலைமறைவான மூவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பானி வீட்டில் போலீசாருக்கு அறை: மும்பை: நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான, "ரிலையன்ஸ்' தலைவர், முகேஷ் அம்பானிக்கு, கடந்த பிப்ரவரி மாதம், "இந்தியன் முஜாஹிதீன்' பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், அவரின், "அன்டில்லா' பங்களாவுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சிறுநீர் கழிக்க அல்லது ஆசுவாசப்படுத்திக் கொள்ள வசதிகள் இல்லை என்பதால், போலீசாரின் வசதிக்காக, காவல் அறை அமைக்க வேண்டும் என, முகேஷ் அம்பானி கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் வீட்டில், இடம் வழங்கினால், காவல் அறை கட்டிக் கொடுக்க தயார் என, போலீஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை