திருப்பதி கோவிலில் பிரசாத கூடத்தில் தீ| Dinamalar

திருப்பதி கோவிலில் பிரசாத கூடத்தில் தீ

Added : ஏப் 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நகரி : திருப்பதி, வெங்கடேச பெருமாள் கோவிலில், ஏழுமலையானுக்கு படைக்கப்படும், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள், கோவில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் தயாரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் வடை தயாரிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாணலியில் இருந்த நெய் சிதறி, நெருப்பில் விழுந்து தீப்பற்றியது. இதைக் கண்ட ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்த பக்தர்களும், அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே, திருமலை கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மாட வீதியை விஸ்தரிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிரம்மோற்சவ விழாக்களின் போது, ரத உற்சவ சேவைக்கு இந்த வீதி மிகச் சிறியதாக இருப்பதால் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து, இந்த வீதியை விஸ்தரிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை