"சிகிச்சை பலனளிக்காவிட்டால் மருத்துவர் குற்றவாளி ஆக மாட்டார்'| Dinamalar

"சிகிச்சை பலனளிக்காவிட்டால் மருத்துவர் குற்றவாளி ஆக மாட்டார்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : "நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நோயாளிக்கு பலன் அளிக்காமல் போனதால் ஏற்பட்ட மரணத்திற்கு, மருத்துவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த, அட்டார் முகமது என்பவர், 2002ம் ஆண்டு, காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், டில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பல வித சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், மூன்று நாட்கள் கழித்து இறந்து போனார். முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த
அட்டாரின் உறவினர்கள், சில நாட்கள் கழித்து, "மருத்துவர்கள் சரி வர சிகிச்சை அளிக்காததே, அட்டார் முகமதுவின் இறப்புக்குக் காரணம்' என, வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்கள் தரப்பில், எந்த தவறும் இல்லை என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அட்டாரின் உறவினர்கள் மேல் முறையீடு செய்தனர்.இந்த வழக்கில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, காமினி லா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மருத்துவர்கள் தொழில், புனிதமானது. எந்த காரணத்தைக் கொண்டும், நோயாளி இறக்க வேண்டும் என, மருத்துவர்கள் விரும்ப மாட்டார்கள்; முடிந்த வரையில் எல்லாம், நோயாளியை காப்பாற்றவே முயற்சிப்பர்.சில நேரங்களில், அவர்கள் அளிக்கும் சிகிச்சையால், நோயாளி குணமாகாத நிலை ஏற்படலாம். அத்தகைய நேரங்களில், மருத்துவர்களை குற்றம் சாட்டக் கூடாது. நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நோயாளிக்கு பலன் அளிக்காமல் போனால், அதனால் நோயாளி இறக்க நேரிட்டால், மருத்துவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது.மேலும், மருத்துவர்கள் தங்கள் பணியில் மெத்தனமாக இருந்தனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் சிக்கலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaidyanathan - Chennai,இந்தியா
15-ஏப்-201314:01:29 IST Report Abuse
vaidyanathan What about wrong treatment and diagonise?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201308:06:08 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ரொம்ப சரி. ஆனால் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் தராது என்று தெரிந்தும் பணத்திற்காக மக்கள் ஏமாற்றபடுகிறார்கள் ... அதற்க்கு விமோசனம் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.