முறைகேடாக செயல்படும் டாக்டர்கள் அடையாளம் காண கோர்ட் உத்தரவு| Dinamalar

முறைகேடாக செயல்படும் டாக்டர்கள் அடையாளம் காண கோர்ட் உத்தரவு

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : "பணம் சம்பாதிப்பதற்காக, முறையற்ற வகையில், சிகிச்சை அளிக்கும் கறுப்பு ஆடுகளை அடையாளம் காணும் நடவடிக்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) மேற்கொள்ள வேண்டும்' என, டில்லி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளி ஒருவர், பித்தப் பையில் இருக்கும், கல்லை அகற்றுவதற்காக சேர்ந்தார். பணம் பறிப்பதற்காக, நோய் குணமடைந்த பின்னரும், அவரை மருத்துவமனையில், பல நாட்கள் தங்க வைத்தனர். இது தொடர்பான வழக்கு, டில்லி நுகர்வோர் கோர்ட்டில் நடந்தது. நுகர்வோர் கோர்ட் தலைவர், என்.ஏ.ஜைதி கூறியதாவது: மருத்துவ துறைக்கென, தொழில் தர்மம் உள்ளது. சமீபகாலமாக, இந்த தொழில் தர்மத்தை மீறி, சிலர் செயல்படுகின்றனர். நோயாளிகளிடமிருந்து, அதிக அளவில் பணத்தை பெறுவதற்காக, சிகிச்சை என்ற பெயரில், அவர்களை, அதிக நாட்கள், மருத்துவமனையில் தங்க வைக்கின்றனர். இதுபோன்ற கறுப்பு ஆடுகளால், மருத்துவ துறையின் கவுரவத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த விவகாரம், எங்களின் சட்ட வரையறைக்குள் இல்லை. எனவே, இதுபோன்ற கறுப்பு ஆடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, ஆலோசனை தெரிவிக்கிறோம்.மத்திய அரசும், இந்த முறைகேட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ துறை மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, நுகர்வோர் கோர்ட் தலைவர், ஜைதி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை