கூடங்குளத்தில் கடல்நீரை குடிநீராக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி| Dinamalar

கூடங்குளத்தில் கடல்நீரை குடிநீராக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி : கூடங்குளம் அணு மின் நிலையத்தில், கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலையை செயல்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், கடற்கரை ஒழுங்கு முறை பகுதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட உள்ள, அணு மின் நிலையத்தின் குடிநீர் தேவைகளுக்காக, 65 கி.மீ., தொலைவில் உள்ள, பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்து வர முதலில் திட்டமிடப்பட்டது. அதில், பல சிக்கல்கள் ஏற்பட்டதால், கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தின் அருகிலேயே, கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கான தொழிற்சாலை கட்டப்பட்டது. நான்கு கொதிகலன்களுடன், அணு உலைக்கு தேவையான நல்ல தண்ணீரை உற்பத்தி செய்யும் அந்த தொழிற்சாலை, கடற்கரையிலிருந்து, 500 மீட்டருக்குள் இருந்ததால், கடற்கரை ஒழுங்குமுறை பகுதி விதிமுறைகளை சுட்டிக்காட்டி, ஆலை செயல்பட ஒப்புதல் கிடைக்காத நிலை இருந்தது. கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் சில நாட்களில் செயல்பட உள்ள நிலையில், கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலை செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மத்திய அரசின், சுற்றுச்சூழல் துறையின், உயர்மட்டக்குழுக் கூட்டம் சமீபத்தில் கூடியது. அதில், கடற்கரை ஒழுங்குமுறை பகுதி விதிமுறைகளை தளர்த்தி, கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலை செயல்பட பரிந்துரை வழங்கப்பட்டது. கடல் நீரை எடுத்து, அதையே குடிநீராக மாற்றிக் கொள்ள, இந்த ஆலையில் வசதி உள்ளது. கூடங்குளம் அணு உலை செயல்படும் போது, வெளியாகும், யுரேனியம், புளுட்டோனிய கழிவுகள், கடலில் விடப்பட உள்ளன. இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அந்தப் பகுதியில், கடல் நீரை எடுத்து, குடிநீராக மாற்றும் போதும், எந்த பாதிப்பும் ஏற்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்; அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகள், கடலில் கலக்கும் இடத்தில், தண்ணீர் தரத்தை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201315:02:01 IST Report Abuse
Thangaraj 14350 கோடியும் மேலும் இப்போது ஒரு 4000 கோடி ஆக மொத்தம் 18850 கோடி ரூபாயை விதைத்தும் 25 ஆண்டுகல் ஆகியும் ஒரு குண்டு பல்பை எறிய வைக்கும் அளவு மின்சாததை கூட கூடங்குளம் என்னும் அணு மின்னிலயதால் உற்பத்தி செய்ய முடிய வில்லை, ஆனால் குஜராத்தில் நர்மதா ஆத்து கால்வாயில் மோடி அரசு அமைத்த சூரிய மின் சக்தி திட்டம் தொடங்கிய 1000 நாளுக்குள் அதன் உற்பத்தியை தொடக்கி விட்டது.. கூடங்குளத்தை ஒப்பிடும் போது மிக குறைவான செலவு தான், (1 MW =1.74 கோடி) இப்பொது கூடன்க்குலத்தில் மேலும் 40000 கோடி செலவில் ரசியாவில் இருந்து 2 அணு உலைகள் இறக்குமதி செய்ய படுமாம்....இப்போதாவது புரிகிறதா சூரிய ஒளி , காற்றாலை போல சிறிய திட்டங்கள் அமைத்து விட்டால் அணு உலைகலை வெளி நாடுகளில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய முடியாது, பிறகு நம் ஊழல் அரசியல் வியாதிகளுக்கு கோடிகளில் கமிசனும் கிடைக்காது...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201315:01:18 IST Report Abuse
Thangaraj நம் அரசியல் வியாதிகள் கமிஷன் வாங்காமல் எந்த திட்டமும் நிறைவேற்றமாட்டார்கள் எவனிடம் வாங்கிய காசுக்கு இங்குள்ளவர்களை பலிகடா ஆக்குவது புதிதா என்ன? இன்றுவரை போபால் விஷவாயுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டனை பெறவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை எவன் எக்கேடு கெட்டு போனாலும் என் வீட்டில் விளக்கெறிய வேண்டும் நினைக்கும் பாவி மக்கள் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
15-ஏப்-201311:09:28 IST Report Abuse
saeikkilaar தங்கராசு அடுத்த உதயகுமார் நீங்கதான் போங்க ????
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
15-ஏப்-201308:45:05 IST Report Abuse
PRAKASH அதெலாம் இருக்கட்டும் .. முதல கரண்ட் எப்போ வரும்னு சொல்லுங்க
Rate this:
Share this comment
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201314:56:54 IST Report Abuse
Thangarajபல முறை பஞ்சர் மேல் பஞ்சராகி கிடக்கும் இந்த அணு உலையின் தரத்தை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இன்னும் கூட.. டச்சிங்.. டென்டிங்.. வெல்டிங் வேலை பாக்கியிருக்காம்... திடீர் திடீரென்று வெடி சத்தத்துடன் புகை கக்குகிறதாம் நம்ம அணு உலை. இதே நிலை தொடர்ந்தால்..பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம் கூட கிடைக்காது நம்ம அணு விஞ்ஞானி நாசா( நாராயணசாமி) பல முறை தேதி குறித்தும்..சின்ன சின்ன லீக்கேஜ் மேட்டர்னால அணு உலை மூடிக்கிடக்கு..இது பயன்பாட்டுக்கு வரும்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களுக்கில்லை.. வேண்டுமானால் பெயருக்கு ஒரு சில நாட்கள் ஊரை ஏமாதுவதர்காக ஓட்டி விட்டு, பிறகு பராமரிப்பு பணிகள் நடக்கிறது என்ன அப்படியெ போட்டு காலத்தை கடத்துவார்கள்.......
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201308:07:19 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இந்த குடிநீர் திட்டம் எப்போது செயல் படும் என்று அடுத்தவாரம் நாராயணசாமி அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201303:19:44 IST Report Abuse
Thangaraj எல்லோரும் அனுமதி வாங்கி கட்டுவார்கள், இவர்கள் மட்டும் கட்டி விட்டு அனுமதியை வாங்கி கொள்வார்கலாம், என்ன சட்ட திட்டங்களோ என்ன ஜனநாயகமோ?
Rate this:
Share this comment
Dubuk U - Bangalore,இந்தியா
15-ஏப்-201314:07:24 IST Report Abuse
Dubuk Uமன்னிக்கவும் 2 கேள்விகள் என்னால் கேட்டகாமல் இருக்க இயலவில்லை, இது மத்திய அரசின் திட்டம் தானே, இத்தனை நாள் தி மு க என்ன செய்தது? நிலை இப்படி இருக்க ஏன் 2008இல் தி மு க அணுக்கரு உலை விபத்து இழப்பீடு சட்டதிற்கு ஏன் ஆதரவு அளித்தது?...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201303:09:23 IST Report Abuse
Thangaraj அணு மின் நிலையத்திற்கு வாழ்நாள், 30-40 வருடங்களே ஆகும். அதற்குப் பிறகு அணுமின் நிலையத்தை மூடுவதற்கு அதற்கும் மேல் செலவாகும். கூடங்குளத்தில் உருவாகும் கதிர்வீச்சு மிக்க புளுடோனியம் கழிவை எப்படி பாதுகாப்பாக அகற்ற போகிறார்கள் என்பது பற்றி இதுவரை தெளிவான விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. இப்படி எல்லா வகையிலும் பிரச்சனையாக உள்ள அணுஉலையை உடனடியாக மூட அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201303:03:22 IST Report Abuse
Thangaraj எல்லா மாநிலங்களும் அணு உலை திட்டத்தை நிராஹரித்த நிலையில் இருபத்தி ஐந்து அன்டுஹளுக்கு முன்பு அணு உலை பற்றிய அறிவு, விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி அந்த அப்பாவி மக்களின் எதிர் காலத்தை சிறிதளவும் கண்டு கொள்ளாமல் இந்த திட்டத்தை ஆரம்பித்து விட்டு , இப்போது தங்களுக்கும் தங்கள் சந்ததிகள்கும் இந்த அணு உலை ஆபத்தாக அமைய போஹிறதோ என்ற அச்சத்தில் போராடும் மக்களை சொஹுசு மாளிஹையில் இருக்கும் அரசியல் வாதிகள் விமர்சிப்பது தான் வேதனைக்குரியது
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-ஏப்-201307:07:35 IST Report Abuse
ஆரூர் ரஙஉங்க ஊர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மூடிவிட்டார்களா இல்லையா?...
Rate this:
Share this comment
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201314:04:16 IST Report Abuse
Thangarajகடந்த எட்டு மாதங்களுக்கு முன் அணு உலை முற்துகையின் போது நடந்த கலவரத்தை காரணம் காட்டி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் மற்றும் அதனை சுத்திய சுமார் 10 கிராமங்களில் டாஸ்மார்க் கடைகளை அடைத்தே வைத்திருந்தார்கள், மறுபடியும் இப்பொது திறந்து ஒரு சில நாட்கள் தான் ஆகிறது.... குடிகாரர்களுக்கு பெரிய அடி, 80 ருபாய் பீரை 150 ருபாய் கொடுத்ததும் வாங்கும் அவல நிலை, இப்படி பொது மக்கலின் இயல்பு வாழ்க்கையை கெடுத்து அணு உலை அவசியம் தானா? இந்த 10 கிராமங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இல்லை, மாவட்ட சாலையில் தான் உள்ளது.......
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201303:02:53 IST Report Abuse
Thangaraj பெரும்பாலான மக்கள் உண்மை நிலை தெரியாதவர்களாக இருகிறார்கள் ,காரணம் மக்கள் எந்த பிரச்சனைகளையும் ,மதத்தாலும் ,ஜாதியாலும் ,கட்சியாகவும் பார்கிறார்கள் ,இதில் பல பேர் யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு தேவை பூர்த்தி யாகனும் ,,அரசியல் வாதி மிரட்டி பணிய வைக்கிறான் ,உண்மையான தீவிரவாதி இவர்களே
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
15-ஏப்-201303:02:22 IST Report Abuse
Thangaraj கூடங்குளம் உண்மை நிலை நிறைய மக்களுக்கு தெரிய வில்லை என்பதால் அரசியல் புள்ளிகள் அவர்களின் சொந்த நலனுக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள் அருகில் இருக்கும் எங்களை போன்ற மக்கள் பாவம் செய்தவர்களா எப்படியோ நல்லது மட்டுமே நடக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை