இரண்டு மகள்களுடன் இந்திய பெண் லண்டனில் மர்ம மரணம்| Dinamalar

இரண்டு மகள்களுடன் இந்திய பெண் லண்டனில் மர்ம மரணம்

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த பெண், தன் இரு மகள்களுடன், லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார். லண்டனில் உள்ள உயர்நிலை பள்ளியில், ஆய்வக ஊழியராக பணியாற்றிவர் ஹீனா சோலங்கி, 34. இவரது கணவர் கல்பேஷ், 42. இவர்களுக்கு பிரிஷ், 4, ஜாஸ்மின், 9 என்ற, இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு நாட்களுக்கு முன், லண்டனில் இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ரசாயன வாயு கசியும் வாசனை வந்ததால், அண்டை வீட்டார் கதவுகளை மூடிக்கொண்டனர். கணவர் கல்பேஷ் வீட்டுக்கு வந்த போது, ஹீனாவும், இரண்டு மகள்களும் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக கல்பேஷ், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து சோதனை நடத்திய போது, சூட்கேசில் ஏராளமான சோதனை குழாய்களில், ரசாயனம் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஹீனா மரணத்தின் போது, அவரது மாமியார், மாமனார் உடன் இருந்துள்ளனர். ஹீனா மற்றும் அவரது மகள்களின் மரணம் குறித்து, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை