இளைஞரணி பதவி: அ.தி.மு.க.,வில் அதிருப்தி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளைஞரணி பதவி: அ.தி.மு.க.,வில் அதிருப்தி

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:அ.தி.மு.க., சார்பு அணியில், 50 வயதை கடந்த ஏராளமானோர், பல ஆண்டுகளாக இளைஞர் அணி, மாணவரணி செயலர், தலைவராக பதவி வகிக்கின்றனர். இது, தொண்டர்களை அதிருப்தியில் உள்ளாக்கியிருக்கிறது.அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெ., பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மீனவர் அணி, விவசாய அணி, இலக்கிய அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, உட்பட, ஏராளமான சார்பு அணிகள் உள்ளன. அ.தி.மு.க.,வில் பல ஆண்டு உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே, கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய பதவி கிடைக்கும். இதனால், கட்சியின் முக்கிய பொறுப்புகளில், 35 வயதுக்கு மேற்பட்டோர் நியமிக்கப்படுவதால், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு இளைஞர் அணி, மாணவர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை
நிலவுகிறது. ஆனால், அந்த பொறுப்புகளிலும், இன்னமும் வயதானவர்களே நீடிக்கின்றனர்.

இதனால், அ.தி.மு.க.,வில் இளைஞர்களின் நுழைவாயிலாக கருதப்படும் இளைஞர் அணி, மாணவரணியில் கூட, பல ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக உள்ள இளைஞர்களுக்கு பதவி கிடைக்காதது தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து, கட்சியினர் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க.,வில், இளைஞர், இளம்பெண்கள் பாசறையில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் சேர்க்கப்படுகின்றனர். அதே வயதிலுள்ளவர்கள் பொறுப்பாளர் களாக நியமிக்கப்படுகின்றனர். அதுபோல இளைஞர் அணி, மாணவரணியில், 35 வயதுக்கு உட்பட்டவர்களே மாநில, மாவட்ட, நகர செயலர், தலைவர் உள்ளிட்ட, பொறுப்பில் நியமிக்கப்பட்டால், பொருத்தமாக இருக்கும். இது, இளைய தலைமுறையினர் ஏராளமானோரை கட்சியில் சேர்க்க உதவும்.அ.தி.மு.க., இளைஞர் அணி, மாணவரணியில், 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே அதிக அளவில் உள்ளனர். கடந்த, 25 ஆண்டுக்கு முன், பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள் பதவிகளில் நீடிக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை