திருச்செந்தூர் முருகனுக்கு தங்க கிரீடம் காணிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகனுக்கு தங்க கிரீடம் காணிக்கை

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருச்செந்தூர் முருகனுக்கு தங்க கிரீடம் காணிக்கை

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகனுக்கு, சிங்கப்பூர் தொழிலதிபர், தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கினார்.தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நேற்று, கோவில்நடை, அதிகாலை, 3:00 மணிக்கு திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு, உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்ந்தன. ஏராளமான பக்தர்கள், குடும்பத்தினருடன் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று ”வாமி தரிசனம் செய்தனர். சிங்கப்பூர் தொழிலதிபர், ராஜ்குமார் - ஜெய் தம்பதினர், திருச்செந்தூர் கோவில் மூலவர் சுப்பிரமணியருக்கு, அணிவிப்பதற்காக, 1 கிலோ, 400 கிராம் கொண்ட, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள, தங்க கிரீடத்தை, காணிக்கையாக, கோவில் இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மணிகண்டனிடம் வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை