இன்று முதல் மீன்பிடிக்க தடை : ராமேஸ்வரம் கடற்கரை "வெறிச்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் மீன்பிடிக்க தடை : ராமேஸ்வரம் கடற்கரை "வெறிச்'

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்று முதல் மீன்பிடிக்க தடை : ராமேஸ்வரம் கடற்கரை "வெறிச்'

ராமேஸ்வரம்:இன்று முதல் 45நாட்களுக்கு, விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல தடை உள்ளதால், ராமேஸ்வரம் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.மீன் இனப்பெருக்கம், கடல் வளம் பாதுகாக்க, ஏப்.,15 முதல் மே 30 வரை, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை உள்ளது. இன்று முதல் தடை துவங்குவதால், ராமேஸ்வரம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள்,படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.கடலோர பகுதியில் உள்ள ஐஸ் பேக்டரி, லேத் பட்டறை, ஓட்டல்கள் மூடப்பட்டது. கடந்த ஏப்.,8 முதல், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், வேலை நிறுத்தம் செய்துவருவதால், வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்த, ஏராளமான மீனவ இளைஞர்கள் வேலை தேடி, கோவை, திருப்பூர், கேரளாவிற்கு சென்றுஉள்ளனர்.இதனால் ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை