வெறிநாய் கடித்ததில் 21 ஆட்டு குட்டிகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறிநாய் கடித்ததில் 21 ஆட்டு குட்டிகள் பலி

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வெறிநாய் கடித்ததில் 21 ஆட்டு குட்டிகள் பலி

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே, இளந்தோப்பு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், கிடை ஆட்டு குட்டிகளை, வெறிநாய்கள் கடித்து குதறியதில், 21 குட்டிகள் பலியாயின. 19 குட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.நேற்று காலை, 9:30 மணிக்கு, மேற்கு தொடர்ச்சி மலையடிவார புல்பத்தி காட்டில் இருந்து, இளந்தோப்பு பகுதியில் உள்ள தென்னந் தோப்பிற்கு, செம்மறி ஆட்டுகுட்டிகள் இடம் மாற்றப்பட்டன. தோப்பில், இரு குடில்களில், 40 குட்டிகளை அடைத்தனர்.பின், புல்பத்தி காட்டில் இருந்த, மற்ற குட்டிகளை கொண்டுவர, லோடு ஆட்டோவில் மேய்ப்பாளர் ராமர் மற்றும் ஆட்கள் சென்றனர்.

மீண்டும் வந்தபோது, ஆறு நாய்கள், குட்டிகளை கடித்து குதறிக்கொண்டு இருந்தன. நாய்களை விரட்டிவிட்டு, பார்த்தபோது, ஆங்காங்கே இருந்த கடிபட்ட, 21 குட்டிகள் ஒவ்வொன்றாக இறக்க துவங்கின. 19 குட்டிகள், தோப்பின் ஓரத்தில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தன.இது குறித்து ராமர் கூறியதாவது:இது போன்ற சம்பவத்தை நாங்கள் சந்தித்தது இல்லை. கழுத்து, கால் என, கடித்து குதறியதால், தோப்பிற்குள் ஆங்காங்கே, என் கண் முன்னே ஓடி, குட்டிகள் இறந்தன. குடிலை ஓட்டை போட்டு, ஒவ்வொரு குட்டிகளாக, வெளியே எடுத்து, நாய்கள் கடித்து உள்ளன.சிறிது நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. காயம் அடைந்த குட்டிகளையும், காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை