தேசிய நெடுஞ்சாலை "டாஸ்மாக்' கடைகளை மூடாமல் அலட்சியம் :வருவாய் பாதிக்கும் என முட்டுக்கட்டை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலை "டாஸ்மாக்' கடைகளை மூடாமல் அலட்சியம் :வருவாய் பாதிக்கும் என முட்டுக்கட்டை

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோர்ட் உத்தரவிட்ட போதிலும், அ.தி.மு.க.,வினரின் நெருக்கடியாலும், அரசின் வருவாய் பாதிக்கும் என்பதாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடுவதற்கு, அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.அர” நடத்துகிறதுதமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளில் தனியார் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தனியார் நடத்த வேண்டிய, மதுபான கடைகளை, அரசு ஏற்று நடத்தி வருகிறது. தமிழகத்தில், 6,600க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றின் மூலம் ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஒரு டாஸ்மாக் கடை மூலம், அரசுக்கு வருவாயாக, 3.70 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளை மார்ச், 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படுவதாக கணக்கிடப்பட்ட, 504 கடைகளில், இதுவரை, 400 கடைகள் மட்டும், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்கிறது. மீதி கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மீதியுள்ள, 104 கடைகள், தேசிய நெடுஞ்சாலைகளிலேயே செயல் பட்டு வருகின்றன.குற்றச்சாட்டு
ஐகோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தும், இன்னும், டாஸ்மாக் கடைகள் மூடப்படாமல் செயல்பட்டு வருகின்றன, என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மதுக்கடைகள் இடம் மாற்றம் செய்யப்படாதது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐகோர்ட் உத்தரவிட்ட பின், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டோம்.கிடைக்கவில்லைஆனால், அந்த கடைகளில் பார் வைத்துள்ள, அ.தி.மு.க., வினர் வேறு இடத்தில் கடை கிடைக்கவில்லை; கிடைத்தாலும் பார் வைக்க வசதி இல்லை, எனக் கூறி, டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.அதே போல், டாஸ்மாக் கடை மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால், தற்போதுள்ள சூழலில், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு விடும். இந்த காரணத்தால் தான், தேசிய நெடுஞ்சாலை டாஸ் மாக்கை மூட, அரசு தரப்பிலும் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதில், அதிகாரிகளின் தவறு இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.தேசிய நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றம் விவகாரத்தில், அடுத்தடுத்த, நடவடிக்கைகளை அரசு எடுத்து, முடிவுகளை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம், தற்போது ஏற்பட்டிருக்கிறது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை