E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்திய கம்யூ., தலைவரின் மனைவிக்கு மத்திய அரசு தியாகி பென்சன் வழங்கல் :உள்துறை அமைச்சக மனு தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
01:19

விழுப்புரம்:மறைந்த இந்திய கம்யூ., தலைவரின் மனைவிக்கு, மத்திய அரசின் தியாகி பென்சனை வழங்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், இந்திய உள் துறை அமைச்சகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.இந்திய கம்யூ., தலைவரும், தென்னிந்திய ரயில்வே லேபர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருச்சி பொன்மலை தலைவராக விளங்கியவர் இஸ்மாயில்கான்.இவர் கடந்த, 1988ம் ஆண்டு, தனக்கு தியாகிகள் ஓய்வூதியத்தை வழங்க கோரி, மத்திய, மாநில அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். இதில் மாநில அரசு மட்டும் ஓய்வூதியத்தை வழங்கியது. மத்திய அரசு பதில் கூறாமல் இருந்தது.2002ம் ஆண்டு பிப்., 24ம் தேதி, இஸ்மாயில்கான் விழுப்புரத்தில் இறந்தார். இதையடுத்து, அவரின் மனைவி பாத்திமா பிபி, ஓய்வூதியம் பெற்று வருகிறார். மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் தியாகிகள் ஓய்வூதியத்தை தரக் கோரி, பாத்திமா பிபி சென்னை ஐகோட்ர்டில், 2005ம் ஆண்டு, ரிட் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், தியாகிகள் ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்கிடுமாறு, 2005ம் ஆண்டு ஜூன், 16ம் தேதி உத்தரவிட்டார். இத்தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில், சென்னை ஐகோர்ட் "டிவிஷன் பெஞ்சில்' அப்பீல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள் எல்பிதர்மாராவ், வேணுகோபால் உள் துறை அமைச்சகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.பின்னரும் தியாகிகள் பென்ஷனை வழங்காமல், உள் துறை அமைச்சகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை கடந்தாண்டு, டிச., 3ம் தேதி விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சுதந்திரகுமார், முகோபாத்தியாயா பெஞ்ச் உள் துறை அமைச்சகத்தின் மேல்முறையீட்டு மனுவை, ஏற்கனவே தகுதியில்லாத ஒன்றென கூறி தள்ளுபடி செய்தனர்.இதையடுத்து, இந்திய உள் துறை அமைச்சகம் கடந்த, பிப்., 20ம் தேதி, மனுதாரர் பாத்திமா பிபிக்கு பென்ஷன் வழங்க அனுமதியளித்து, ஆணை வழங்கியது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201308:09:51 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஏன்? அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இல்லையா? அல்லது சிறுபான்மை விரோதம் காரணமாக இந்த மேல் முறையீடு செய்யப்பட்டதா?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.