கவுன்சிலரை தாக்கிய மூவர் மீது வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலரை தாக்கிய மூவர் மீது வழக்கு

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அடுத்த பெரமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரமோகன், 37. அவர், மோகனூர் யூனியன் கவுன்சிலராக உள்ளார். அவருக்கும், நாமக்கல் ஈ.பி., காலனியை சேர்ந்த செங்கோட்டுவேல், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மயில் சுந்தரம், செங்கப்பள்ளியை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கும் இடையே, டெண்டர் எடுப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு சந்திரமோகன், மணப்பள்ளி ஊராட்சி செயலாளர் பெரமாண்டை ஆகியோர், மணிக்கூண்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செங்கோட்டுவேல், மயில் சுந்தரம், செல்வம் ஆகியோர், கை மற்றும் கல்லால், இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில், சந்திரமோகனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து, நாமக்கல் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை