E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டியில் பொன்ஏர் திருவிழா கோலாகலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
07:23

எட்டயபுரம் :எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஒற்றுமைக்கு ஒரு திருவிழாவான பொன்ஏர் திருவிழா தமிழ்புத்தாண்டு தினத்தில் கோலாகலமாக நடந்தது.தமிழக கிராமங்களில் சித்திரை மாதத்தை வசந்த கால வரவாக கருதுகின்றனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் கிராமங்களில் சித்திரை மாதப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கரிசல் கிராமங்களில் விவசாயிகள் ஊர்கூடி நல்லநாள் பார்த்து ஜாதி, மத, பேதமின்றி அனைத்து விவசாயிகளும் இணைந்து பொன்ஏர் திருவிழாவை கொண்டாடு கின்றனர். ஊர்மக்கள் ஒன்று கூடி யார் நிலத்தில் ஏர்திருவிழா நடத்துவது என்று சீட்டு எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அரசர் நிலமாக இருந்தாலும் சாதாரண குடியானவன் நிலமாக இருந்தாலும் ஏர்திருவிழாவை அந்த நிலத்தில் நடத்துவர். ஏர்கலப்பைக்கு பூஜைகள் நடத்தி பொன்ஏர் திருவிழாவிற்கு ஊர்வலமாக புறப்பட்டு தேர்வு செய்யப்பட்டு நிலத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்யப்படும் ஏர்கள் நிலத்தில் இறங்கும் அந்த நிலத்தை பண்படுத்திவிட்டு திரும்புவர். இப்படிப்பட்ட ஒற்றுமைக்கு ஒரு திருவிழாவான பொன்ஏர் திருவிழா எட்டயபுரம் அருகே சுரைக்காய்ப்பட்டி கிராமத்தில் தமிழ்புத்தாண்டு தினத்தன்று நடந்தது.விழாவிற்கு முன்னாள் பஞ்.,தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார். விவசாயிகள்சிவஜோதிமணி, அழகர், செல்வராஜ், தர்மராஜ், சுந்தர்ராஜ், ராகுரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாலையில் ஏர் கலப்பைகளையும், டிராக்டர்களையும் குளிப்பாட்டி, பொட்டிட்டு விவசாயிகளின் அவரவர் தொழுவத்தில் பூஜைகள் நடத்தினர். விவசாயிகள் ஒன்று கூடி முத்துராமலிங்கம் மாட்டு தொழுவத்தில் மஞ்சள் பிள்ளையார் வைத்து குத்துவிளக்கு ஏற்றி குங்குமம், சந்தனம், சாத்தி தேங்காய், பழம் நிறை நாளியல் நவதானியங்கள் வைத்து கூட்டுசிறப்பு பூஜை நடந்தது. ஞாயிறு, வெள்ளி மேற்கு சூலம் ஆதலால் ஊருக்கு ஈசான மூளையில் விவசாய ராமமூர்த்தியின் நிலம் தேர்வு செய்யப்பட்டது.பெண்களின் குரவையொலி முழங்க தச்சர்கள் காளிராஜ், செல்வராஜ், ஏர் கலப்பைகளை வணங்கி பொன்ஏர் திருவிழாவை துவக்கி வைத்தனர். நவீன காலமானதால் முற்றிலும் டிராக்டர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்த நிலத்தை உழுது விதை விதைத்தனர்.ஏர்திருவிழா நடந்த நிலத்தில் ஒவ்வொருவரும் ஒரு பிடி மண் எடுத்து தங்களுடைய நிலத்தில் கொண்டுபோய் தூவினர். இப்படி செய்தால் அந்த நிலங்கள் நன்றாக விளையும் என்பது ஐதீகம். விவசாயிகளுக்கு ஊரின் எல்லையில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.புளி, கருப்பட்டி கலந்து தயாரித்த பானைக்காரம், நீர், மோர் குளிர்பபானங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏர் திருவிழாவில் வெற்றிகரமாக பங்கேற்ற தங்களின் முறைமாப்பிள்ளை மற்றும் மாமன், மச்சான் முறை கொண்டோருக்கு பெண்கள் மஞ்சள்நீராட்டு நடத்தினர். ஊர் உண்டானதிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் பொன்ஏர் திருவிழா நடத்தி வருகிறோம் என பெரியவர்கள் பெருø




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.