Advertisement
பரபரப்பு நாகர்கோவிலில் அதிகாலையில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
07:24

நாகர்கோவில்:நாகர்கோவிலில் இருந்து திருப்பதிவழியாக மும்பை செல்லும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவிலில் இருந்து திருப்பதி வழியாக மும்பைக்கு திருப்பதிஎக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று காலை 4.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மதுரை ரயில்வே பாதுகாப்பு படை காமாண்டர் கண்ணன் என்பவரது செல்போனில் பேசிய நபர் நாகர்கோவிலில் இருந்துபுறப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதனால் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதனையடுத்து டி.எஸ்.பி.,க்கள் உதயகுமார், சங்கரநாராயணன் ,மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன், ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே ஸ்டேசனில் அதிரடி சோதனையில் இறங்கினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடம் விரைந்துவந்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் ரயில்வே தண்டவாளம், பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். மேலும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் சோதனை செய்யப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வந்த அனைத்து ரயில்களும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
ரயில்வே ஸ்டேசனில் இருந்த பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது. இது போன்று கன்னியாகுமரியில் இருந்து கேரளா வழியாக மும்பை செல்லும் ரயிலையும் போலீசார் சோதனை நடத்தினர். சுமார்3மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு இல்லை எனவும் புரளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.இருப்பினும் காலை நாகர்கோவில் வந்த ரயில்கள் அனைத்தும் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் ரயில்கள் தாமதம் இன்றி வழக்கமான நேரத்தில் இயக்கப்பட்டது.இது குறித்து மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் கூறும்போது;-மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாகர்கோவில் ரயில்வே ஸ்டேசனில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.