திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு வசதி சுற்றுலாதுறை அமைச்சர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு வசதி சுற்றுலாதுறை அமைச்சர் தகவல்

Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கடையநல்லூர்நபண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க உணவுக்கூடம், தங்குமிடம், மலைப்பாதையில் விளக்குகள் வசதி அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு வந்த சுற்றுலா துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் மற்றும் கோயில் பணியாளர்கள் அமைச்சரை வரவேற்றனர்.புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அமைச்சரிடம் செந்தூர்பாண்டியனிடம் மலைக்கோயில் முருகனை தரிசிக்க மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த பல மாதங்களாக ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்வதால் கோயில் வளாகத்தில் பக்தர்களின் நலனைகருத்திற்கொண்டு உணவு அருந்தும் இடமும், தங்கும் இட வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களின் வசதிக்காக விளக்குகள் வசதி மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.இதனை கேட்டறிந்த அமைச்சர் செந்தூர்பாண்டியன் திருமலைக்கோயிலில் அதிகமான பக்தர்களின் வருகையை கருத்திற்கொண்டு இந்து சமய அறநிலைய துறை மூலமாக உணவு அருந்தும் இடம் மற்றும் தங்குமிடம் வசதி செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும். தமிழக சுற்றுலா துறை மூலமாக கோயிலுக்கு பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு விளக்ககுள் வசதி செய்வதற்காக ஆலோசிக்கப்படும் என்றார்.தொடர்ந்த வரும் 2015ம் ஆண்டு திருமலைக்கோயில் திருக்குமரனுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முன்னாள் திருப்பணி குழு தலைவர் அருணாசலம் அமைச்சரிடம் தெரிவித்தார். இதற்கான அனைத்து பணிகளுக்கும் அறநிலையத்துறை நிர்வாகம் மூலம் உரிய வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்யப்படுமென அமைச்சர் உறுதியளித்தார். அமைச்சருடன் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, பண்பொழி பேரூர் செயலாளர் பரமசிவன், ஜின்னா, தென்காசி அட்மா தலைவர் முத்தழகு ஆகியோர் உடன் வந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201308:20:14 IST Report Abuse
S.RAJA பல ஆன்டுகளாக மலையின் மேல் வைத்துதான் அண்ணதான கூடம் செயல்பட்டு வந்தது- ஆனால் புதி்தாக வந்த இப்போதய கோவில் ஆணையர்/ இடத்தி்னை அடிவரப் பகுதி்யில் வைத்து உள்ளார் .இது எந்த கோவிலும் இல்லாத நடை முறையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை