சித்திரை தேர்த்திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்திரை தேர்த்திருவிழா

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆழ்வார்குறிச்சி:கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (16ம்தேதி) கொடியேற்றம் நடக்கிறது.கடையத்தில் இருந்த ராமநதிஅணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் வைத்து நடப்பது வழக்கம். கொடியேற்றம் மட்டும் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் வைத்து நடைபெறும். சித்திரை தேர்த்திருவிழாவிற்காக நாளை (16ம்தேதி) காலை 5மணிக்கு வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். நான்காம் திருநாளன்று ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தலும், 7ம் திருநாளன்று நடராஜர் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தலும், 8ம் திருநாளன்று நடராஜர் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தல் வைபவமும் நடக்கிறது. 9ம் திருநாளான (24ம்தேதி) காலை சுவாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் தேர்த்திருவிழாவும் நடக்கிறது. இரவு 9மணியளவில் அம்பாள் திருத்தேர் வீதிஉலா நடக்கிறது. 10ம் திருநாளன்று காலை புஷ்ப பல்லக்கில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தலும், தீர்த்தவாரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வள்ளியம்மாள், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன் மேற்பார்வையில் கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை