BJP won’t dump Modi for Nitish, NDA headed for split | நிதிஷின் மிரட்டலுக்கு செவி சாய்க்க பா.ஜ., மறுப்பு| Dinamalar

நிதிஷின் மிரட்டலுக்கு செவி சாய்க்க பா.ஜ., மறுப்பு

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
BJP, won’t dump, Modi ,for Nitish, NDA ,headed for, split, நிதிஷின், மிரட்டலுக்கு, செவி சாய்க்க, பா.ஜ., மறுப்பு

புதுடில்லி : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தால், தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்23குமார் விடுத்து வந்த மிரட்டலை பா.ஜ., புறக்கணித்துள்ளது. பிரதமர் வேட்பாளர் குறித்து பா.ஜ., தலைவர்கள் எவர் பெயரையும் தேர்ந்தெடுக்காத நிலையில் நிதிஷ்குமார், மோடியை குறி வைத்து தாக்கும் நோக்குடன் தொடர்ந்து பேசி வந்தார். தற்போது பிரதமர் வேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்‌க தேசிய ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு அவர் 8 மாத கால கெடுவையும் விதித்துள்ளார்.


நிதிஷ் மிரட்டல் பேச்சு :

வாஜ்பாய் தலைமையின் கீழ் கட்சி முறையாக செயல்பட்டு வந்தது; அதனால் பீகாரில் எங்களின் கூட்டணி அமைதியான முறையில் நீடித்து வருகிறது; அதே சமயம் மத சார்பற்ற கொள்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது; வாஜ்பாய், ராஜ தர்மத்தை கடைபிடித்ததால் அவர் பிரதமராக இருக்க முடிந்தது; அவரின் கருத்துப்படி பார்த்தால் மோடி, கோத்ரா கலவர வழக்கை சந்தித்து வருகிறார்; அவர் பிரதமர் வேட்பாளர் ஆவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்; பா.ஜ., தனது பிரதமர் வேட்பாளரை வெகு விரைவில் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்க வேண்டும்; பா.ஜ.,வின் அறிவிப்பை பொறுத்தே எனது கூட்டணியை நான் தீர்மானிக்க உள்ளேன். இவ்வாறு ஐக்கிய ஜனதா தள கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.


பா.ஜ., மறுப்பு :

மோடியை முன்னிறுத்தியே தேர்தல் பிரசாரம் நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ள நிலையில் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரமில்லாமல் அனுமானங்களின் அடிப்படையில் மோடிக்கு எதிராக கூறப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் நிதிஷ் குமாரின் எதிர்ப்பு வலுக்க வலுக்க, மோடி மீதான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், 2014 தேர்தலில் மோடியை முன்னிறுத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றலாம் எனவும், பீகாரில் 20 இடங்களை கைப்பற்றலாம் எனவும் பா.ஜ., பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


அத்வானிக்கு ஆதரவு :

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் மோடியை எதிர்க்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு ‌தனது முழு ஆதரவையும் அளித்து வருகிறது. இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் தேவேஷ் சந்திர தாகூர் கூறுகையில், அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது; அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட போது கட்சியில் எவ்வித பிளவும் ஏற்படவில்லை; அனைத்து வகையில் ஏற்றுக் கொள்ள கூடிய தலைவர் அத்வானி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் வாஜ்பாய் போன்ற ஒருவராக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியை பொறுத்தவரை மோடி 6 அல்லது 7வது ரேங்கிலேயே இருக்கிறார் எனவும், முதிர்ச்சி அடிப்படையில் அத்வானி தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yogi - kathmandu,நேபாளம்
16-ஏப்-201300:36:12 IST Report Abuse
yogi மதசார்பின்மை பேசும் நிதிஷ் என்ன மிருக்கு பிஜேபி துணையோட அட்சியில் இருக்கவேண்டும் . இந்துகள் மட்டும்தான் இந்தியாவில் மதவெறியர்கள?
Rate this:
Share this comment
Cancel
Nasur Deen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201300:10:12 IST Report Abuse
Nasur Deen நேற்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாடை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ.... "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது.ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை.முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும்.அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது.பலகிராமங்களில் அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர்.ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும்.இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா? நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாது.சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்றநிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாஇல்லை. இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள்.நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்த்திகளை மக்கள் ஒருநாள் துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
selvam - tirunelveli,இந்தியா
15-ஏப்-201315:34:41 IST Report Abuse
selvam modi is best for priminister candidate
Rate this:
Share this comment
Cancel
Vignesh Vigneshwaran - Coimbatore,இந்தியா
15-ஏப்-201314:42:37 IST Report Abuse
Vignesh Vigneshwaran MODI iS BEST FOR PM
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
15-ஏப்-201314:19:45 IST Report Abuse
S.Govindarajan. காங்கிரஸ் வலையில் நிதீஷ் விழுந்து விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
15-ஏப்-201313:43:41 IST Report Abuse
Mohamed Nawaz பிஜேபி யின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அத்வானியின் ரத யாத்திரைகல்தான் ஆனால் அவர் இப்போது வெளியே தள்ளபடுகிறார். இதுதான் எல்லா விஷயங்களிலும் பாஜகவின் நிலைபாடாக இருக்கும் என்று தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
15-ஏப்-201313:10:55 IST Report Abuse
amukkusaamy இப்பொழுதே இந்த மாதிரி கலாட்டாக்கள் வெளி வருவது நல்லது. பிஜேபி க்கு பிற்காலத்தில் பிரச்னை வராது.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
15-ஏப்-201313:07:31 IST Report Abuse
amukkusaamy நிமிர்ந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது மோடி ....இந்த ஜுஜுபி குமாரை எல்லாம் தூக்கி எறிக. தனித்து நில்லுங்கள் என்ன ஆனாலும் சரி.
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
15-ஏப்-201313:04:52 IST Report Abuse
K.SURIYANARAYANAN நிதிஷ் சொல்லவதை ஏற்க்கமுடியாது . பீகாரில் இரண்டு கட்சிகளும் ஒன்றாய் இருப்பதில் தான் மீண்டும் வர முடிந்தது. இல்லையென்றால் ஊழல் லாலு தான் வாருவார். மோடி வந்தாலும் ஒன்று தான் அத்வானி வந்தாலும் ஒன்று தான்
Rate this:
Share this comment
Cancel
kovai thamizan - coimbatore,இந்தியா
15-ஏப்-201312:30:19 IST Report Abuse
 kovai thamizan மோடி பிரதமர் பதவிக்கு சரியானவர் அவர் இல்லை என்றால் பிஜேபி ஆட்சிக்கு வருவது கடினம்.எனவே நிதிஷ்குமாரின் மிரட்டலுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை