Humanity shamed in Jaipur, two left to die on road | மனைவி, மகளை இழந்த நபருக்கு யாருமே உதவ முன்வராத கொடூரம் | Dinamalar
Advertisement
மனைவி, மகளை இழந்த நபருக்கு யாருமே உதவ முன்வராத கொடூரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெய்ப்பூர் :ஜெய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில், இருவர் இறந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, ஒருவரும் முன்வராத, மனிதநேயமற்ற, நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவையும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரையும் இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில், 2 கிலோ மீட்டர் நீளமுள்ள, "காட் கி குனி' என்ற சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. இதில், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

இந்நிலையில், நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர், தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இந்தச் சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்றவரின் மனைவியும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.படுகாயத்தடன் தப்பிய, அந்த நபர், தன் மகனை கையில் பிடித்தபடி, உயிருக்கு போராடியவாறு, அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி, உதவி செய்யும்படி கெஞ்சினார்.

ஆனாலும், அவர் மன்றாடுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், வாகனங்கள், அசுர வேகத்தில் பறந்து சென்றன. இதனால், அந்த நபர், தலையில் கைவைத்தபடி, சாலையிலேயே அமர்ந்து பதறியது பரிதாபமாக இருந்தது.பின் எப்படியோ போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (54)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
16-ஏப்-201321:43:37 IST Report Abuse
தமிழ் குடிமகன் நாகரிகம் பெருக பெருக மனித நேயம் தேய்கிறது .........................என்னத்த சொல்ல .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
16-ஏப்-201318:46:34 IST Report Abuse
S  T Rajan சே என்ன பொழப்பு ....மக்களுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்க கூடாது.......
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஏப்-201313:20:33 IST Report Abuse
Nallavan Nallavan நெகிழ வைத்த சம்பவம் ....
Rate this:
56 members
0 members
4 members
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
16-ஏப்-201313:17:21 IST Report Abuse
Yoga Kannan நீதி மன்றமே இப்படி விபத்து நடக்கும் போது தயங்காமல் உதவி செய்யுங்கள் என்று அறிவிப்புகள் கொடுத்தும் ,,,, நெஞ்சில் ஈரமில்லாத மாக்களாகிவிட்டோம்.....
Rate this:
5 members
0 members
21 members
Share this comment
Cancel
Sairam Sairam - muscat,ஓமன்
16-ஏப்-201313:07:23 IST Report Abuse
Sairam Sairam மனிதன் செத்து பல வருஷம் ஆகிவிட்டது... இன்று எனக்கு நாளை உனக்கு.... மறவாதை மனித மனிதத்தை....
Rate this:
0 members
0 members
46 members
Share this comment
Cancel
siruppanikoothan - canberra ,ஆஸ்திரேலியா
16-ஏப்-201313:03:56 IST Report Abuse
siruppanikoothan கலி பிறந்து வளர்ந்துவிட்டான் இப்பொழுது நல்ல வேலை செய்கிறான் கல்கி வரும்வரை அவன் ஆட்டம் ஓயாது
Rate this:
4 members
1 members
20 members
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
16-ஏப்-201312:51:42 IST Report Abuse
cku மனிதாபிமானம் இருந்தாலும். பின்விளைவுகளுக்கும் தனிமனித பலம் / உரிமை குறைந்த இந்த நாட்டில் உதவ ஒரு சாமானிய மனிதன் வர தயங்குவது உண்மை தான். இவ்வாறு உதவுவதை பொது அமைப்புகளும் அரசும் ஊக்குவிக்கலாம்.
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
16-ஏப்-201312:36:18 IST Report Abuse
Kuwait Tamilan மனித நேயத்தை குழந்தை பருவம் முதலே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லித்தரவேண்டும். அரசாங்கமும் காவல்துறை மூலம் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தவேண்டும் மாதம் ஒருமுறை.
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
16-ஏப்-201320:11:30 IST Report Abuse
Chenduraanமனித நேயத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோரே இப்போது சுயநலத்தை தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாளைக்கு நமக்கும் இதே நிலைமை தான் வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் நமக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள். ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
16-ஏப்-201312:24:16 IST Report Abuse
Janaki raman Pethu chetti ஒரு எறும்பு முடியாமல் கிடந்தால் கூட மற்ற எறும்புகள் அதனை இழுத்து சென்று தனது வாழ்விடத்துக்குள் கொண்டு விடும். இந்த மனிதர்களின் குணத்துக்கு மனிதாபிமானம் என்று எப்படி பெயர் வந்தது?
Rate this:
0 members
0 members
36 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
16-ஏப்-201312:10:37 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மனித நேயம் = ????
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்