TESO to move SC against 1974 agreement on Katchatheevu | கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் அணுக "டெசோ' முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் அணுக "டெசோ' முடிவு

Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (125)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் அணுக "டெசோ' முடிவு,TESO to move SC against 1974 agreement on Katchatheevu

சென்னை:"கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், இந்தியாவின் ஒரு பகுதி என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்' என, "டெசோ' அமைப்பு அறிவித்துள்ளது.

டெசோ அமைப்பின் சார்பில், கலந்துரையாடல் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவை பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.

எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை, டெசோ அமைப்பு அணுகும். காரைக்காலை சேர்ந்த, 26 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு, அவர்களின் சிறைக்காவல், இம்மாதம், 19ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில், மத்திய அரசு ஈடுபட வேண்டும். டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம், இம்மாதம் 24ம்தேதி, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
18-ஏப்-201313:05:54 IST Report Abuse
MUTHUKUMAR S 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால், மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமலே, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது . அப்போது தமிழக ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கறுப்பு தினமும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அப்போதைய மத்திய காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலத்தினால், பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில்கூட கச்சத் தீவு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இன்றுள்ள மாதிரி மத்தியில் மாநிலக் கட்சிகளின் தாக்கம் அன்று இல்லாததும் ஒரு காரணம். தமிழக அரசும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருந்தாலும், டெசோ போன்ற இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக போராடும் அமைப்பும் வழக்கு தொடர்வது, வழக்கிற்கு வலுசேர்ப்பதாக அமையும் என்பது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201300:54:44 IST Report Abuse
Vanavaasam இந்த டெசோ ஒரு தி மு க வின் எதிர்ப்பு அமைப்போ? அடுத்து இந்த டெசோ அமைப்பு ' 2 G ஊழல்' செய்தவர்களை , குற்றவாளிகளை ஆயுள் தண்டனை அளிக்க கோரும் என்று தோன்றுகிறது ..
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
16-ஏப்-201322:39:35 IST Report Abuse
g.k.natarajan 1)கட்சைதீவு இவர்கள் ஆட்சியின்போது கொடுக்கப்பட்டது 2] இவர்கள் இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அல்லது தமிழகத்தில் ஆட்சி செய்தபோது ஒரு நடவடிக்கையும் இல்லை. 3]இப்பொழுது டெசோ என்று ஒன்று முளைத்து, அதில் முடிவு, கோர்ட் ,கேசு? அதுவும் தமிழக அரசாங்கமே கோர்டில் கேஸ் போடுவது என்ற முடிவை எடுத்த பிறகு??/ வேடிக்கையாக இருக்கிறது இவர் நடவடிக்கை?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
16-ஏப்-201322:32:57 IST Report Abuse
rajan தலைவரு ரொம்பவே கொந்தளிகிறாரு இலங்கை தமிழனுக்கா இல்லை மீனவர்கள் ஒட்டுக்ககவோ. ஒய்வு எடுக்காம தலிவரு ரொம்பவே உழைகிராறு இப்போ காலம் போன போகில.
Rate this:
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
16-ஏப்-201320:48:42 IST Report Abuse
rajaguru அடுத்த மிக பெரிய புஸ் வானம் தயாராகி விட்டது. அதன் பெயர் கட்ச தீவு வெளியீடு டெசோ
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
16-ஏப்-201320:39:40 IST Report Abuse
m.viswanathan இப்படி எல்லாம் பேச இவருக்கோ , இவரை ஆதரித்து இன்னும் பின் செல்கின்றவர்க்கு வெட்கமே இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
PRABA - Manama,பஹ்ரைன்
16-ஏப்-201319:59:49 IST Report Abuse
PRABA டெசோ வின் நோக்கமே ஈழ தமிழர்களின் பிரச்னைகாக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கச்சதீவை மீட்கும் முயற்சி தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக. டேசொவின் நோக்கம் என்ன ஆனது . .டேசொவின் நோக்கம் சாதிக்கப்பட்டு விட்டதா. . .? தி.மு.க. என்ற ஓர் இயக்கம் துயிலில் இருந்து மீளவில்லையா.? பின் ஏன் இந்த குழப்பம்.
Rate this:
Share this comment
Cancel
PRABA - Manama,பஹ்ரைன்
16-ஏப்-201319:15:53 IST Report Abuse
PRABA
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
16-ஏப்-201318:46:58 IST Report Abuse
maravan உங்களால் கச்சா தீவிலிருந்து ஒரு கல்லை கூட வாங்கமுடியாது...உங்களுக்கு எந்த அதிகாரமின்றி இருக்கும் நீங்கள் என்ன செய்துவிடமுடியும்.. அதிகாரத்தில் இருந்தபோது உங்கள் சொந்தங்களின் ஊழலை மறைக்க எல்லாத்தையும் விட்டுகொடுத்துவிட்டு இப்போது நல்லவர் போல ஏன் இந்த நாடகம்....உங்கள் நாடகம் மேடை ஏறாது...வேறு குடும்ப வேலை இருந்தால் பாருங்கள்...உங்கள் பேரனோடு காலத்தை ஒட்டுங்கள்....மறவன்
Rate this:
Share this comment
Cancel
arun.subramaniyam - LA, Cali,இந்தியா
16-ஏப்-201317:09:03 IST Report Abuse
arun.subramaniyam நாங்க தான் குற்றவாளி.. நாங்க செஞ்சது மாபெரும் தப்பு தேச துரோகம் இப்டி சொல்லிக்கிட்டு சுப்ரீம் கோர்ட் போன முதல் ஆள் நம்ம 'மஞ்ச துண்டு' தான் ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஏப்-201320:38:08 IST Report Abuse
சு கனகராஜ் பிள்ளையை கிள்ளி விடவும் தெரியும் தொட்டிலை ஆட்டி விடவும் தெரியும் 75 ஆண்டுகால அரசியலாச்சே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை