E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களில் மூக்கை நுழைக்காதீங்க: முதல்வர் ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

16 ஏப்
2013
00:36
பதிவு செய்த நாள்
ஏப் 15,2013 23:49

"மாநில அரசிடம் உள்ள, போலீஸ் அதிகாரங்களை குறைக்கும் வகையிலான, மத்திய அரசின், எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் எந்த நடவடிக்கையையும், முழு மூச்சுடன் எதிர்ப்போம்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

"பொது ஒழுங்கு' குறித்த, மாநில முதல்வர்களின் மாநாடு, டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில், அவரின் ஆங்கில உரையை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, அப்படியே வாசித்தார்.

உரையில், முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:வீரப்ப மொய்லி குழு அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்துமே, காலாவதியானவை. தற்போதைய சூழலுக்கு, எந்த வகையிலும் ஒத்து வராதவை. சட்டம் - ஒழுங்கு என்பது, எப்போதுமே, மாநில அரசுகளின் கைகளில் தான் இருக்க வேண்டும். அந்த விவகாரங்களில், மத்திய அரசு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மூக்கை நுழைக்கும் செயல் ஏற்கத்தக்கது அல்ல; இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


திணிக்க கூடாது :




மொய்லி குழுவின் பரிந்துரைகளை எல்லாம், யோசனைகளாகவே ஏற்க வேண்டும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அரசுகள், தங்களின் வசதிக்கேற்ப, புதிய சட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், இந்தப் பரிந்துரைகளை, மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது.ஒரு மாநிலத்திற்குள், துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் எனில், அந்த மாநில அரசிடம், மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்பது தற்போதுள்ள நடைமுறை. இதை மாற்றும் வகையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே, ராணுவத்தை அனுப்ப, மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது; இதை கடுமையாக எதிர்க்கிறேன்.மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யை, மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக, பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளதையும் ஏற்க முடியாது. தற்போதுள்ள நடைமுறையே போதுமானது. மாநில அரசின் அனுமதியோடுதான், சி.பி.ஐ., எந்தவொரு வழக்கையும் கையில் எடுக்க வேண்டும் என்ற நிலை தொடர வேண்டும்.


ஒருமித்த கருத்து :




எந்தவொரு மாற்றமாக இருந்தாலும், அதுபற்றி அனைத்து மாநில அரசுகளுடனும் கலந்து ஆலோசனை செய்து, ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே, முடிவு எடுக்க வேண்டும்.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக, 2012 ஏப்ரலில் நடைபெற்ற, இதேபோன்ற மாநாட்டில் கடும் எதிர்ப்பை தெரிவித்தேன். அதன்பின், அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டது. தற்போது, சட்டம் - ஒழுங்கு விஷயத்திலும், மொய்லி குழு பரிந்துரைகள் என்ற பெயரில், மூக்கை நுழைக்கிறது; இதையும் ஏற்க முடியாது.


தனி அமைப்பு :




குற்றச் சம்பவங்கள் குறித்து, ஒரு புலனாய்வு அமைப்பு மூலம், விசாரிக்க வேண்டும் என, இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில், காவல் நிலையங்கள் அளவிலேயே, குற்றச் சம்பவங்கள் வேறாகவும், சட்டம் - ஒழுங்கு என்பது வேறாகவும் வரையறுக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது.எனவே, குற்றச் சம்பவங்களுக்காக, தனி புலனாய்வு அமைப்பு தேவையில்லை. அந்த யோசனையை, வன்மையாக எதிர்க்கிறேன். போலீசார் பணியிட மாற்றம் குறித்து, தமிழகத்தில் ஒரு போர்டு அமைத்து, அதன்படி மாற்றங்கள் நடக்கின்றன. இந்த நடைமுறையே போதுமானது.மாநில அரசை தவிர்த்து, நேரடியாக நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவில், புதிதாக ஒரு போலீஸ் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற, மொய்லி கமிட்டியின் பரிந்துரையை ஏற்க முடியாது; மாநில அரசிடம்தான் சட்டம் - ஒழுங்கு அதிகாரம் இருக்க வேண்டும்.


அர்த்தமில்லை:




"பரோலில் கைதிகளை விடுவிக்க, மாநில அரசுகளின் அனுமதியே அவசியம்' என்ற நடைமுறை தற்போது உள்ளது; அதுவே தொடர வேண்டும். தமிழக காவல் துறையில், 16.5 சதவீதம் பேர் பெண்கள்; அகில இந்திய அளவில், இது, 4.5 சதவீதம். தமிழக காவல் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும். அதைவிடுத்து, தேவையற்ற யோசனைகளை எல்லாம் கூறிக் கொண்டிருப்பதில், அர்த்தமே இல்லை.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


மூன்றே மூன்று முதல்வர்கள்:




சட்டம் - ஒழுங்கு மீதான நிர்வாக சீர்திருத்தம் பற்றி, 2008ல், தற்போதைய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், வீரப்ப மொய்லி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்தை, டில்லியில் நேற்று மத்திய அரசு கூட்டியிருந்தது.இந்தக் கூட்டத்தில் அசாம், காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரகண்ட் காங்கிரஸ் முதல்வர் விஜய் பகுகுணா ஆகிய மூன்று முதல்வர்கள் மட்டுமே பங்கேற்றனர். வேறு எந்த முதல்வர்களும் பங்கேற்கவில்லை. தமிழக அரசு சார்பில், அமைச்சர் முனுசாமியுடன், உள்துறை செயலர் ராஜகோபால், டி.ஜி.பி., ராமானுஜம், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.

- நமது டில்லி நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhakumar Viswanathan - Chennai,இந்தியா
18-ஏப்-201313:45:27 IST Report Abuse
Santhakumar Viswanathan இந்த தலையங்கத்தை மாற்றி ஜெ ஜெ விற்கு விஜயகாந்த் சாட்டை என்று தினமலர் எழுதினால் நன்றாக இருக்கும்.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
16-ஏப்-201318:50:27 IST Report Abuse
Srinath தேசவிரோத இந்திய யூனியன், காங்கிரஸ் மற்றும் வட இந்தியக் கூட்டத்தின் கொள்கைப்படி இந்தியா முழுவதையும் ஒரே மாநிலமாக்கிவிட்டு அந்த மாநிலத்தை முழுவதும் மத்திய அரசே ஆளும் முயற்சி மற்றும் நன்கே புரிகிறது. அதாவது மொழிவாறிச் சிறுபான்மையினர் வாழும் மக்கள் அனைவருமே இந்தியாவின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்க இருப்பது போலவும், இந்திய யூனியன், காங்கிரஸ் மற்றும் வட இந்தியக் கூட்டம் மட்டுமே நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக் காக்கும் தகுதி படைத்தவர்கள் என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அதன் படி எடுக்கப்படும் காங்கிரஸ் கட்சியின் முயற்சியே இது என்பது வரலாறு புரிந்த எவரும் ஒப்புக் கொள்வர். இதுபோன்ற முயற்சி சுதந்திரம் அடைந்தது முதல் நடந்து வந்தாலும் ராஜீவ் காலத்துக்குப் பின் அதிகரித்துவிட்டது. பாஜக ஆண்ட 5 ஆண்டுகள் மட்டுமே இது சற்று தணிந்து மாநில அரசாங்கங்கள் மதிக்கப்பட்டன. தமிழகத்திலும், தென்னகத்தில் என்னதான் அரசியல் மாற்றுக் கருத்து இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசவிரோத இந்திய யூனியன், காங்கிரஸ் மற்றும் வட இந்தியக் கூட்டத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
16-ஏப்-201312:53:30 IST Report Abuse
Kuwait Tamilan மற்ற மாநில முதல்வர்களும் இதே போல பேச ஆரம்பித்தால் இந்திய ஒருமைப்பாடு என்பது கேள்விகுறியாகிவிடும்.
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201309:13:17 IST Report Abuse
Srinivasan Kannaiya யார்தான் காட்டாற்று வெள்ளத்தை கட்டுபடுத்துவது. இப்பொழுதே odanpiruppakalin அட்டகாசம் dhangamudiyavillai
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
16-ஏப்-201308:26:48 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஒருவேளை தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழக அரசே முயற்சி மேற்கொண்டு விட கூடாது என்பதற்காக புதுசு புதுசா விதிகள் கொண்டுவாரங்க போல தெரியுது.
Rate this:
4 members
0 members
14 members
Share this comment
Pandian - Dallas,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201304:21:02 IST Report Abuse
Pandianமுதலில் இந்தியாவில் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற சொல்லுங்கள் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
16-ஏப்-201308:21:44 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இந்தியா என்பது பல மாநில அரசுகள் சேர்ந்தது தான்.. மாநில அரசினை அடக்கி ஆளும் முறையில் மத்திய அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்க படவேண்டியது.. ஜெயா சொல்வதில் தவறே இல்லை.. சரியான நிலைப்பாடு தான்.. மாநில அரசுகளின் உரிமைகளையும் உடைமைகளையும் காப்பதற்கு தான் மத்திய அரசு.. ஆனால் அதனை மத்திய அரசு தவறாக பயன்படுகிறது.. மாநில அரசினை அடக்கி ஆளுவதில் முயற்சி செய்கிறது. தேசிய கட்சிகளை ஒழித்தால் தான் இந்த அவலம் சீராகும்.. அதுவரை மாற்றவே முடியாது.. அமெரிக்காவின் சட்ட திட்டங்களை (constitution)தெரிந்தவர்கள் உணர்வார்கள். அங்கே இரட்டை குடியுரிமை கொடுக்கப்பட்டு மாநில அரசிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று.. இங்கே மாநில அரசினை மதிப்பதே இல்லை.. மத்தியில் உள்ள கட்சியும் , மாநிலத்தில் உள்ள கட்சியும் எதிர் கட்சிகள் என்றால் சொல்லவே தேவை எல்லை.. மக்கள் நலனை பார்க்கவே மாட்டார்கள் , அரசியல் நோக்கியே சிந்திப்பார்கள்.. மாற்றான் தாய் மனப்பான்மையில் தான் பார்கிறார்கள்.. பார்ப்பார்கள்... இதுவும் ஒருவித அடக்கு முறை தானே ??? இந்த காங்கிரஸ் என்று இந்தியாவில் இருந்து முழுவதுமாக அழியுமோ அன்று தான் இந்தியாவிற்கு விடுதலை..
Rate this:
40 members
1 members
44 members
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
16-ஏப்-201310:39:53 IST Report Abuse
NavaMayamகார்த்திக் சார் , அமெரிக்கா வெல்லாம் சரி ... அங்கு நடப்பதுபோல் எல்லாம் சரியாக நடந்தால் நீங்க சொல்லுவது சரிதான்... இப்போ உங்களை போல் மாணவர்களையே எடுத்து கொள்ளுங்களேன் ... அங்கு 12 வயதானவுடன் அங்குள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பணம் கட்ட பகுதி நேர வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் ... பெற்றோல்கள் அவர்கள் கல்லூரு படிப்புக்கு செலவு செய்ய மாட்டார்கள் ... 18 வயதாகி விட்டால் கலட்டி விட்டு விடுவார்கள் ... படுப்புக்கும் சலுகைகள் கிடையாது ... அரசாங்கம் கல்லூரி படிப்புக்கு மான்யம் கொடுப்பது இல்லை ...முதல்ல அதுமாதிரி இளைன்கர்கள் வாழ பழகுங்கள் .அதற்க்கு பிறகு பெருசுகளை குறை சொல்லுங்கள்.......
Rate this:
13 members
1 members
35 members
Share this comment
Krish - Madurai,இந்தியா
16-ஏப்-201310:58:40 IST Report Abuse
Krishசெந்தமிழ், மாற்றாந்தாய் மனப்பான்மை என்பது மாநிலக்கட்சிகளிடமும் உள்ளது. நம் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு ஒரு நீதி, மற்ற ஊர்களுக்கு ஒரு நீதி என்றுதானே இருக்கிறது. நம் அரசியல் கட்சிகள் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு சொல்லும் வார்த்தை "மாற்றாந்தாய் மனப்பான்மை" ஆகும். நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் நம் முதல்வர் இந்த வார்த்தையை பயன்படுத்தமாட்டார் என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா? ...
Rate this:
4 members
1 members
28 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201314:09:24 IST Report Abuse
தமிழ்வேல் திரு நவமயம் கூறுவது சரியானது..ஆனால் வேலைசெய்ய 16 வயதை தாண்ட வேண்டும். 18 வயது வரை அரசால் வரையறுக்கப்பட்ட குறைந்த சம்பளமே தரப்படும். படிக்கும் போது பகுதி வேலை செய்து கல்விக்கடன் பெற்று (அரசு உதவியில் அல்லது தனது வருவாயில்)வாடகை அறைகளில் வாழ்ந்து தங்களது திறமையை வளர்த்துக்கொள்பவர்கள்.. அதன்பின், வேலைக்கு சென்றதும் வீட்டிற்கோ, திருமணத் திர்க்கென்றோ பெற்றோர்களை எதிர்பார்ப்பதில்லை.....
Rate this:
4 members
1 members
23 members
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
16-ஏப்-201320:02:40 IST Report Abuse
Chenduraanஜெயா மாதிரி ஆட்கள் இருந்தால் நம் நிலைமையும் USSR நாடுகள் நிலைமை மாதிரி மாறுவதற்கு வெகு தூரத்தில் இல்லை. குறுகிய மனப்ப்பான்மை கொண்ட புத்தி மாற வேண்டும். அப்படின்னா கர்நாடக தண்ணீர் தரவேண்டும் என்று மட்டும் மத்திய அரசிடம் கேட்கவேண்டுமோ? கர்நாடக காரர்களும் ஜெயா சொன்ன அதே வார்த்தைகளை சொல்லுவார்கள். மத்திய அரசு கர்நாடக விசயத்தில் தலையிடக்கூடாது என்று....
Rate this:
2 members
1 members
6 members
Share this comment
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201320:08:37 IST Report Abuse
R.சுதாகர்நவமயம் / தமிழவேல்... நமது பெண்களையும் அமெரிக்காவில் வாழ்வது போல் வாழச் சொல்வீர்களா? வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சல்லாபிக்கும் பிள்ளைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? பெற்றோர்களின் கண்டிப்பும் ஆதரவும் இருப்பதால் தான் பிள்ளைகள் இறுதிவரை பெற்றோரை பாதுகாப்பதை கடமையாக கருதுகிறார்கள். எனவே கலாச்சாரத்தையும் அரசின் கடமைகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க இயலாது. அரசுக்கு எது நலம் பயக்குமோ அதனை மற்ற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை. வாழ்க்கை முறையை அமெரிக்கர்கள் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள முயல்கிறார்கள். "நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ..? " என்று விதண்டாவாதம் செய்வது, உறுதியான எதிர் கருத்து இல்லை என்பதையே காட்டும். தனிப்பட்ட விமர்சனம் என்பது, கூறுபவர் மேல் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்....
Rate this:
2 members
1 members
9 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
16-ஏப்-201308:12:32 IST Report Abuse
Samy Chinnathambi ஏம்மா நீங்க சொல்றது எல்லாம் சரி. எப்ப பாத்தாலும் கூடுதல் நிதி வேணும் கூடுதல் நிதி வேணும்னு தான் சொல்றீங்க. ஆனா இதுவரைக்கும் மத்திய அரசு கொடுத்த நிதி செலவழிக்க படாமல் உள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் எப்போ பார்த்தாலும் சொல்கிறார்கள். அதே போன்று டாஸ்மாக்கில் இருந்து வரும் மாத வருமானமான இருபதனாயிரம் கோடி எப்படி செலவழிக்க படுகிறது என்பதற்கான முகாந்திரமும் தெரியவில்லை...அரசு வழி கல்வி, சுகாத மேம்பாடு , நீர் மேலாண்மை, சாலை மேம்பாடு, மின் உற்பத்தி என்று எந்தவித மேம்பாடும் இல்லாமல் அக்கடான்னு கிடக்கு...போதாதுக்கு இப்போ தான் தாலிக்கு தங்கம் ரெண்டு ப்ரீயா அனவுன்சு பண்ணி இருக்கீங்க.....ஒன்னுமே புரியலையே....ஒரு வேலை உங்க அல்ல கைகளுக்கு புரியுமோ...
Rate this:
96 members
0 members
94 members
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
16-ஏப்-201309:31:51 IST Report Abuse
சாமிநல்ல கேள்வி சாமி சின்னத்தம்பி. இதர்க்கு செம்புகளிடம் பதில் எதிர்பார்கிரேன்......
Rate this:
7 members
0 members
64 members
Share this comment
Cancel
16-ஏப்-201306:21:37 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் காங்கிரஸ் ஆளும் அஸ்ஸாமில் அந்நிய அயோக்கிய வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரசே தூண்டிவிட்டு 1000 அப்பாவிப் பழங்குடியினரை கொன்று குவித்த அவலம் சமீபத்தில் நிகழ்ந்தது. ஆந்திராவில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு இயந்திரத்துக்கு பதிலாக மாவோயிஸ்டுகளின் ராஜ்ஜியம் .இந்த லட்சணத்தில் மாற்றுக் கட்சி ஆளும் மாநிலங்களை வேவு பார்க்க ஒரு சட்டம் ஜால்ரா கவர்னர்கள் இதுபோன்ற .எத்தனை சட்டம் போட்டாலும் சிறுபான்மையினர் என்ற போர்வையில் பயங்கரவாததிற்கு மறைமுக ஊக்கம் கொடுக்கும் காங்கிரசின் கெட்ட எண்ணம் நிறைவேறாது
Rate this:
6 members
0 members
20 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
16-ஏப்-201305:32:18 IST Report Abuse
NavaMayam தமிழ்நாட்டுக்குள்ள துணை ராணுவம் கூட வரகூடாது ... எவ்வாளவு சட்டம் ஒழுங்கு குறைட்ந்தாலும் , மாநில முதல்வரின் அனுமதியில்லாமல் மாதிய அரசு ராணுவம் மாநில எல்லையை தாண்ட கூடாது.... அனால் மத்திய அரசு அண்டை நாட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் , மாநில தலைவர்கள் கையை சொடுக்கியவுடன் , நமது ராணுவம் இலங்கையில் இறங்கி அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும்.....
Rate this:
60 members
2 members
37 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201303:48:19 IST Report Abuse
Baskaran Kasimani மேசை தட்டவும் புகழ் பாடவும் மத்திய அரசிடம் அனுமதி கோர வேண்டும் என்ற நிலை என்று வருமோ...
Rate this:
5 members
0 members
31 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.