My govt will complete its term, says Prime Minister | லோக்சபாவுக்கு முன்னதாக தேர்தல் வராது : பிரதமர் மன்மோகன்சிங் உறுதி| Dinamalar

லோக்சபாவுக்கு முன்னதாக தேர்தல் வராது : பிரதமர் மன்மோகன்சிங் உறுதி

Updated : ஏப் 17, 2013 | Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 லோக்சபாவுக்கு முன்னதாக தேர்தல் வராது :  பிரதமர் மன்மோகன்சிங் உறுதி,My govt will complete its term, says Prime Minister

புதுடில்லி :""லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் வராது; ஐந்தாண்டு பதவிக் காலத்தை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுமையாக முடிக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டில்லியில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமரிடம், "மூன்றாவது முறை, பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால், அதை ஏற்றுக் கொள்வீர்களா?' என, கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பிய, பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:மிகப்பெரிய நாட்டின், பிரதமர் பதவியை ஏற்கும் வாய்ப்பு கிடைத்ததை, பெரிய கவுரவமாக கருதுகிறேன். மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற, எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறேன். என்னுடைய தற்போதைய பதவிக்கலாம் முடிவடைய, சில காலம் உள்ளது.அதாவது, ஐந்தாண்டு பதவிக்காலத்தை, என் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முழுமையாக முடிக்கும். லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் வராது.

தேர்தலை சந்திக்கும் மனநிலையில் உள்ளீர்களா என்பது தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம், பதில் அளிக்க மாட்டேன்.பொதுமக்களுக்கு தகவல்களை தெரிவிப்பதில், மீடியாக்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. அதேநேரத்தில், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வது, பதட்டத்தை உருவாக்கும் வகையிலான செய்திகளை வெளியிடுவது போன்ற விவகாரங்களில், மீடியாக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஏப்-201321:48:49 IST Report Abuse
g.s,rajan Ruling excellent is needed than simply ruling and finishing their tenure and the ruling party must fulfill people's expectations.
Rate this:
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201320:40:13 IST Report Abuse
samy இவரை 5 வருடம் பூர்த்தி செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு பூர்த்தி செய்யும் இது ஒரு வரலாற்று பிழை ஆகி விடும். இது நம் வருங்கால சந்தையினருக்கு இவர்கள் செய்த மெகா ஊழல்களை எடுத்து சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும். ஏதோ திறமையாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
16-ஏப்-201320:29:17 IST Report Abuse
Anniyan Bala இந்த நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு நீங்கள் கனவு காண்பது தான் மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்க கூடாது மன்மோகன்சிங்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஏப்-201311:23:35 IST Report Abuse
Pugazh V மிகவும் சரி தான். எந்த அரசியல் கட்சியுமே இன்னமும் தேர்தலுக்கு தயாராகவில்லை. தேர்தல் குறித்து எந்தக் கட்சியிலும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களோ, கூட்டணிக் கட்சிகளுடன் சந்திப்பு பேச்சுவார்த்தைகளோ இன்னமும் துவங்கப்படவில்லை. சும்மா உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய வரும் தேர்தல் பணிகளுக்காக உருப்படியாக எதுவும் செய்வதாக தெரியவில்லை. இன்று ஆட்சி கவிழ்ந்தால் கூட இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, அடுத்த 6 மாதங்களுக்கு இதே ஆட்சி காபந்து அரசாக தொடர வேண்டும். தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையமும் இன்று வரை சொல்லவில்லை.
Rate this:
Share this comment
Cancel
raviraaj - mayiladuthurai,இந்தியா
16-ஏப்-201311:19:54 IST Report Abuse
raviraaj எனக்கு ஜோசியம் தெரியாது , என்னிடம் மந்திர கோல் இல்லை என்று ஊடங்கங்களின் கேள்விகளுக்கு பதிலாக தரும் நாமமும் "தஞ்சாவூர்" பிரதமர், இந்த விஷயத்தில் எந்த ஜோசியரின் உதவியை நாடினார் என்பது என் கேள்வி.....
Rate this:
Share this comment
Cancel
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
16-ஏப்-201311:11:57 IST Report Abuse
sasi, packottuvilai எனவே மெகா ஊழல்கள் செய்ய இன்னும் நேரம் உள்ளது கவலை படாதீர்கள் என் அன்பு காங்கிரஸ் தோழர்களே
Rate this:
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
16-ஏப்-201310:53:24 IST Report Abuse
Raja இது என்ன வானிலை அறிக்கை மாதிரி தெரியுதே... ராஜா கோமஸ்
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
16-ஏப்-201308:53:53 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இவரை எல்லாம் நான் பிரதமர் என்று சொல்ல வெட்கபடுகிறேன்... வேதனை படுகிறேன்..
Rate this:
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
16-ஏப்-201312:58:38 IST Report Abuse
Kuwait Tamilanசெந்தமிழ் இதற்கு நீங்கள் இந்தியாவுக்கும் நமது பிரதமருக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜனநாயக நாட்டில் தான் மட்டும் தான் நீங்கள் பிரதமரை இப்படி எல்லாம் திட்ட முடியும்....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஏப்-201321:18:35 IST Report Abuse
சு கனகராஜ் அவரை பற்றி கார்ட்டூன் போடாத பத்த்ரிக்கை ஒன்றை சொல்லுங்கள் செந்தமிழ் கார்த்திக் மட்டுமா விமர்சிக்கிறார் ?...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
16-ஏப்-201308:27:40 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி டெல்லி "அடுத்தவாரம் நாராயண சாமி" சொல்லிட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
16-ஏப்-201307:16:10 IST Report Abuse
Manidhan காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியை பிடிப்பதிலும் அதை காப்பதிலும் மட்டுமே குறியாக இருந்க்கின்றன. இரண்டாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை