தியாகி லகுமையா காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியாகி லகுமையா காலமானார்

Added : ஏப் 16, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தியாகி லகுமையா காலமானார்

சின்னாளபட்டி: திண்டுக்கல், சின்னாளபட்டியில் வசித்த, சுதந்திரப் போராட்ட தியாகி, எல்.கே.பி.லகுமையா, 100, காலமானார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பல முறை சிறை சென்ற இவர், சுதந்திரத்திற்கு பின், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூகப் பணியாற்றினார். கடந்த, 1947ல், டி.வி.எஸ். குடும்பத்தை சேர்ந்த சவுந்தரம், தமிழகத்தில், சமூக சேவை நிறுவனம் துவக்க விரும்பினார். அதற்காக, சின்னாளபட்டி அருகில், தனது 25 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார், லகுமையா. அதில் துவக்கப்பட்டதுதான் காந்திகிராம அறக்கட்டளை, காந்திகிராம பல்கலை, கஸ்தூரிபா மருத்துவமனை ஆகியவை. மகன்வழி பேரன் கணேஷ்பிரபு பராமரிப்பில் இருந்து வந்த அவர், சில மாதங்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நூறு வயதில், நேற்று காலமானார். அவரது இறுதி ஊர்வலம், இன்று மாலை, 4:00 மணிக்கு, சின்னாளபட்டியில் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X