கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வர தி.மு.க., ஆலோசனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (91)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaran - singpore  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201316:53:09 IST Report Abuse
kumaran நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
17-ஏப்-201316:42:46 IST Report Abuse
MJA Mayuram வாரம் ஒரு போராட்டம் அறிவித்தால் அல்லது ஒரு பிரச்சனையை கொண்டுவந்தால் பின்னே ஆயா எப்புடி ஹாயா ஹெலிகாப்டரை எடுத்துகிட்டு போயி கோடநாட்டுல ரெஸ்ட் எடுக்கிறது ...இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா ஹெலிகாப்டர் துரு புடிச்சும் ஆமாம் சொல்லிபுட்டேன்
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
17-ஏப்-201315:27:19 IST Report Abuse
karuvaayan அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் உறவும் இல்ல. எப்படி இவங்க இப்படில்லாம் யோசிக்கிரானுங்க. இலங்கை தமிழன் நமக்கு என்ன செஞ்சான் ..நம்ம தமிழ்நாட்டு மக்கள் தொகையே இவனுங்களால தான் ஏறிட்டு .இப்ப தான் சண்ட முடிஞ்சிட்டுல எல்லாம் மூட்ட முடிச்ச கட்டிட்டு ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புங்க ....
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
17-ஏப்-201315:14:09 IST Report Abuse
Rss ஈழ தமிழர்கள் நம்முடைய தொப்புள் கொடி உறவா?? எந்த கூமுட்ட சொன்னது ?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201314:07:39 IST Report Abuse
Yaro Oruvan நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2006-2011).. என்னது இலங்கையில சண்டையா? போரை நிறுத்தனுமா? 2 ஜி ஏலத்துல ராசாவையும் கனிமொழியையும் விசாரிக்க போறாவுளா??
Rate this:
Share this comment
Cancel
Kamal - Kumbakonam,இந்தியா
17-ஏப்-201312:45:05 IST Report Abuse
Kamal 1974 மற்றும் 1976-இல் இந்த தீவை பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கலைஞர் ஐயா தான் ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அம்மாதான் இப்போது இலங்கை கடற்படையின் அட்டூழியம் தாங்க முடியாமல் சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆகையால் இந்த விவகாரத்தில் கலைஞர் இப்போது பேசினால் அது கேலி யாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
17-ஏப்-201312:23:02 IST Report Abuse
T.C.MAHENDRAN டெசோ என்று ஒரு அமைப்பு ,அதற்கு ஒரு தலைவர் ,வெட்டி பேச்சு பேச ஒரு கூட்டம் . தமிழனை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த கருணா ?.
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
17-ஏப்-201312:07:16 IST Report Abuse
Karthi தலைவரே கோவம் வர்ற மாதரி காமெடி பண்ணாதீங்க
Rate this:
Share this comment
Cancel
thiyagarajan - covai,இந்தியா
17-ஏப்-201311:48:56 IST Report Abuse
thiyagarajan இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது இந்தியா முதல்முறையா அணுகுண்டு சோதனை செய்தது. அதனால் சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது சர்வதேச அளவில் பொருளாதார தடை வரும் ஆபத்து இருந்தது. அந்த நேரத்தில் un அமைப்பில் பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இருந்த இலங்கை நமக்கு உதவி செய்தது. அதற்குதான் கச்ச தீவை நாம் இழந்தோம். இதற்கு கருணாநிதியை குறை சொல்வது முட்டாள்தனம்.
Rate this:
Share this comment
Unmai Valavan - Choza Nadu,இந்தியா
18-ஏப்-201302:25:48 IST Report Abuse
Unmai Valavanஆட்சியில் இல்லாத போது ஏன் போரடுகிறார்கள்? முதல்வராக இருந்த பொது என்ன செய்தனர்?......
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஏப்-201310:45:02 IST Report Abuse
Pannadai Pandian கச்சத்தீவை மனமுவந்து தாரை வார்த்த திமுக அதை திரும்ப பெற தீர்மானம் சட்டசபையில் கொண்டுவர முடியாது. இது டெக்னிகல் பிராப்லம். அந்த சமயத்துல செஞ்ச ஊழலை எல்லாம் ஒத்துக்கறேன்னு சபாநாயகர்கிட்ட கை எழுத்து போட்டுக்கொடுத்தா, தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளிப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்