விலை வீழ்ச்சி எதிரொலி: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தங்கம் விலை சரிவடைந்து வருவதால், கடந்த நான்கு நாட்களில், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம், சென்னையில் மட்டும் விற்பனையாகி உள்ளது. நேற்றும், ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு அதிரடியாக, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கு விற்பனையானது.

சரியும் தங்கம்:


கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதல்முறையாக, 22 காரட் ஆபரண தங்கத்தின், ஒரு கிராம் 3,022 ரூபாய்க்கும், சவரன் 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. பின், தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ஒரு கிராம் 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரம் முதல், கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. கடந்த வாரம், 8ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 2,759 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,072 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று இதன் விலை கிராமுக்கு 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு 19,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு 318 ரூபாயும், சவரனுக்கு, 2,544 ரூபாயும் சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், 24 காரட், 10 கிராம் சொக்க தங்கத்தின் விலை, 3,405 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 29,510 ரூபாயிலிருந்து, 26,105 ரூபாயாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு, 6.40 ரூபாய் குறைந்து, 55.10 ரூபாயிலிருந்து, 48.70 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 6,040 ரூபாய் சரிவடைந்து, 51,535 ரூபாயிலிருந்து, 45,495 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு, 68 குறைந்து, 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கும் விற்பனையானது.இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு சவரன் தங்கம், 19,976 ரூபாய்க்கு விற்பனையானது.

25 சதவீதம் உயர்வு:


சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ - 27-28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.தங்கத்தின் விலை, தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதால், சென்னையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம் விற்பனையாகிஉள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, தினசரி விற்பனை, 25 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தங்க நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், ""அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு சில நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. இருப்பினும், கடந்த, 12 ஆண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாக உயர்த்தப் பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர் தாங்களாகவே விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இனி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிற்கு உயர வாய்ப்பில்லை'' என்றார்.

இப்போது தங்கம் வாங்கலாமா?


கடந்த, 12 ஆண்டுகளாக பெரும்பாலும் தளர்வு இல்லாமல் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிரடி வீழ்ச்சி கண்டு வருகிறது. இது, முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரண தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு சவரன் ஆபரண தங்கம், 24 ஆயிரம் ரூபாயை தாண்டி இருந்தது. இது, தற்போது, 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், சவரனுக்கு, 2,600 ரூபாய் விலை குறைந்து உள்ளது.

காரணம் என்ன?தங்கம் விலை வீழ்ச்சி, நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
*இப்போது தங்க நகைகளை வாங்கலாமா?
*தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதா?
*"கோல்டு இ.டி.எப்' போன்ற, தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய, இது சரியான தருணமா போன்ற, பல கேள்விகளுக்கான விடை, வரும் நாட்களில் உருவாகக் கூடிய சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்ளது.குறிப்பாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சைப்ரஸ் நாடு, கடனை அடைக்க, எந்த நேரத்திலும் தங்கத்தை விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நாடு, 14 டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. இதை விற்பனை செய்தால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவடையும்.சைப்ரஸ் நாட்டை பின்பற்றி, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள, ஸ்லோவீனியா, ஹங்கெரி, போர்ச்”கல் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும், தங்கத்தை விற்பனை செய்யக்கூடும் என்ற, வதந்திகளும் கிளம்பி உள்ளன.சைப்ரஸிடம், 14 டன் தங்கம் தான் உள்ளது, ஆனால், இத்தாலியிடம் மட்டும், 2,452 டன் தங்கம் உள்ளது. மற்ற நாடுகளிடம் நூற்றுக்கணக்கான டன் தங்கம் இருப்பு உள்ளது.இப்படி நிதி நெருக்கடியில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ துவங்கினால், தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி அடையும் என்ற பீதியில், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கள் தங்க முதலீடுகளை விற்க துவங்கி உள்ளனர்.

இந்த நாடுகள், சிறிதளவு தங்கத்தை விற்பனை செய்தால் கூட, விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி காண வாய்ப்பு உள்ளது என, கூறப்படுகிறது.மேலும், அமெரிக்க பொருளாதாரம் சீரடைந்து வருவதாக கருதப்படுவதால், தங்க முதலீட்டாளர்கள் பலர், டாலருக்கு தங்கள் முதலீடுகளை திருப்பி விடுவதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், சந்தையின் மறுபக்கத்தில், உலகளவில் தங்க நுகர்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது சீனா. நேற்று முன்தினம் வெளியான சீன பொருளாதார புள்ளிவிவரங்களின் படி, எதிர்பார்த்த அளவை விட சீனாவின் வளர்ச்சி குறைந்து இருந்ததால், அந்த நாட்டில் தங்கத்தின் நுகர்வு குறையுமோ என்ற, வதந்தியும் முதலீட்டாளர்களை பீதியடைய செய்தது.

லாபம் கிடைக்குமா?


ஆனால், ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை விற்கும் சூழல் உருவாகுமா என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் பொருளாதார உதவி திட்ட சரத்துகளில் தங்கம் விற்பனை ஒரு முக்கிய சரத்தாக இருந்தாலும், இதை பற்றி சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மவுனமாகவே உள்ளன. இதனால், இந்த விலை வீழ்ச்சி தொடருவது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.தங்க நகைகளை பொறுத்தவரை, தற்போது வாங்குவது லாபகரமானது என்றே கூறலாம். திருமண காலம் நடந்து கொண்டு இருப்பதாலும், தங்கம் வாங்க சிறப்பு நாளாக கருதப்படும் அட்சய திருதியை, மே 13ம் தேதி வரவுள்ளதாலும், தங்க நகை வாங்குவது அதிகரிக்கும் என்பதால், விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.முதலீடுகளை பொருத்தவரை, முன்பேர சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தருணம் இதுவல்ல. தங்கம் விலையின் திடீர் சரிவால், தரகு நிறுவனங்கள், இழப்பை குறைக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களின் ஒப்பந்தங்களை உடனடியாக முடித்து, அதாவது தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன.

இதுகுறித்து, பங்கு சந்தை ஆய்வு மற்றும் தரகு சேவைகளை அளித்து வரும், எக்ட்ரா நிறுவனத்தின் தலைவர், டி.ஆர். அருள்ராஜன் கூறியதாவது:உள்நாட்டில், எம்.சி.எக்ஸ் முன்பேர சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன், 10 கிராம் தங்கத்தின் விலை 28,900 ரூபாயாக இருந்தது. இது, 25,700 ரூபாயாக குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து, 25 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக சரிந்தால், 22,500 - 23,000 ரூபாய் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. அதனால், முதலீட்டாளர்கள், தற்போது, ஓரளவு விலை வீழ்ச்சி காணும்போது, பகுதி பகுதியாக முதலீடு செய்வது சிறந்தது. அதே சமயம் வர்த்தகர்கள், தற்போதுள்ள நிலையில், சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.முன்பேர வர்த்தகத்தில் தங்கத்தை உடனடியாக விற்பது சிறந்தது. விலை குறைந்துள்ளதென்று, மேலும் தங்கத்தை வாங்கி, இழப்பை ஈடு செய்ய நினைத்தால், அது பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சர்வதேச அளவில், சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தங்கம் கருதப்பட்ட நிலை மாறி வந்தாலும், நீண்ட காலம் தங்கத்தை வைத்துக்கொள்ளும் நோக்கில் வாங்கும் நுகர்வோருக்கு இது நல்ல நேரம்.

விலை வீழ்ச்சி ஏன்?


சென்னை தங்க விற்பனையாளர்கள் நலச் சங்க பொருளாளர், எம்.குமார் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை, தங்கம் விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில், எம்.சி.எக்ஸ் போன்ற முன்பேர சந்தைகளில், வர்த்தகர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச முன்பேர சந்தைகளில் தங்கம் விலை வீழ்ச்சி கண்டதால், உள்நாட்டு வர்த்தகர்கள், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர்.இழப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் தங்கத்தை விற்பனை செய்வதால், அதன் விலை குறைந்துள்ளது.மேலும், பரஸ்பர நிதி நிறுவனங்களின், "கோல்டு இ.டி.எப்' திட்டங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு வெளியேறி வருகிறது. இதன் காரணமாகவும், தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஏப்-201319:58:08 IST Report Abuse
Pasupathi Subbian சேச்சே இந்த மக்களை திருத்தவே முடியாது. அப்படி என்னதான் இருக்கு இந்த தங்கத்துல . வாங்கி வாங்கி போட்டு அழகு பாக்குறாங்க. ( ஆமா இன்னும் எறங்குமா விலை. என்ன கொஞ்சம், வீட்டு அம்மணிக்கு வாங்கிபோட்டு அழகு பாக்கலாம் )
Rate this:
Share this comment
Cancel
Sathesh Pandian - Chennai,இந்தியா
17-ஏப்-201313:33:16 IST Report Abuse
Sathesh Pandian ஒரு பவுன் தங்கம் பத்தாயிரத்திற்கு வருவது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Ragavi As - madurai vandiyur,இந்தியா
17-ஏப்-201313:24:33 IST Report Abuse
Ragavi As இரண்டு நாட்களாக மக்களிடையே தங்கம் சிக்கி தவிக்கிறாள் தொடரட்டும் தங்கம் விலை வீழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Adaikkan Suresh - zhuhai,சீனா
17-ஏப்-201312:54:31 IST Report Abuse
Adaikkan Suresh நடுத்தர மக்களுக்கு நல்ல நேரம்.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
17-ஏப்-201312:41:57 IST Report Abuse
amukkusaamy எதிர்வரும் மே மாதம் தங்கம் மிக குறைந்த விலைக்கு வந்து மீண்டும் விலை ஏறும் என்று உலக தங்க வர்த்தக வல்லுனர்கள் கருத்தை வலைதளத்தில் படித்தேன். கடந்த 30 வருடங்களில் இல்லாத விலை வீழ்ச்சியினை - சுமார் 9.5% - தொட்டிருக்கிறது. சிரியா தனது நாட்டு தங்கத்தை சந்தையில் விற்பதாகவும் அதானால் இந்த விலை வீழ்ச்சி என்றும் சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Srivatsan Seetharaman - Doha,கத்தார்
19-ஏப்-201305:26:08 IST Report Abuse
Srivatsan Seetharamanஅது சிரியா அல்ல ச்ய்ப்ருஸ் நாடு ...
Rate this:
Share this comment
Cancel
ahamed - nellai,இந்தியா
17-ஏப்-201310:13:35 IST Report Abuse
ahamed ஏழை மக்களும் கொஞ்சம் தங்கம் வாங்கட்டும்............... இன்னும் விலை குறையட்டும்.......
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
17-ஏப்-201309:38:59 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பாமரனுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கம் விலை குறைத்து வருவது அவர்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கும். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்களின் வயிற்றில் புளியையும்..
Rate this:
Share this comment
Cancel
Parivel - Blore,இந்தியா
17-ஏப்-201309:23:15 IST Report Abuse
Parivel தங்கம் இறக்குமதி பெட்ரோல் இக்கு அடுத்தபடியான இடத்தில உள்ளது. தங்கம் வாங்குபவர்கள், பெட்ரோலுக்கும் அதை சார்ந்த பொருள்களுக்கும் அதிக விலை கொடுக்க தயாராக இருக்கவேண்டும். தங்கம் வாங்குவது இப்போதைக்கு பொருளதார பயங்கரவாதம் நமது நாட்டிற்கு. நம்முடைய நிதி அமைசர் ஏற்கெனெவே அமெரிக்காவில் இருக்கிறார் பிச்சை தட்டோடு. படித்தவர்கள் மற்றும் பொருளாதரம் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கு அறிவுரை குறவேண்டும். இல்லையெனில் இந்தியா அடுத்த சைப்ருஸ் தான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201308:44:35 IST Report Abuse
Srinivasan Kannaiya அவசரபடதீர்கள் இன்னும் விலை kuraiyalam
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
17-ஏப்-201308:42:29 IST Report Abuse
PRAKASH எத்தன பேரு வீட்டுல ஹஸ்பண்டு பர்சு காலி ஆச்சோ ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்