Punishment for bribe servent by madurai collector | லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்'

Added : ஏப் 17, 2013 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை :  விவசாயிகளுக்கு அடித்தது "லக்'

மதுரை : மதுரையில், விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார்.

மதுரை, அண்டமான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, நவநீத கிருஷ்ணன். வயலில், சொட்டு நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக, "சிறு விவசாயி' என்ற சான்றிதழ் பெற, மனைவி ருக்மணி பெயரில், தாலுகா அலுவலகத்தில், மார்ச் 11ல் விண்ணப்பித்தார்.அங்குள்ள ஊழியர் ஒருவர், தன்னை, "கவனிக்கும்படி' கூறியதால், அவரிடம் நவநீதகிருஷ்ணன், 200 ரூபாய் கொடுத்தார். அந்த ஊழியரோ, 5,000 ரூபாய் தந்தால், உடனே சான்றிதழ் தருவதாக கூறினார். தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என, நவநீத கிருஷ்ணன் கூறியதால், சான்றிதழ் கிடைப்பது தாமதமானது.இதுகுறித்து நவநீதகிருஷ்ணன், கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தார். நேற்று முன்தினம், இருவரையும் வரவழைத்த கலெக்டர், விசாரணை நடத்தினார்."நவநீத கிருஷ்ணனுக்கு உடனே சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள சிறு, குறு விவசாயிகள் எத்தனை பேர் என கணக்கெடுத்து, விண்ணப்பித்தோர், விண்ணப்பிக்காதோர் என, அத்தனை பேருக்கும், காசு வாங்காமல், ஏப்., 30க்குள் சான்றிதழ்களை கொடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, லஞ்சம் கேட்ட ஊழியருக்கு உத்தரவிட்டார்.தண்டனையை கேட்ட ஊழியர், சற்றே மலைத்தாலும், "தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என, உடனே செயலில் இறங்கி விட்டார்.

நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:நான் கொடுத்த தொகையை வாங்காமல், பேரம் பேசி இழுத்தடித்ததால், என்ன செய்வதென தெரியவில்லை. விஜிலன்ஸ் போலீசாரிடம் தெரிவிக்கவும் மனம் வரவில்லை. வேறு வழியின்றி, கலெக்டரிடம் சென்றேன். அவரது தீர்ப்பால் எல்லா விவசாயிகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Shenbaga Raman - virudhunagar,இந்தியா
22-ஏப்-201315:45:17 IST Report Abuse
G.Shenbaga Raman கிரேட் கலெக்டர் சார்....
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
20-ஏப்-201304:38:44 IST Report Abuse
Skv கடமைய செய்யக்கூட இவங்களுக்கு மக்கள் துட்டு அழனும்னதும் கோவமே வரது . .இவிக வயலில் உழச்சாத்தான் நமக்கு சோறு கிசான்கள் எல்லாம் என்ன கொடீச்வராலா
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201300:21:06 IST Report Abuse
Matt P ஒழுங்காக பணி செய்யாதவர் பாதிக்கப்பட்ட ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு பணியை ஒழுங்காக செய்யவைக்கபட்டிருகிறார்....
Rate this:
Share this comment
Cancel
H I R A N Y A N - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201317:01:17 IST Report Abuse
H I R A N Y A N தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்று மற்றவர்களுக்கு உணர்த்த இவருக்கு சிறியதாகவாவது ஒரு தண்டனை கொடுத்திருக்கலாம். just like that தப்பி சென்றுவிட்டார். தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
17-ஏப்-201316:55:16 IST Report Abuse
Tamilar Neethi நல்ல தூங்கிபுட்டு சில நேரம் மாவட்ட ஆட்சியர்கள் இப்படி பணிகாலத்தில் ஏதாவது செய்து சாதிக்க முடிகிறது. தினம் ஒரு அரை மணி இப்படி லஞ்சம் ஒழிக்க நேரம் ஒதுக்கி நல்லது செய்தால் மதுரை இல்லை தேசம் வளரும். IAS படித்து சம்பளம் வாங்கி, வரிப்பணம் கொடுப்போரை காத்தல் அவசியம். அதுவும் உழுதுண்டு வாழ்வோர் . கொஞ்சம் முளிங்க . முழுங்குவோர் இல்லாமல் போவர் .
Rate this:
Share this comment
Cancel
Bhuvaneswari - Chennai,இந்தியா
17-ஏப்-201316:43:16 IST Report Abuse
Bhuvaneswari கிரேட் கலெக்டர் சார்....
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
17-ஏப்-201316:32:39 IST Report Abuse
vandu murugan லஞ்சம் தலை விரித்தும் ஆடுகிறது. தலை கால் புரியாமலும் ஆடுகிறது
Rate this:
Share this comment
Cancel
Mani Kandan - Salem,இந்தியா
17-ஏப்-201315:48:32 IST Report Abuse
Mani Kandan hatsoff to esteemed & respectful ansul. many poeple will u as role model. jai hinth
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
17-ஏப்-201315:43:41 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar நூதன தண்டனை சரியானவை அல்ல..,நிரந்திர பணி நீக்கம் செய்வது தான் சரியானவை
Rate this:
Share this comment
Cancel
Vijay - bangalore,இந்தியா
17-ஏப்-201315:35:34 IST Report Abuse
Vijay நல்ல செயல். லஞ்சம் வாங்குபவனை சஸ்பெண்ட் செய்தால் அவன் போய் வீட்டில் உட்கார்வான். மற்றவர்களுக்கு வேலை சுமை அதிகம். இப்படி செய்தல் பொது மக்களுக்கும் நன்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை